TA/Prabhupada 0189 - இருளின் இடுக்கனில் இருக்கும் அனைத்து மனித சமுதாயத்தையும் வேளியே கொண்டுவாருங்கள்

Revision as of 13:56, 27 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0189 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 6.1.46 -- San Diego, July 27, 1975

இயற்கையின் விதியை நீங்கள் மாற்ற முடியாது. வாழ்வுக்கு போராடுகிறோம்: நாம் இயற்கையின் விதியை வெற்றிக் கொள்ள முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம். அது சாத்தியமல்ல. தைவி ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா (BG 7.14). ஆகையால் இவைதான் பட்டப் படிப்பின் கருப்பொருள். ஏன் அங்கே, எல்லோரும் ஒரு அளவுக்கு மகிழ்ச்சியற்றும் மேலும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள்? இந்த தன்மைகளுக்கு ஏற்ப. இங்கு இது கூறப்படுகிறது, ஆகையினால், அதாவது "இங்கே இந்த வாழ்க்கையில் நாம் பார்ப்பதுபோல், வாழ்க்கையின் நீடிக்கும் காலத்தில் பலவகை உள்ளன, அதேபோல், குண-வைசித்ரயா, குணாவின்பலவகையால், குண-வைசித்ரயா, " ததாநியத்ரானுமீயதே. அந்யத்ர என்றால் மறுபிறவி அல்லது மறு கோள் கிரகம் அல்லது மறு எதாவது. அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. த்ரைகுணய-விஷயா வேதா நிஸ்த்ரைகுணயோ பவார்ஜுன. கிருஷ்ணர் அர்ஜுனருக்கு அறிவுரை கூறுகிறார் அதாவது " இந்த ஜட உலகம் முழுவதும் இந்த மூன்று குணங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது," குண-வைசித்ரயா. "ஆகையினால் நீங்கள் நிஸ்த்ரைகுணவாகுங்கள், இந்த மூன்று குணாஸும் செயல்பட முடியாது." நிஸ்த்ரைகுணயோ பவார்ஜுன. ஆகையால் எவ்வாறு இந்த மூன்று குணங்களின் செய்ல்பாடை உங்களால் நிறுத்த முடியும்? அது பகவத் கீதையிலும் விவரிக்கப்பட்டுள்ளது: மாம் ச யோ(அ) வ்யபிசாரேண பக்தியோகேன ஸேவதே ஸ குணான்ஸமதீத்யைதான்ப்ரஹ்ம யூயாய கல்பதே (BG 14.26). நீங்கள் தூய்மையான தெய்வத் தொண்டில் உங்களை தொடர்ச்சியாக இடுபடுத்திக் கொண்டாள், இடைவிடாமல், பிறகு நீங்கள் எப்போதும் உன்னத நிலையில் இருப்பீர்கள், இந்த மூன்று குணங்களுக்கும் மேல். ஆகையால் எங்கள் கிருஷ்ண பக்தி இயக்கம் பக்தர்களை இந்த மூன்று குணாஸ்களுக்கும் மேல் வைத்திருப்பதாகும். எவ்வாறு என்றால் சமுத்திரத்தில் இருப்பது போல், நீங்கள் சமுத்திரத்தில் விழுந்துவிட்டால், அது மிகவும் ஆபத்தான நிலை. ஆனால் யாராவது உங்களுக்கு உதவி செய்து சமுத்திர நீர் மட்டத்திலிருந்து ஒரு அங்குலம் மேல் உயர்த்தினால், அங்கு ஆபத்து இல்லை. உங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது. ஆகையால் அதுதான் தேவைப்படுகிறது, அதாவது குண-வைசித்ரயா, நீங்கள் உங்களை பலவிதமான வாழ்க்கையிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால், பிறப்பு, இறப்பு, முதுமையும் நோயும், மேலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் பலவிதமான வாழ்க்கையை... எவ்வாறு என்றால் நடந்துக் கொண்டிருந்த போது நீங்கள் சொல்லிக் கொண்டு வந்தீர்கள் அதாவது கலிபோர்னியாவில் பல மரங்கள் இருக்கின்றன; அவை ஐயாயிரம் வருடங்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. அதுவும் இன்னொரு வகையான வாழ்க்கை. மக்கள் பல பல வருடங்களாக வாழ்வதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இயற்கையின் வழியாக, இங்கு ஒரு மரம் இருக்கிறது, ஐயாயிரம் வருடங்கள். ஆகையால் அத்தகை வாழ்க்கை இலாபகரமானதா, ஒரு வனத்தில் ஐயாயிரம் வருடங்கள் நின்றுக் கொண்டிருப்பது? ஆகையால் எவ்வகையான வாழ்க்கையும் இந்த ஜட உலகில் நல்லதல்ல, அதாவது நீங்கள் தேவர்களாகவோ அல்லது மரமாகவோ அல்லது இதுவோ அதுவோ எதுவாயினும். அதுதான் கல்வி. அதுதான் கல்வி. ஆகையால் ஒருவர் நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும் அதாவது எவ்வகையான வாழ்க்கையும், தேவர்களாகவோ அல்லது நாயாகவோ, இங்கு வாழ்க்கை தொல்லையானது. தேவர்களும் கூட, அவர்கள் பல ஆபத்துக்களில் தள்ளப்படுகிறார்கள், பலமுறை, மேலும் அவர்கள் பகவானை அணுகுவார்கள். ஆகையால் இங்கு நீங்கள் எப்போதும் ஆபத்தில் இருப்பீர்கள். பதம் பதம் யத் விபதாம் (SB 10.14.58). இந்த ஜட உலகை ஆபத்தின்றி இருக்க செய்யும் முயற்சி வீண். அது சாத்தியமல்ல. அங்கே பலவகையான தேகங்கள் இருப்பதால், பலவித ஆபத்துக்கள், சீற்றங்கள், ஒன்றின்பின் ஒன்றாக, நீங்கள் எதிர்நோக்க..... ஆகையால் மிகச் சிறந்த காரியமாவது, இந்த பௌதிக தொழிலை நிறுத்துவது. அதுதான் வேத நாகரிகம். முழு வேத நாகரிகமும் இந்த எண்ணத்தை அடிப்படையாக கொண்டது, அதாவது "இந்த முட்டாள்தனமான வேலையை நிறுத்துங்கள், மீண்டும் மீண்டும் பிறப்பது, இறப்பது, முதுமை அடைவது." ஆகையினால் கிருஷ்ணர் கூறுகிறார், ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி து:க்கதோஷானு தர்ஷனம் (BG 13.9). இதுதான் அறிவு. என்ன அறிவு, இந்த தொழினுட்ப அறிவு, இந்த அறிவு? இந்த காரியங்களை உங்களால் நிறுத்த முடியாது. ஆகையினால் பிரதான தொழில் யாதெனில் இதை எவ்வாறு நிறுத்துவது. மேலும் அவர்கள் முட்டாள் தனமான மக்கள் ஆனதால், அவர்கள் நினைக்கிறார்கள் அதாவது "இந்த காரியங்கள் நிறுத்தப்பட முடியாது. நாம் மீண்டும் பிறப்பதும் மேலும் இறப்பதும், மேலும் ஒவ்வொரு பிறவியிலும் உயிர் போராட்டம் நடத்துவதில் தொடர்ந்து செல்வோம்." இதுதான் பௌதிக் நாகரிகம், அறியாமை, அறிவின்மை. இந்த அறிவு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கொடுக்கப்பட்டது அதாவது " இங்கே இருக்கிறது அதன் தீர்வு: ஜன்ம கர்ம ச மே திவ்யம் யோ ஜனதி தத்வத:, த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி (BG 4.9)." இதன் பிரச்சனை புனர் ஜன்ம, மீண்டும் மீண்டும் பிறத்தல், மேலும் நீங்கள் இதை நிறுத்த வேண்டுமென்றால், கிருஷ்ணரை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். பிறகு நீங்கள் நிறுத்தும் ஆற்றல் பெறுவீர்கள். நீங்கள் கிருஷ்ணரை புரிந்துக் கொண்ட உடனடியாக.... கிருஷ்ணரை புரிந்துக் கொள்வதென்றால் நீங்கள் குருட்டுத்தனமாக ஏற்றுக் கொண்டால் கூட, அதுவும் நன்மை அளிக்கும். கிருஷ்ணர் தான் யார் என்று கூறுகிறார், அதாவது அவர்தான் முழுமுதற் கடவுள். ஆகையால் நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். வெறுமனே இந்த நம்பிக்கை கொள்ளுங்கள், அதாவது " கிருஷ்ணர்தான் முழுமுதற் கடவுள்." அது உங்களை போதுமான அளவிற்கு உயர்த்தும். ஆனால் உலோகாயதக் கொள்கையாளர்களுக்கு இது மிகவும் கடினமாக இருக்கும். ஆகையினால் கிருஷ்ணர் கூறுகிறார், பஹுனாம் ஜன்மனாம் அந்தே: (BG 7.19). "பல பிறப்புக்களில் முயற்சி செய்தபின்", பஹுனாம் ஜன்மனாமந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே, " ஞானவான், உண்மையில் அறிவுள்ள ஒருவர், அவர் கிருஷ்ணரிடம் சரணடைவார்." மற்றபடி, நமாம் துஷ்க்ருதினோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா: (BG 7.15)"இல்லையெனில் அவன் ஒரு அயோக்கியனாக இருந்து மேலும் பாவச் செயல்களில் சம்மந்தப்பட்டு, மனிதவர்கத்தில் தாழ்த்தப்பட்டு, அறிவும் பறிபோய்விடும்." நமாம் ப்ரபத்யந்தே: "அவன் கிருஷ்ணரிடம் சரணடையமாட்டான்."