TA/Prabhupada 0208 - கிருஷ்ண பக்தனிடம் இருப்பிடம் தேடிக்கொள்

Revision as of 15:40, 7 January 2017 by Zoran (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0208 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 6.1.16 -- Denver, June 29, 1975


ஒரு வைணவன் ஒருபொழுதும் பாவ காரியங்களில் ஈடுபடமாட்டான்.. முன்பு அவன் செய்த தீயவினைகளும் முடிந்ததாகவே கருதப்படும். இது கிருஷ்ணர் கூறியது. வேறுவகையில் சொல்லவேண்டுமானால், நீங்கள் கடவுள் சேவைக்கு உங்களை அர்பணித்தால் ...... பிறகு நிச்சயமாக நீங்கள் செய்த பாவங்களிலிருந்து விடுவிக்கபடுகிறீர்கள். இது எப்படி சாத்தியமாகும்? Yathā kṛṣṇārpita-prāṇaḥ. Prāṇaḥ, prāṇair arthair dhiyā vācā. Prāṇa. பிராணா என்றால் வாழ்க்கை. கிருஷ்ணரின் சேவைக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்ட ஒருவர் ... கிருஷ்ண சேவைக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் இந்த பணி எப்படி சாத்தியமாகும்?

அதையும் இங்கே சொல்லியிருக்கிறார்கள் : tat-puruṣa-niṣevayā. கிருஷ்ண பக்தராக இருக்கும் ஒருவரிடம் நீங்கள் இருப்பிடம் தேடிக்கொண்டு , சேவை செய்யவேண்டும். ஒரு பக்தரை, உண்மையான, தூய்மையான பக்தரை , உங்களின் வழிகாட்டியாக ஏற்று கொள்ள வேண்டும். இது தான் நம் செயல்முறை. ரூபா கோஸ்வாமி பக்தி-ரஸம்ருத -சிந்து என்ற நூலில் சொல்கிறார். முழு முதல் வேலை, முதல் படி , எதுவென்றால் குருவை ஏற்றுக்கொள்வது : ādau gurvāśrayam. குருவை ஏற்றுக்கொள்., குரு என்பவர் கிருஷ்ணரின் பிரதிநிதி. கிருஷ்ணரின் பிரதிநியாக இல்லாதவர் குரு ஆக முடியாது. எந்த முட்டாள்கள் வேண்டுமானாலும் குரு ஆகிவிட முடியாது. தத் புருஷர்கள் மட்டுமே. எவரொருவர் கடவுள் மட்டும் தான் எல்லாம் என்று நினைக்கிறாரோ, அவர் தத்புருஷர் ஆவர். Tat-puruṣa-niṣevayā. என்றால்.. வைணவன்.. தூய்மையான பக்தன். எனவே அது கடினமானது அல்ல. கிருஷ்ணரின் அருளால், தூய்மையான பக்தர்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருப்பிடம் தேடிக்கொள்ளவேண்டும் . Ādau gurvāśrayam. பிறகு, sad-dharma-pṛcchāt: ஒரு அங்கீகரிக்கப்பட்ட மத குருவை ஏற்றுக்கொண்ட பின் , ஒருவன் கிருஷ்ணரின் அறிவியல் என்ன என்பதை ஆர்வத்தோடு கற்றுக்கொள்ளவேண்டும். Sad-dharma-pṛcchāt sādhu-mārga-anugamanam. இந்த கிருஷ்ண உணர்வு , பக்தர்கள் வழியை பின்பற்றி செய்ய வேண்டும் என்பது..sādhu-mārga-anugamanam.

எனவே, யார் இந்த சாதுக்கள் ? இது சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . நாம் இதை முன்னரே விவாதித்துள்ளோம்.

svayambhūr nāradaḥ śambhuḥ
kumāraḥ kapilo manuḥ
prahlādo janako bhīṣmo
balir vaiyāsakir vayam
(SB 6.3.20)

அந்த இரண்டு.. குறிப்பாக அந்த பன்னிரெண்டு மகாஜனா என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட குருக்கள் , நீங்கள் அவர்களை பின்பற்றி நடக்கவேண்டும். அது கடினமானது அல்ல. சுவயம்பு என்றால் ப்ரம்ம தேவர். சம்பு என்றால் சிவன். Svayambhūḥ nāradaḥ śambhuḥ. இந்த பன்னிரெண்டு மஹாஜனங்களில் நான்கு பேர் மிகவும் முக்கியம்வாய்ந்தவர்கள் . சுவயம்பு அதாவது ப்ரஹ்மா, பிறகு சம்பு , சிவன், மற்றும் நான்கு குமாரர்கள். இன்னுமொரு சம்பிரதாயமும் இருக்கின்றது , ஸ்ரீ சம்ப்ரதாயம், லக்ஷ்மி தேவியுடையது. அதனால், இந்த நான்கு கோடுகளை மரபுவழியாக கண்டிப்புடன் பின்பற்றி வரும் ஒரு குருவை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். பிறகு நாம் ஆதாயமடைவோம் . பொதுவாக குரு என்று அழைக்கப்படுவரிடம் சென்றால் நம்மால் கற்றுக்கொள்ள முடியாது. மரபுவழி வந்த குருவை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். எனவே, அவர்களுக்கு நாம் நேர்மையாகவும், உண்மையாகவும் சேவை புரியவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது : tat-puruṣa-niṣevayā: எனவே நம் நோக்கம் நிறைவுபெறுகிறது. இந்த வாழ்க்கையை கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்யும் நடவடிக்கையை தொடர்ந்து செய்துவந்தால் , மற்றும் எப்பொழுதும் தத் புருஷர்களின் வழியில், கிருஷ்ணரின் சேவையில் நம்மை ஈடுபடுத்திக்கொண்டால். கிருஷ்ண உணர்வை போதிப்பதை விட வேறு எந்த வேலையும் இல்லாதவராக நாம் இருந்தால், நம் வாழ்வு வெற்றிகரமானதாகிறது. நாம் அனைத்து பாவங்களிருந்தும் விடுபட்டுவிடுகிறோம் ... தூய்மையாக்க படாமலே ஏனென்றால், கிருஷ்ணர் தூயவர். அர்ஜுனர் கூறுகிறார் : paraṁ brahma paraṁ brahma pavitraṁ paramaṁ bhavān: "என் இறைவனான கிருஷ்ணரே நீங்கள் மிகவும் தூய்மையானவர்". நாம் தூயவராக இல்லாதவரை கிருஷ்ணரிடம் நெருங்கமுடியாது. சாஸ்திரத்தில் சொல்லப்பட்டது போல. நீ நெருப்பாக மாறாவிட்டால் நெருப்பிடம் செல்லமுடியாது. அதே போல நீங்கள் முழுமையாக தூயவராக ஆகாவிட்டால் .. கடவுளின் சாம்ராஜ்யத்திற்குள் நுழைய முடியாது. இது எல்லாவிதமான மத அமைப்புகளாலும் ஒத்துக்கொள்ளப்பட்டது. கிறிஸ்துவ மதமும் அதை போல தான்.. நீங்கள் தூயரவராக இல்லாவிடில் கடவுளின் சாம்ராஜ்யத்திற்குள் நுழைய முடியாது என்றே கூறுகிறது.