TA/Prabhupada 0770 - நாம் நேசிப்பது ஆன்மாவைத் தான். ஆத்ம தத்வ வித்.எதற்காக ? நாம் கிருஷ்ணரை நேசிப்பதால் தான்

Revision as of 07:09, 29 November 2017 by Sahadeva (talk | contribs) (Text replacement - "<!-- END NAVIGATION BAR --> <!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->" to "<!-- END NAVIGATION BAR --> <!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 2.1.1 -- Paris, June 9, 1974

ப்ருபுபாதா: நம் க்ருஷ்ண பக்தி இயக்கத்தை போல் தான், நாங்கள் வேறு எதை பற்றியும் பேசுவதில்லை. நாங்கள் க்ருஷ்ணரை பற்றி மட்டுமே பேசுகிரோம். மேலும் நாம், தற்போதய நிலையில், குறைந்தது நூறு வருடங்கள் க்ருஷ்ணரை பற்றி பேசினால் கூட, நம் தொகுப்பு தீராது. நம்மிடம் அவ்வளவு புத்தகங்கள் இருக்கின்றன. நூறு வருடங்கள் வரை, நம்மிடம் ஏற்கனவே இருக்கும் தொகுப்பை நாம் தொடர்ந்து படித்தால், அவ்வளவு ஏன், ஸ்ரீமத் பாகவதத்தின் ஒரு வரியை புரிந்துக் கொள்ள முயன்றால் நூறு வருடங்கள் எடுக்கும். அந்த ஒரு வரி, ஜன்மாதி அஸ்ய யத: (பாகவதம் 1.1.1), நீங்கள் புரிந்து கொள்ள முயன்றால், நூறு வருடங்களுக்கு இதை ஆழமாக புரிந்துக் கொள்ளலாம். ஆகயால் ஸ்ரீமத் பாகவதம் அவ்வளவு அருமையாநது. தொடர்ந்து தினமும் படியுங்கள். நீங்கள் உணர்வீர்கள்... ஸ்ரீமத் பாகவதம் மற்றும் பகவத் கீதை. ஒவ்வொரு நாளும், மேலும் மேலும் நீங்கள் அறிவொளி பெற, ஆத்மவித், புது அர்த்தம், புது கண்ணோட்டம் காண்பீர். ஸ்ரீமத் பாகவதம் அவ்வளவு அருமையாநது. ஸ்ரீமத் பாகவதத்தை படித்தாலே... வித்யா பாகவதாவதி: . ஒருவர் பண்டிதர் ஆவர்... கற்றலின் எல்லைத் தான் என்ன ? எப்பொழுது உங்களுக்கு ஸ்ரீமத் பாகவதம் புரிகிறதோ, அதுவே கற்றலின் எல்லை. அவ்வளவு தான். அதன்பிறகு வேறு எதையும் கற்க தேவை இல்லை. ஆகயால் இதை, ஷ்ரோதவ்யாதீஷு ய: பர:(பாகவதம் 2.1.1) என்பார்கள். முடிவான குறிக்கோளானது, மிகச்சிறந்தது.

ஆனால், அபஷ்யதாம் ஆத்ம தத்வம் க்ருஹேஷு க்ருஹ மேதினாம் (பாகவதம் 2.1.2). க்ருஹமேதிகளுக்கு ஆன்மா இருப்பதாகவோ, ஆன்மா சாசுவதம் என்றோ தெரியாது, ஆனால் நாம் உண்மையில் சந்தோஷத்திற்காக ஏங்குகிறோம். யாருடைய சந்தோஷத்திற்காக ? ஆன்மாவின் சந்தோஷத்திற்காக. அது க்ருஷ்ணரின் சந்தோஷம். நாம் இந்த உடலை காப்பாற்றுவதற்கு முயற்ச்சி செய்கிறோம். நாம் இந்த உடலை நிறைய நேசிக்கிறோம். ஏன் ? ஏன் என்றால் உடலக்குள் ஆன்மா இருக்கிறது. இது எல்லோருக்கும் தெரியும். இந்த உடலிலிருந்து ஆன்மா மறைந்த உடனேயே, ஆன்மா வெளித்தள்ள படுகிறது. வீதியில் தூர எறிவது போல் தான். யாரும் அதற்காக கவலை படுவதில்லை. ஒரு அழகான ஆணும் பெண்ணும், சவமாய் கடந்தால்- யாராவது கவலை படுவார்களா ? ஆனால் ஆன்மா அங்கே இருக்கும் வரையில், "ஓ எவ்வளவு அழகான ஆண், பெண்." ஆன்மா முக்கியமாநது. உண்மையில் நாம் இந்த உடலை நேசிப்பது இல்லை. ஏன் என்றால் அதே அழகான உடல் தான் இருக்கிறது. பின்னர் ஏன் அதற்காக நாம் கவலை படுவதில்லை ? ஏனெனில், ஆன்மா இல்லை... ஆகயால் நான் நேசிப்பது ஆன்மாவைத் தான். இது தான் உண்மை. இது தான் ஆத்ம வித், ஆத்ம தத்வ வித். மேலும் நான் எதற்காக ஆன்மாவை நேசிக்கிறேன் ? ஏனெனில், நான் க்ருஷ்ணரை நேசிக்கிரேன். ஆன்மா க்ருஷ்ணரின் அம்சம் தான். அகயால் எதர்காக எனக்கு என் ஆன்மாவின்மீது இவ்வளவு பாசம் ? ஏனெனில் அது க்ருஷ்ணரின் அம்சமாகும். எனவே முடிவில், நான் க்ருஷ்ணரைத்தான் நேசிக்கிரேன். இது தான் முடிவு. மற்றும் நான் க்ருஷ்ணரை நேசிக்காமல் இருந்தால் அது என் இயல்பற்ற நிலை. இயல்பான நிலையில் நான் க்ருஷ்ணரை நேசிப்பேன். எனவே நாங்கள் க்ருஷ்ண உணர்வை தூண்டி எழுப்ப முயற்ச்சி செய்கிறோம். க்ருஷ்ண உணர்வில் திடமான உறுதி வந்த உடன் எப்பொழுது ஒருவன் க்ருஷ்ணரை நேசிக்க ஆரம்பிக் கின்றானோ, அப்பொழுதே அவன் வேறு எதையுமே நேசிக்க விரும்புவதில்லை. ஸ்வாமின் க்ருதார்த்தோ அஸ்மி : "நான் பூரண த்ருப்தி அடைந்தேன்." இல்லாவிட்டால் நமக்கு பல சந்தேகங்கள் இருக்கும், பல விதமான பதில்கள் கிடைக்கும், நாம் பூரண சுய உணர்வு அடையும் வரை, நம் நேரமும் வீண் ஆகி விடும். அதனால், இந்த க்ருஷ்ண ப்ரஷ்ண, அதாவது க்ருஷ்ணரைப் பற்றி தெரிந்துக் கொள்ள முயற்ச்சி தொடர்ந்து இருக்க வேண்டும். உங்களுக்கு எல்லா பதில்களும் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தில் கிடைக்கும். இத்தகு கேள்வி பதில்களால் மட்டுமே உங்கள் வாழ்க்கையின் நோக்கம் வெற்றிகரமாக பூரணம் அடையும். மிக்க நன்றி.

பக்தர்கள் : ஜய ப்ரபுபாதா.