TA/Prabhupada 0024 - கிருஷ்ணர் மிகுந்த கருணை நிறைந்தவர்
Lecture on SB 3.25.26 -- Bombay, November 26, 1974
அர்ஜுனன் கிருஷ்ணரை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருந்த பொழுது - கிருஷ்ணர் பகவத் கீதை உபதேசித்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணரைப் பார்ப்பதும், அத்துடன் நீங்கள் பகவத் கீதையை படிப்பதும் ஒரே பொருளாகும். இதில் வேறுபாடுகள் இல்லை. யாரோ சிலபேர் சொல்வார்கள் அதாவது "அர்ஜுனன் போதிய அதிர்ஷ்டமானவர் கிருஷ்ணரை நேருக்கு நேர் பார்த்து அறிவுரை பெற்றார்." அது சரியல்ல. கிருஷ்ணர், அவரை உடனடியாக காண முடியும், நிபந்தனைக்குட்பட்ட கண்கள் உங்களிடம் இருந்தால் பார்க்கலாம். ஆகையினால் இங்கு சொல்லப்படுவது ப்ரெமாஞ்ஞந-ச்சுரித.... ப்ரேமவும் பக்தியும், ஒரே பொருள். ப்ரெமாஞ்ஞந-ச்சுரித-பக்தி-விலோசனென ஸ்ந்தஹ சதைவ ஹிர்தயேஸு விலொகையாந்தி [பிஸ.5.38]. இதற்கு தொடர்புடைய ஒரு கதை என் நினைவில் இருப்பதை சொல்கிறேன், அதாவது தென் இந்தியாவில் ஒரு பிராமணர், ரெங்கநாதர் கோயிலில், அவர் பகவத் கீதை படித்துக் கொண்டிருந்தார். மற்றும் அவர் ஒரு தற்குறி. அவருக்கு சமஸ்கிருதமொ வேறு எந்த் எழுத்தும் தெரியாது, கல்லாதவர். ஆகையால் மக்கள், அண்டை வீட்டுக்காரர்கள், அவர்களுக்கு அது தெரியும் "இந்த மனிதர் கல்லாதவர், அவர் பகவத் கீதை படிக்கிறார்." அவர் பகவத் கீதையை திறக்கிறார், "அ, அ," அவ்வாறு அவர் செய்கிறார் ஆகையால் சிலபேர் பரிகாசம் செய்துக் கொண்டு, "சரி, பிராமணா, பகவத் கீதையை நீங்கள் எவ்வாறு படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?" அவரால் புரிந்துக் கொள்ள முடிந்தது, அதாவது "கல்வியறிவு இல்லாததால் இந்த மனிதர் என்னை பரிகாசம் செய்கிறார்." இப்படியாக அன்றைய தினம் சைதன்ய மஹாபிரபுவும் ரங்கநாதர் கோயிலில் இருக்க நேர்ந்தது, அத்துடன் அவரால் புரிந்துக் கொள்ள முடிந்தது "இங்கு ஒரு பக்தர் இருக்கிறார்." ஆகையால் அவர் பிராமணரை அணுகி கேட்டார், "அன்புக்குரிய பிராமணா, நீங்கள் என்ன படித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?" "இந்த மனிதர் பரிகாசம் செய்யவில்லை." என்று அவரால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆகையால் அவர் சொன்னார் "சார், நான் பகவத் கீதை படித்துக் கொண்டிருக்கிறேன். நான் பகவத் கீதையை படிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் எனக்குப் படிப்பறிவு இல்லை. ஆகையால் என் குரு மஹாராஜ் சொன்னார் "நீங்கள் கண்டிப்பாக தினமும் பதினெட்டு அத்தியாயம் படிக்க வேண்டும்." ஆனால் எனக்கு கல்வி அறிவு இல்லை. என்னால் படிக்க முடியவில்லை. இருப்பினும், குரு மஹாராஜ் சொன்னார், ஆகையால் நான் அவருடைய கட்டளையை நிறைவேற்ற முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன் அத்துடன் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கிறேன், அவ்வளவுதான். எனக்குப் படிக்கத் தெரியாது." சைதன்ய மஹாபிரபு சொன்னார் "நீங்கள் சில சமயங்களில் அழுகிறீர்கள், நான் பார்த்தேன்." அவ்வேளை, "ஆம், நான் அழுதுக்கொண்டு இருந்தேன்." "உங்களால் படிக்க முடியாத பொழுது எப்படி நீங்கள் அழுகிறீர்கள்?" "இல்லை, ஏனென்றால் நான் இந்த பகவத் கீதை புத்தகத்தை எடுக்கும் பொழுது நான் ஒரு படத்தைப் பார்க்கிறேன், அதாவது கிருஷ்ணர் மிகுந்த கருணை உள்ளவர் அதனால் அவர் தேரை ஓட்டுபவராக, அர்ஜுனனின் சாரதியாக இருக்கிறார். அர்ஜுனன் அவருடைய பக்தர். ஆகையால் கிருஷ்ணர் மிகுந்த கருணை கொண்டதனால் அவர் ஒரு சேவகராக இருக்கும் நிலையை ஏற்றுக் கொண்டார் ஏனென்றால் அர்ஜுனன் கட்டளை இடுகிறார், 'என் தேரை இங்கே நிறுத்துங்கள்,' மற்றும் கிருஷ்ணர் அவருக்கு சேவகம் செய்துக் கொண்டிருக்கிறார். ஆகையால் கிருஷ்ணர் மிகுந்த கருணை உள்ளவர். அதனால் இந்த படத்தை என் சிந்தனையில் கற்பனையில் பார்க்கும் பொழுது, நான் அழுகிறேன்." ஆகையால் சைதன்ய மஹாபிரபு உடனே அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார், அத்துடன் "நீங்கள் பகவத் கீதை படித்துக் கொண்டிருக்கிறீர்கள். படிப்பறிவு எதுவும் இல்லாமல் நீங்கள் பகவத் கீதை படித்துக் கொண்டிருக்கிறீர்கள்." அவரை கட்டித்தழுவிக் கொண்டார். ஆகையால் இதுதான்.... அவர் எப்படி அந்த படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்? ஏனென்றால் அவர் கிருஷ்ணர் மேல் மிக்க அன்பு கொண்டவர், அவரால் ஸ்லோகங்கள், படிக்க முடியாவிட்டாலும் அது ஓர் பொருட்டல்ல. ஆனால் அவர் கிருஷ்ணரின் அன்பில் மூழ்கி இருந்ததுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். கிருஷ்ணர் அங்கே உட்கார்ந்திருந்தார், அத்துடன் அவர் அர்ஜுனனின் தேரை செலுத்திக் கொண்டிருந்தார். இதுதான் தேவையானது.