TA/Prabhupada 0149 - கிருஷ்ண பக்தி இயக்கம் என்றால் பரம பிதாவை பற்றி அறிந்துக் கொள்வதாகும்

Revision as of 18:56, 7 July 2016 by Visnu Murti (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0149 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Tenth Anniversary Address -- Washington, D.C., July 6, 1976

ஆகையால் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்றால் பரம பிதாவை பற்றி அறிந்துக் கொள்வதாகும். பரம பிதா. அதுதான் இந்த இயக்கத்தின் சுருக்கமும் கருப்பொருளும் ஆகும். நம் தந்தை யார் என்று நமக்கு தெரியவில்லை என்றால், அது ஒரு நல்ல நிலைமையல்ல. குறைந்தது, இந்தியாவில், இது ஒரு வழக்கம், யாராவது ஒருவரால் அவருடைய தந்தை பெயர் சொல்ல முடியவில்லை என்றால், அவர் அதிகமாக மதிக்கப்படமாட்டார். மேலும் நீதிமன்றத்தில் இது ஒரு முறையான செயலாகும் அதாவது நீங்கள் உங்கள் பெயரை எழுதி, உங்கள் தந்தையின் பெயரையும் கண்டிப்பாக எழுதவேண்டும். அதுதான் இந்தியன், வேதமுறை, மேலும் பெயரும், அவருடைய சொந்த பெயர், தந்தையின் பெயர் அவருடைய கிராமத்தின் பெயரும். இந்த மூன்றும் ஒருங்கிணைந்தது. நான் நினைக்கிறேன் இந்த முறை மற்ற நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது, ஆனால் இந்தியாவில், இதுதான் செயல்முறை. முதல் பெயர் அவர் சொந்த பெயர், இரண்டாவது பெயர் அவர் தந்தையின் பெயர், மேலும் மூன்றாவது பெயர் அவர் பிறந்த கிராமமோ அல்லது நாட்டின் பெயர். இதுதான் செயல்முறை. ஆகையால் தந்தையின்.., நமக்கு தந்தையை தெரிந்திருக்க வேண்டும். அதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம். நாம் நம் தந்தையை மறந்திருக்கும் நிலையில் இருந்தால், அது ஒரு நல்ல நிலைப்பாடு அல்ல. மேலும் எப்படிப்பட்ட தந்தை? பரம் ப்ரஹ்ம பரம் தாம (ப.கீ. 10.12). பெரும் செல்வந்தர். குழந்தைகளுக்கு உணவளிக்க இயலாத ஏழ்மையான தந்தையல்ல. அது அந்த தந்தையல்ல. ஏகோ யோ பஹுநாம் விடதாஹ்தி காமான். அந்த தந்தை பெரும் செல்வந்தர், அவர் தனியாகவே லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ஜீவராசிகளுக்கு உணவளிக்கிறார். ஆப்ரிக்காவில் அங்கே நூற்றுக்கணக்கான மேலும் லட்சக்கணக்கான யானைகள் உள்ளன. அவர் அவற்றிற்கு உணவளிக்கிறார். மேலும் இந்த அறையினுள் அங்கே ஒரு துவாரம் இருக்கிறது, அதனுள் லட்சக்கணக்கான எறும்புகள் இருக்கும். அவர் அவைகளுக்கும் உணவளிக்கிறார். ஏகோ யோ பஹுநாம் விடதாஹ்தி காமான். நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதநாணாம் (கத. உப 2.2.13). இவை வேதத்தின் தகவல். ஆகையால் மனித வாழ்க்கை, தந்தை யார் என்பதை புரிந்துக் கொள்ள வழிவகை வகிப்பதோடு, அவருடைய விதி என்ன, பகவான் யார், அவருடனான நம்முடைய உறவு என்ன. இதுதான் வேதாந்த. வேதாந்த என்றால் அர்த்தமற்ற சொற்களை பேசுவதுடன் மேலும் தந்தையுடன் எந்த உறவும் இல்லாமல் இருப்பது என்று பொருள்படாது. ஸ்ரம ஏவ ஹி கேவலம். உங்கள் தந்தை யார் என்று உங்களுக்கு தெரியாவிட்டால்..., தர்ம: ஸ்வனுஷ்தித: பும்ஸாம் விஷ்வக்ஸேன- கதாஸுய: நோத்பாதயேத் யதி ரதிம் ஸ்ரமஏவ ஹி கேவலம் (ஸ்ரீ. பா 1.2.8).

இது தேவையற்றது. மேலும் கிருஷ்ணர் கூறுகிறார், வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ: (ப.கீ. 15.15). ஆகையால் நீங்கள் வேதாந்தியாகுங்கள், அது மிகவும் நன்றாக இருக்கும். பூரணமான உண்மை என்பது அனைத்தும் யாரிடமிருந்து வருகின்றதோ அவரே என்று வேதாந்தத்தின் ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ளது. அதாதோ ப்ரம ஜிஞாஸா. இதுதான் ஆரம்பம். மனித வாழ்க்கை பூரணமான உண்மையை புரிந்துக் கொள்வதற்காக என்று பொருள்படும், ஜிஞாஸா. பூரணம் என்றால் என்ன என்று ஒருவர் விசாரிக்க வேண்டும். அதுதான் மனித வாழ்க்கை, பூரண உண்மையை கண்டுபிடிப்பது. ஆகையால் அடுத்த சூத்ர உடனடியாக கூறுவார் அதாவது அனைத்திற்கும் மூலமானவரே பூரண உண்மையாவார். மேலும் அந்த அனைத்தும் என்பது என்ன? நாம் கண்டது இரண்டு விஷயங்கள்: உயிருட்டுதல் மேலும் உயிரில்லாதது. நடைமுறை அனுபவம். சில உயிருடனும் இன்னும் சில உயிரில்லாதவைகளாகவும் இருக்கும். இரண்டு விஷயங்கள். இப்பொழுது இந்த வகைகளை நாம் விரிவுப்படுத்தலாம். அது மற்றொரு விஷயம். ஆனால் இரண்டு விஷயங்கள் அங்கு உள்ளன. ஆகையால் இந்த இரண்டு விஷயங்களுக்கும், நாம் பார்க்கிறோம், உயிருடனும், உயிரில்லாதவர்களுக்கும் மேல் ஒரு கட்டுப்பாட்டாளர் இருக்கிறார். ஆகையால் நாம் இப்பொழுது விசாரிக்க வேண்டும், உயிருடனும், உயிரில்லாததுமான இந்த இரண்டு மூலப் பொருளின் நிலைப்பாடு என்ன? இதன் நிலைப்பாடு ஸ்ரீமத்-பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது, ஜன்மாதி அஸ்ய யதோ 'ந்வயாத் இதரதஸ் சார்தேஷூ அபிஜ்ஞ: (ஸ்ரீ. பா 1.1.1). இதுதான் விளக்கவுரை. அனைத்திற்கும் ஆதி மூலமான பொருள் அபிஜ்ஞ: . எவ்வாறு? 'ந்வயாத் இதரதஸ் சார்தேஷூ. நான் எதையாவது உருவாக்கியிருந்தால், எனக்கு அனைத்தும், எல்லா விவரங்களும் தெரிந்திருக்கும். 'ந்வயாத், நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ, எனக்கு தெரிந்திருக்கும். நான் எதையாவது உருவாக்கியிருந்தால்...., ஒருவேளை எனக்கு சில சிறப்பான சமையல்கள் தெரிந்திருந்தால், பிறகு அதை எவ்வாறு செய்வது என்கின்ற அனைத்து விவரங்களும் எனக்கு தெரியும். அதுதான் அதன் மூலம். ஆகையால் அந்த மூலம்தான் கிருஷ்ணர். கிருஷ்ணர் கூறுகிறார், வேதாஹம் ஸமதீதானி: (ப.கீ. 7.26). எனக்கு அனைத்தும் தெரியும் - கடந்தகாலம், நிகழ்காலம் எதிர்காலமும்." மத்த: ஸர்வம் பரவர்ததே. அஹமாதிர்ஹி தேவானாம் (ப.கீ. 10.2). படைத்தலின் தத்துவதிற்கு ஏற்ப.... தத்துவமல்ல, உண்மை. ப்ரமா, விஷ்ணு, மஹேஷ்வர. ஆகையால் இவர்கள்தான் அடிப்படை உண்மையான தேவதா. ஆக விஷ்ணு மூலவர். அஹமாதிர்ஹி தேவானாம். படைத்தல், முதல் மஹா-விஷ்ணு, பிறகு மஹா-விஷ்னுவிலிருந்து கர்போதகஸாயீ விஷ்ணு. கர்போதகஸாயீ விஷ்ணுவிலிருந்து கிஷிரோதக்ஸாயீ விஷ்ணு, விஷ்ணுவின் விரிவாக்கம், மேலும் அவரிடமிருந்து ப்ரமா தோன்றுகிறார். ப்ரமா கர்போதகஸாயீ விஷ்ணுவின் உடலில் தாமரை பூவில் பிறப்பெடுத்தார், பிறகு அவர் ருத்ராவை பிரசவித்தார். இதுதான் படைப்பின் விளக்கவுரை. ஆகையால் கிருஷ்ணர் கூறுகிறார் அஹமாதிர்ஹி தேவானாம். அவரும் விஷ்ணுவின் மூலமானவர், சாஸ்திரத்தில் இருந்து நாம் கூறுவது, க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் (ஸ்ரீ. பா. 1.3.28). மூலமான முழுமுதற் கடவுள் கிருஷ்ணர் ஆவார். மேலும் கிருஷ்ணரின் முதல் விஸ்தரிப்பு பலதேவ். பிறகு அவரிடமிருந்து சதுர்-வியூஹ, வாசுதேவ, சண்கரஸண, அணிருத்த இவ்வாறாக. பிறகு நாராயண. நாராயணவிலிருந்து, இரண்டாவது சதுர்-வியூஹ, இரண்டாவது சதுர்-வியூஹவிலிருந்து சண்கரஸண, மஹா-விஷ்ணு. இவ்வழியாக நீங்கள் சாஸ்திரத்தை கற்க வேண்டும். நீங்கள் அறிந்துக் கொள்வீர்கள் அதாவது உண்மையிலேயே, சாஸ்திரத்தில் கூறியிருப்பது போல், க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம். மேலும் கிருஷ்ணர் கூறுகிறார், அஹமாதிர்ஹி தேவானாம் (ப.கீ. 10.2). அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே (ப.கீ. 10.8). மேலும் அர்ஜுன ஏற்றுக் கொள்கிறார், பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவான் (ப.கீ. 10.12). ஆகையால் நாம் சாஸ்திரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். சாஸ்திர-சக்ஸுஸாத்: நீங்கள் சாஸ்திரத்தின் மூலம் பார்க்க வேண்டும். மேலும் நீங்கள் சாஸ்திரத்தை கற்றால், பிறகு நீங்கள் அறிவீர்கள் க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் என்று. ஆகையால் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்னவென்றால், மனித சமூகத்திற்கு நித்தியமான முழுமுதற் கடவுளை பற்றி எடுத்துரைப்பது. இதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம். ஆகையால் நாங்கள் இந்த இயக்கத்தை 1966-ல் நிறுவினோம், பதிவு செய்தோம். நம் ரூபானுக பிரபு ஏற்கனவே விவரித்துவிட்டார். ஆகையால் இந்த இயக்கத்தை உக்கிரமாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதே மாதிரி, கிருஷ்ணர், வரலாற்றினுல் ஆரம்பித்தார், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன். அவர் இந்த இயக்கத்தை அர்ஜுனை தன் சீடராக கொண்டு தொடங்கினார். பிறகு சைதன்ய மஹாபிரபு, ஐநூறு வருடங்களுக்கு முன், அவர் மீண்டும் அதே இயக்கத்திற்கு உயிருட்டினார். அவரே கிருஷ்ணராவார். மேலும் இது தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இது உற்பத்தி செய்யப்பட்ட இயக்கம் என்று எண்ணாதீர்கள். இல்லை. இது அதிகாரபூர்வமான இயக்கம், மேலும் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது. மஹாஜனோ யேனா கதஹச பந்தா: (ஸி.ஸி.மத்திய 17.186). சாஸ்திரத்தில் மஹாஜனஸ குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். .ஆகையால் கிருஷ்ண பக்தி இயக்கத்தில் நிலையாக இருந்து கிருஷ்ணரை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். நம்மிடம் பல இலக்கியங்கள், அதிகாரப்பூர்வமான இலக்கியங்கள் உள்ளன. உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமானதாக்குங்கள். மிக்க நன்றி.