TA/Prabhupada 0155 - எல்லோரும் பகவானாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்
Lecture on SB 7.6.5 -- Toronto, June 21, 1976
ஆகையால் இப்போது, நாம் பகவத்கீதையில், மூன்று வார்த்தைகள் இருப்பதை அறிந்துக் கொண்டோம். ஸநாதன, நித்தியமான, அங்கு பயன்படுத்தப்படுகிறது. முதலாவது ஜீவ, இந்த உயிர்வாழிகள், அவர்கள் ஸநாதன: என்று வர்ணிக்கப்படுகிறார்கள். மமைவாம்சோ ஜீவ-பூத: ஜீவ-லோகே ஸநாதன: (ப.கீ 15.7). நாம் உயிர்வாழிகள், ஸநாதன:. மாயாவின் தாக்கத்தால் நாம் ஜீவ-பூத: ஆகிவிட்டோம் என்று பொருள்படாது. நாமே நம்மை மாயாவின் தாக்கத்தில் இணைத்துக் கொண்டோம்; ஆகையினால் நாம் ஜீவ-பூத:. உண்மையிலேயே நாம் ஸநாதன. ஸநாதன என்றால் நித்தியமானவர்கள். நித்யொ ஸாஸ்வத. ஜீவாத்மா வர்ணிக்கப்படுவதாவது: நித்யொ ஸாஸ்வதோ யம் ந ஹன்யதே ஹன்யமானே ஷரிரே (ப.கீ 2.20). அதுதான் ஸநாதன. ஆகையால் நாம் குறைவான திறமையுள்ளவர்கள். அதாவது நான் நித்தியமானால், ஸநாதன, எனக்கு பிறப்பும் இறப்பும் இல்லை, நான் ஏன் இந்த பிறப்பும், இறப்பும் என்னும் கொடுந் துன்பத்தில் தள்ளப்பட்டேன்? இது ப்ரம-ஜிஞாஸா என்றழைக்கப்படுகிறது. ஆனால் நாம் கற்பிக்கப்படவில்லை. ஆனால் நாம் கற்பிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் நாம் இந்த அறிவுரைகளை சாதகமாக்கலாம். நாம் ஸநாதன. மேலும் மற்றொரு உலகம் அங்கே இருக்கிறது, பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரஸ்தஸ்மாத்து பாவோ'ன்யோ வ்யக்தோ'வ யக்த்தாத் ஸநாதன: (ப. கீ 8.20). வ்யக்தோ'வ யக்த்தாத் ஸநாதன: இந்த ஜடஉலகம் தெளிவாக காட்டுகிறது, மேலும் இதன் பின்னணியில் முழுமையாக ஜட சக்தி உள்ளது, மஹா-தத்வ. அது தெளிவாக தெரியவில்லை. ஆகையால் வ்யக்தோ'வ யக்த்தாத். இதற்கு அப்பால் அங்கே மற்றொரு இயற்கை உள்ளது, ஆன்மீக இயற்கை, ஸநாதன. அதுதான் ஸநாதன என்றழைக்கப்படுகிறது. பரஸ்தஸ்மாத்து பாவோ'ன்யோ வ்யக்தோ'வ யக்த்தாத் ஸநாதன: (ப. கீ 8.20). மேலும் ஜீவ-பூத:- ஸநாதன. மேலும் பதினொன்றாம் அத்தியாயத்தில், அர்ஜுனர், கிருஷ்ணரை ஸநாதன என்று விவரிக்கிறார். ஆகையால் மூன்று ஸநாதன. மூன்று ஸநாதன.
ஆகையால் நாம் அனைவரும் ஸநாதன என்றால், அங்கே ஸநாதன-தாம் உள்ளது மேலும் கிருஷ்ணர் ஸநாதன ஆவார், நாமும் ஸநாதன. ஆகையால் அவர்கள் ஒன்றாக இணையும் போது, அதை ஸநாதன-தர்ம என்று கூறுகிறோம். ஸநாதன என்றால் என்னவென்று அவர்களுக்கு தெரியாது. நான் ஒருவிதமாக உடை அணிந்து மேலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்தால், பிறகு நான் ஸநாதன-தர்ம ஆவேன் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இல்லை. அனைவரும் ஸநாதன-தர்மாவாகலாம். ஆனால் அவர்களுக்கு ஸநாதன என்பதன் பொருள் தெரியவில்லை. ஒவ்வொரு உயிர்வாழிகளும் ஸநாதன ஆவார்கள். மேலும் கிருஷ்ணர், பகவான் ஸநாதன ஆவார். நாம் ஒன்றாக சந்திக்க கூடிய இடம் ஒன்று உள்ளது - அதுதான் ஸநாதன-தாம். ஸநாதன-தாம், ஸநாதன-பக்தி, ஸநாதன-தர்ம. அது செயல்படுத்தப்படும் போது, அது ஸநாதன-தர்ம என்றழைக்கப்படுகிறது. ஆகையால் அந்த ஸநாதன-தர்ம என்பது என்ன? ஒருவேளை நான் அந்த ஸநாதன-தர்மத்திற்குச் சென்று மேலும் பகவான் அங்.கிருக்கிறார், ஸநாதன, மேலும் நானும் ஸநாதன. ஆகையால் எங்கள் ஸநாதன செயல்கள் என்ன? நான் ஸநாதன-தாமிற்குச் சென்றதால் நான் பகவான் ஆகிவிடுவேன் என்று அர்த்தமா? இல்லை. நீங்கள் பகவானாகமாட்டீர்கள். ஏனென்றால் பகவான் ஒருவரே. அவர்தான் முழுமுதற் கடவுள், எஜமானர், மேலும் நாம் சேவகர்கள். சைதன்ய மஹாபிரபு: ஜீவெர ஸ்வரூப ஹேய நித்ய க்ருஷ்ண தாஸ (ஸி.ஸி. மத்திய 20.108-109). ஆகையால் இங்கு நாம் எல்லோரும், நாம் கிருஷ்ணராக உரிமை கோருகிறோம். ஆனால் நீங்கள் ஸநாதன-தாமிற்கு திரும்பும் போது, பிறகு நாம் - நாம் தகுதி பெறவில்லையெனில் அங்கு செல்ல முடியாது- பிறகு நாம் பகவானின் சேவையில் நித்தியமாக ஈடுபட்டிருப்போம். அதுதான் ஸநாதன-தர்ம.
ஆகையால் நீங்கள் அதில் பயிற்சி செய்யுங்கள். ஸநாதன-தர்ம என்றால் பக்தி-யோக. ஏனென்றால் நாம் அதை மறந்துவிட்டோம். எல்லோரும் பகவானாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். பகவானின் சேவகனாவது எப்படி என்று இப்போது இங்கு பயிற்சி மேற்கொள்ளுங்கள். மேலும் நீங்கள் தகுதி பெற்றால், உண்மையிலேயே, அது நீங்கள் இப்போது . . . மற்றவை நிச்சயம், அதாவது நீங்கள் பகவானின் சேவகனாகிவிட்டீர்கள், அதுதான் பக்தி-மார்க. சைதன்ய மஹாபிரபு கூறியது போல், கோபீ-பர்துர் பத-கமலயோர் தாஸ-தாஸ-தாஸ-தாஸானுதாஸ:. நீங்கள் பகவானின் சேவகனின் சேவகனாக அவருடைய சேவகனாக மேலும் அவருடைய சேவகனாக வருவதில் வல்லுணராகும் போது - நூறு முறை கீழ், சேவகனாக - பிறகு நீங்கள் பூரணத்துவம் பெறுவீர்கள் (ஸி.ஸி. மத்திய 13.80). ஆனால் இங்கு எல்லோரும் முழு முதற் கடவுளாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். யாரோ ஒருவர் இந்த வார்த்தைகளை தகாத முறையில் பயன்படுத்துகிறார்கள் "சோ 'ஹம்," "அஹம் ப்ரமாஸ்மி" மேலும் ஆகையினால் "நான்தான் பரமன்". ஆனால் அது அவ்வாறு அல்ல. இவை வேத வார்த்தைகள், ஆனால் சோ'ஹம் என்றால் "நான் கடவுள்" என்று பொருள்படாது. ஆகையால் 'ஹம் என்றால் "எனக்கும் அதே தன்மை உள்ளது." ஏனென்றால் மமைவாம்சோ ஜீவ-பூத: (ப.கீ 15.7). ஜீவ பகவானின், கிருஷ்ணர், அங்க உறுப்புக்கள், ஆகையால் அதன் தன்மை ஒரேமாதிரியாக இருக்கும். எவ்வாறு என்றால் நீங்கள் கடலில் இருந்து ஒரு சோட்டு நீர் எடுப்பது போல். கடல் நீர் முழுவதும் மேலும் அந்த ஒரு சோட்டு நீரின் இரசாயன கலவையும் - ஒரே மாதிரியானதே. அதுதான் சோ 'ஹம் அல்லது ப்ரமாஸ்மி என்று கூறப்படுகிறது. இந்த வார்த்தைகளை நாம் தகாத முறையில் பயன்படுத்துகிறோம் என்பதல்ல, வேத பதிப்பு, மேலும் நான் தவறுதலாக நினைக்கிறேன் அதாவது "நான்தான் கடவுள். நான் கடவுளாகிவிட்டேன்." மேலும் நீங்கள் கடவுளானால், பின் ஏன் நீங்கள் நாயானீர்கள்? கடவுள் நாயாவாரா? இல்லை. அது சாத்தியமல்ல. ஏனென்றால் நாம் நுட்பமான துகள். அதுவும் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது: கேஸாகர-ஸத-பாகஸ்ய சததா கல்பிதஸ்ய ச ஜீவ: பாகொ ஸவிஞ்நேய ஸ அநன்தியாய கல்பதே
- keśāgra-śata-bhāgasya
- śatadhā kalpitasya ca
- jīvaḥ bhāgo sa vijñeya
- sa anantyaya kalpate
- (ஸி.ஸி மத்திய 19.140)
நம்முடைய ஆன்மீக அடையாளம் யாதெனில் நாம் முடியின் நுனியின் ஒரு கோடி பகுதியில் ஒன்றாகும். அது மிகவும் சிறியது, நாம் அதை ஒரு கோடி பாகமாக பிரிக்கிறோம், மேலும் அதில் ஒன்று, அதுதான் நம்முடைய அடையாளம். மேலும் அந்த சிறிய அடையாளம் இந்த உடலினுள் இருக்கிறது. ஆகையால் அதை எங்கே காண்பீர்கள்? அத்தகைய இயந்திரம் உங்களிடம் இல்லை. ஆகையினால், நாம் நிராகார என்று கூறுகிறோம். இல்லை, அங்கே ஆகார இருக்கிறது, ஆனால் அது மிகவும் நுட்பமாகவும் சிறியதாகவும் உள்ளது, இந்த ஜட கண்களால் பார்ப்பது சாத்தியமில்லை. ஆகையால் நாம் வேதத்தில் குறிப்பிட்ட கோணத்திலிருந்து பார்க்க வேண்டும். சாஸ்திர சக்சுஸ. அதுதான் வேதாந்த பதிப்பு. நாம் சாஸ்திர மூலம் காண வேண்டும். இந்த தெளிவற்ற கண்களால் அல்ல. அது சாத்தியமல்ல.