TA/Prabhupada 0151 - நாம் ஆச்சாரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்

Revision as of 05:41, 21 September 2016 by Modestas (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0151 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 7.6.1 -- Madras, January 2, 1976

ஆகையால் நாம் பலவிதமான திட்டங்களை தீட்டுகிறோம் ஆனால் அது வெற்றி அடையாது. அவ்வளவிற்கு நேற்று இரவு நான் விவரித்தேன், அதாவது நாம் சுயேட்சியாக சிந்திக்கிறோம் மேலும் நாம் சந்தோஷம் அடைவதற்காக பலவிதமான காரியங்களை சுயேட்சியாக திட்டமிடுகிறோம். இது சாத்தியமில்லை. அது சாத்தியமில்லை. அது மாயாவின் மாயை விளையாட்டு. தைவி ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா. நீங்கள் அத்துமீற முடியாது. பிறகு இறுதியான தீர்வு என்ன?மாமேவ யே ப்ரபத்யன்தே மாயாமேதாம் தரந்தி தே " (BG 7.14). நாம் கிருஷ்ணரிடம் சரணடைந்தால், பிறகு நம்முடைய மூலமான நிலை உயிரூட்டப்படும். அதாவது கிருஷ்ணர் உணர்வு என்றால் பல காரியங்களை மனத்தில் வைத்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக,அவை அனைத்தும் மாசுப்படுத்தப்பட்ட உணர்வு. உண்மையாக, நமக்கு மனசாட்சி இருக்கிறது, அது உண்மை, ஆனால் நம் மனசாட்சி மாசுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் நாம் மனத்தை தூய்மைப்படுத்த வேண்டும். மனத்தை தூய்மைப்படுத்துவது என்றால் பக்தி என்று பொருள்படும். பக்தி, நாரத பண்சராத்ரவில் கொடுக்கப்பட்ட வரையறை.... ரூபகோஸ்வாமீ கூறுகிறார்,

anyābhilāṣitā-śūnyaṁ
jñāna-karmādy-anāvṛtam
ānukūlyena kṛṣṇānu-
śīlanaṁ bhaktir uttamā
(Brs. 1.1.11)

இது முதல்தர பக்தி அதாவது அங்கே வேறு நோக்கம் இல்லை. அன்யாபிலா, ஏனென்றால் இங்கு பௌதிக உலகில், ஜட இயற்கையின் கட்டுப்பாட்டில்ப்ரக்ருதே க்ரியமாணானி குணை: கர்மாணிஸர்வஷ அஹங்கார வீமூடாத்மா கர்த்தாஹமிதிமன்யதே (BG 3.27). நாம் ப்ரக்ருதியின் முழு கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றோம், ஜட இயற்கை. ஆனால் நாம் அறியாமையில் இருப்பதால், நம் நிலையை மறந்துவிட்டோம், ஆகையால் அஹங்கார, பொய்யான அஹங்கார. இது பொய்யான அஹங்கார: "நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்," "நான் பிராமண," "நான் ஷத்திரிய." இது பொய்யான அஹங்கார. ஆகையினால் நாரத பண்சராத்ரவில் கூறுகிறது சர்வோபாதி "வினிர்முக்தம்-" (CC Madhya 19.170). ஆகையால் இந்த பதவிபெயர் என்னும் தொற்று நோயிலிருந்து விலகி, ஒருவர் சுதந்திரமாக இருக்க வேண்டும்,"நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்," "நான் இது," "நான் அது."சர்வோபாதி-வினிர்முக்தம் தத்-பரத்வேன நிர்மலம். அவர் தூய்மையானதும், நிர்மலம், எந்த பதவிப்பெயரும் இல்லாமல், அதாவது "நான் கிருஷ்ணரின் அங்க உறுப்பு."ஆஹம் ப்ரமாஸ்மி.

இது அஹம் ப்ரமாஸ்மி. கிருஷ்ணர் பரப்பிரமன். அவர் ஸ்ரீமத் பாகவத்-கீதையில் வர்ணிக்கப்பட்டுள்ளார். அர்ஜுன..."உவாச பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவான் புருஷம் சாஸ்வதம் ஆத்யம்" (BG 10.12). அர்ஜுன் அங்கீகரித்தார் மேலும் கூறினார், "தாங்கள் அனைத்து அதிகாரிகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளீர்கள்." அந்த அதிகாரிகளில் ப்ரலாத மஹாராஜாவும் ஒருவராவார். நான் அதிகாரிகளைப் பற்றி விவரித்துள்ளேன். ப்ரமா ஓர் அதிகாரி, பகவான் சிவா ஓர் அதிகாரி, மேலும் கபில ஓர் அதிகாரி, குமார, நான்கு குமாரர்கள், அவர்களும் அதிகாரிகள், மேலும் மனு ஓர் அதிகாரி. அதேபோல், ப்ரலாத மஹாராஜாவும் ஓர் அதிகாரி. ஜனக மஹாராஜா ஓர் அதிகாரி. பன்னிரெண்டு அதிகாரிகள். ஆகையால் அர்ஜுன் உறுதிப்படுத்தினார் அதாவது "தாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள், அதாவது தாங்கள்தான் முழுமுதற் கடவுள் என்று,"மத்த பரதரம் நான்யத்" (BG 7.7)"மேலும் பகவத்-கீதையின் சம்பாஷணையிலிருந்து, நானும் தங்களை பர-ப்ரமனாக ஏற்றுக் கொள்கிறேன்.மேலும் அது மட்டுமல்லாமல், அனைத்து அதிகாரிகளும், அவர்களும் தங்களை ஏற்றுக் கொண்டார்கள்." சமீபத்தில், நம் காலத்தில், ராமானுஜாசாரியர், மத்வாசாரியர், அனைத்து ஆச்சாரியர்களும் கிருஷ்ணரை ஏற்றுக் கொண்டனர். சண்கராசாரியர் கூட, அவர் கிருஷ்ணரை ஏற்றுக் கொண்டார். ச பகவான் ஸ்வயம் கிருஷ்ண:

ஆகையால் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக அனைத்து ஆச்சாரியர்க.ளும் ஏற்றுக் கொண்டார்கள். ஆகையால் நாம் ஆச்சாரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும், சாதாரணமானவரிடம் இருந்தோ அல்லது தானே ஆச்சாரியர் என்று கூறிக் கொள்ளும் ஒருவரிடமிருந்து அல்ல. இல்லை. அது சரியல்ல. எவ்வாறு என்றால்.., சில நேரங்களில் நீதிமன்றத்தில் சில தீர்ப்பை மற்ற நீதிமன்றத்திலிருந்து கொடுக்கிறோம், மேலும் அது மிகவும் கடினமாக அளிக்கப்படுகிறது, ஏனென்றால் அது அதிகாரம். நாம் தீர்ப்பை உற்பத்தி செய்ய முடியாது. அதேபோல், ஆச்சார்யோபாஸனம், பகவத்-கீதையில் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. நாம் ஆச்சாரியர்களிடம் செல்ல வேண்டும். ஆச்சார்யவான் புருஷோ வேத: "சீடர் தொடர் முறையில் ஆச்சாரியரை ஏற்றுக்கொண்ட ஒருவருக்கு, இதன் பொருள் புரியும்." ஆகையால் அனைத்து ஆச்சாரியர்களும், கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்டார்கள். நாரதர், அவர் ஏற்றுக்கொண்டார். வியாசதேவ், அவர் ஏற்றுக்கொண்டார், மேலும் அர்ஜுணும் ஏற்றுக்கொண்டார், பகவத்-கீதையை தனிப்பட்ட முறையில் கிருஷ்ணரிடமிருந்து கேட்டவர். மேலும் பகவான் பிரம்மா. நேற்று யாரோ கேள்வி கேட்டார் அதாவது "துவாபர-யுகத்திற்கு முன் கிருஷ்ணரின் பெயர் குறிப்பிடப்பட்டதா?" இல்லை, அதில் இருந்தது. சாஸ்திரத்தில் அங்கே கிருஷ்ணர் இருந்தார். வேதத்தில், அதர்வ வேத மேலும் மற்றவைகளிலும், கிருஷ்ணரின் பெயர் இருந்தது. மேலும் ப்ரம-சம்ஹிதா - பகவான் பிரம்மா, அவர் ப்ரம-சம்ஹிதா எழுதினார் - அதில் தெள்ளத் தெளிவாக விவரித்துள்ளார்,ஈஸ்வர: பரம: கிருஷ்ண: சச்சிதானந்த-விக்கிரக: (பிச. 5.1), அனாதிர் ஆதி:அனாதிர் ஆதிர் கோவிந்த ஸர்வ-காரண-காரணம்" (பிச. 5.1). மேலும் கிருஷ்ணரும் கூறுகிறார் மத்த, "பரதரம் நான்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்ஜய asti Dhananjaya" (BG 7.7). "அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ" (BG 10.8). "ஸர்வஸ்ய" என்றால் தேவதாஸ் அனைவரும் tous les "devatas", tous les êtres vivants, tout. மேலும் வேதாந்த கூறுகிறது ஜன்மாதி, "அஸ்ய யதா " (SB 1.1.1). ஆகையால் கிருஷ்ணர் முழுமை பெற்ற பூரணமானவர், ஈஸ்வர: பரமம், பகவான்பிரமாவிலிருந்து. வேத அறிவை பரப்புபவர் அவரே, மேலும் கிருஷ்ணர் கூறுகிறார்,வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்ய இதுதான் இறுதியான இலக்கு" (BG 15.15). C'est l'objectif ultime.