TA/Prabhupada 0157 - உங்கள் மனம் தூய்மையற்றதாக இருந்தால், உங்களால் ஹரி யார் என்று புரிந்துக் கொள்ள முடியாத

Revision as of 10:43, 29 December 2016 by Visnu Murti (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0157 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 6.2.11 -- Vrndavana, September 13, 1975

நீங்கள் சாஸ்திரத்தில் இருக்கும் தடைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அதிலும் கிருஷ்ணர், முழு முதற் கடவுள், உங்களுக்கு அறிவுரை கூறுகிறார் பகவத் கீதையில். அதுதான் அனைத்து சாஸ்திரங்களுக்கும் சாரம். நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். பிறகு நீங்கள் சந்தோஷமடைவீர்கள். வேறு விதமாய் இல்லை. ஆகையால் இங்கு கூறப்பட்டுள்ளது அதாவது அஹவான், பாவி மனிதன், தூய்மைப்படுத்தப்பட முடியாது, வெறுமனே இந்த சமயச் சடங்குகள் விழா, பரிகாரம், அல்லது சில சத்தியம் எடுத்தல், வ்ரத: மூலம். பிறகு எவ்வாறு இது சாத்தியமாகும்? ஏனென்றால் எல்லோரும்... யதா ஹரேர் நாம. ஆகையினால் இது சிபார்சு செய்யப்பட்டுள்ளது, ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம், கலெள நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ. (ஸி.ஸி. ஆதி 17.21). அதே பொருள். சாஸ்திரத்தின் தடைகள் முரண்பாடாக இருக்கும் வாய்ப்பைக் காண முடியாது. அக்னி புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது மேலும் ஸ்ரீமத் பாகவதத்திலும் அதே பொருள். அக்னி புராண கூறுகிறது, ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம், மேலும் இங்கு ஸ்ரீமத் பாகவததில் அது கூறப்பட்டுள்ளது, யதா ஹரேர் நாம - பதைர் உதாஹ்ருதைஸ் தத் உத்தமஸ்லோக - குணோபலம்பகம். ஹரேர் நாம என்றால் புனிதமான பெயரை ஜெபித்தல். அது மிகவும் சுலபமானது. ஆனால் நீங்கள் ஹரேர் நாம ஜெபிக்கும் போது பிறகு நீங்கள் படிப்படியாக புரிந்துக் கொள்வீர்கள், ஹரி யார், அவர் உருவம் என்ன, அவருடைய தன்மை என்ன, அவருடைய நடவடிக்கைகள் என்ன என்று. பிறகு உங்களால் புரிந்துக் கொள்ள முடியும். ஏனென்றால் ஹரேர் நாம இல்லாமல் உங்கள் மனம் தூய்மையற்றதாகும் - சேதோ-தர்பண-மார்ஜனம் (ஸி.ஸி. அந்தி 20.12) - உங்கள் மனம் தூய்மையற்றதாக இருந்தால், உங்களால் ஹரி யார் என்று புரிந்துக் கொள்ள முடியாது, அவர் பெயர் என்ன, அவர் உருவம் என்ன, அவருடைய தன்மை என்ன, அவருடைய நடவடிக்கைகள் என்ன. உங்களால் புரிந்துக் கொள்ள முடியாது. அதஹ ஸ்ரீ க்ருஷண-நாமாதி நபவெத் க்ராஹயம் இந்திரியை: (ஸி.ஸி. மத்திய 17.136). உங்களுடைய மங்கிய முட்டாள்தனமான புலன்களை, நீங்கள் பயன்படுத்தினால், உங்களால் கிருஷ்ணரை புரிந்துக் கொள்ள முடியாது. ஆகையினால் மக்கள் கிருஷ்ணரை புரிந்துக் கொள்வதில்லை, அதுவுமல்லாமல் ஹரி-நாமத்தின் முக்கியத்துவத்தையும் அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்களுடைய உணர்வுகள் மழுங்கிவிட்டன, மாயாவின் தன்மைகளால் மாசுப்படிந்துவிட்டன, அவர்களால் புரிந்துக் கொள்ள முடியாது. ஆனால் இது மட்டுமே ஒரே வழி - செதொ- தர்பண-மார்ஜனம் பவ-மஹா-தாவாக்ணி-நிர்வாபணம் (ஸி.ஸி. அந்திய 20.12). ஏனென்றால் நீங்கள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும், ஆகையால் இது ஒன்றே வழி. ஹரே கிருஷ்ண ஜெபியுங்கள். பிறகு நீங்கள் படிப்படியாக தூய்மையடைவீர்கள். புண்ய-ஸ்ரவண-கீர்த்தன: புண்ய-ஸ்ரவண-கீர்த்தன: ஸ்ருண்வதாம் ஸ்வ-கதா: க்ருஷ்ண: புண்ய-ஸ்ரவண-கீர்த்தன: (ஸ்ரீ.பா. 1.2.17). நீங்கள் காதால் கேட்டு, நீங்கள் கிருஷ்ணரை பற்றி ஜெபித்தால், உத்தமஸ்லோக, அது சொல்லப்பட்டது போல், தத் உத்தமஸ்லோக-குணோபலம்பக, அங்கே பல சலுகைகள் உள்ளன. ஆகையால் ஹரே கிருஷ்ண இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஆகையால் அதை உள்ளார்ந்த அக்கறையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். கீர்தனீய: சதா ஹரி: தருநாத் அபி சுனீசேன தரோர் அபி சஹிஸ்நுணா அமானினா மானதேன கீர்தனீய: சதா ஹரி: (ஸி.ஸி. ஆதி. 17.31).

இதுவே சைதன்ய மஹாபிரபுவின் விதிமுறைகள். கஷ்டம்.... இது பதம் பதம் யத் விபதம் (ஸ்ரீ.பா. 10.14.58). இந்த ஜட உலகில் விபத மட்டுமே உள்ளது. சம்பத இல்லை. முட்டாள்தனமாக நாம் நினைக்கிறோம் அதாவது "இப்பொழுது நான் நன்றாக இருக்கிறேன்." எது நன்றாக இருக்கிறது? அடுத்த தருணத்தில் நீங்கள் இறக்க வேண்டும். எது நன்றாக இருக்கிறது? ஆனால் இந்த முட்டாள்தனமான மக்கள் கூறுகிறார்கள், "ஆம், நான் நன்றாக இருக்கிறேன்." நீங்கள் யாரேனும் கேளுங்கள், "நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?" "ஆம் மிக நன்றாக இருக்கிறேன்." என்ன அந்த நன்றாக இருக்கிறது? நீங்கள் நாளை இறக்கப் போகிறீர்கள். இருந்தும் நன்றாக இருக்கிறது. அவ்வளவுதான். இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் இது பதம் பதம் யத் விபதம். சந்தோஷ்மாக இருக்க அவர்கள் விஞ்ஞான ஆராய்ச்சி செய்கிறார்கள், ஆனால் இந்த அயோக்கியற்களால் இறப்பை நிறுத்த முடியவில்லை. ஆகையால் என்ன அந்த நன்றாக இருக்கிறது? ஆனால் அவர்களுக்கு புரிந்துக் கொள்ளக்கூடிய மூளை இல்லை. ஆனால் கிருஷ்ணர் கூறுகிறார், "இவை தான் பிரச்சனை, அன்புள்ள ஐயா. நீங்கள் விஞ்ஞானிகள், நீங்கள் பல பொருள்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முயற்சிக்கிறிர்கள்." ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதிது:க்க தோஷானு தர்ஷனாம் (பா. கீ. 13.9). முதலில் உங்கள் பிரச்சனை என்ன என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி. நீங்கள் பிறப்பு எடுக்க வேண்டும், நீங்கள் இறக்க வேண்டும், நீங்கள் வியாதியால் துன்பப்பட வேண்டும், நீங்கள் முதுமை அடைய வேண்டும். முதலில் இதை நிறுத்துங்கள்; பிறகு விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தைப் பற்றி பேசுங்கள். இல்லையெனில் நீங்கள் முட்டாள்கள். மிக்க நன்றி.