TA/Prabhupada 0263 - நீங்கள் இந்த சூத்திரத்தை நன்றாக எடுத்துகொண்டுவிட்டால், பிறகு தொடர்ந்து பிரச்சாரம்
Lecture -- Seattle, September 27, 1968
மதுதவிசா : பிரபுபாதா , சைதன்ய மகாபிரபு, களியின் பொற்காலத்தில் என்ன யூகித்து கூறினார் (தெளிவில்லாத) மக்கள் ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சரிக்கும்போது ?
பிரபுபாதா : ஆம் .. மக்கள் .. இப்பொழுது நாம் எப்படி ஹரே கிருஷ்ணா நாமத்தை போதிக்கின்றோமோ அப்படி.. உங்கள் நாட்டில் அப்படி ஒரு போதனை இல்லை எனவே நங்கள் எங்களுடைய மாணவர்களை ஐரோப்பா , ஜெர்மனி, லண்டன் போன்ற நாடுகளுக்கு அனுப்பிவருகிறோம். நீங்களும் பரவச்செய்கிறீர்கள் இது தான் ஒரே வழி.. இது தான் நாங்கள் 1966 இல் இருந்து செய்துகொண்டிருக்கிறோம் நாங்கள் 1966 இல் சங்கத்தை பதிவு செய்தோம்.. இப்போழுது 68 ஆகிவிட்டது.. இதை நாங்கள் படிப்படியாக பிரச்சாரம் செய்கிறோம்.. நான் வயதானவன்.. நான் இறந்துவிடக்கூடும் நீங்கள் இந்த சூத்திரத்தை நன்றாக கற்றுக்கொண்டுவிட்டால், பிறகு நீங்கள் தொடர்ந்து பிரச்சாரம் பண்ணமுடியும்.. இது உலகம் முழுவதும் பரவக்கூடும் .. மிகவும் எளிமையான விஷயம்.. நமக்கு சிறிது அறிவுக்கூர்மை தேவை.. அவ்வளவே எனவே எந்த ஒரு அறிவார்ந்த மனிதனும் இதை பாராட்டுவர்.
ஆனால், ஒருவன் தன்னை வேண்டுமென்றே ஏமாற்றிக்கொள்ளும்போது என்ன செய்யமுடியும் .. விருப்பத்துடன் சென்று ஏமாந்தால் அவர்களை எப்படி காப்பாற்றுவது ? அவருக்கு புரியவைப்பது மிகவும் கடினம் ஆனால், திறந்த மனம் படைத்தவர்கள் , கிருஷ்ணர் உணர்வு இயக்கம் பற்றி புரிந்துகொள்வார்கள் ஜெயகோபாலா: நம்முடைய உள்ளாற்றலை , தாழ்ந்த ஆற்றலை, கிருஷ்ணரின் சேவையில் பயன்படுத்தும்பொழுது அது தூய்மையடைகிறது அல்லவா? பிரபுபாதா : நீ ஆற்றலை பயன்படுத்தினால் அது பௌதிகம் அல்ல. அது ஆன்மிகம் செப்பு கம்பி மின்சாரத்துடன் இணைத்த பின்பு அதை தொட இயலாது .. ஏன் என்றால் அது மின்சாரம்.. அதை போல எனவே கிருஷ்ணரின் சேவையில் நீ உன்னை அர்ப்பணித்து கொண்டால் கிருஷ்ணரும் நீங்களும் வேறு வேறு இல்லை இது பகவத் கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. māṁ ca 'vyabhicāreṇa bhakti-yogena yaḥ sevate. இது மிக முக்கியமான வார்த்தை sevate...
Sa guṇān samatītyaitān brahma-bhūyāya kalpate (BG 14.26). யார் ஒருவன் தன்னை என் சேவையில் முழுமையாக அர்ப்பணித்து கொள்கிறானோ அவன் உடனடியாக பௌதிக நிலைக்கு அப்பாற்பட்ட தன்மையை பெற்று, பிராஹ்மணன் நிலையை அடைகிறான் Brahma-bhūyāya kalpate. எனவே நீ கிருஷ்ணரின் சேவையில் உன்னை அர்ப்பணித்து கொண்டால் உன்னுடைய பௌதிக ஆற்றல் இல்லை என்று நினைக்க வேண்டாம்..
இந்த பழங்களை போல.. ஒரு சிலர் நினைக்கலாம்.. இது என்ன பிரசாதம் என்று. பழங்களை வாங்கிய பின்னர், நம் வீட்டிலும் பழங்களை எடுத்துக்கொள்கிறோம், ஆனால் இது பிரசாதம் ? கிருஷ்ணருக்கு படைத்த பின்னர் அது வெறும் பழங்கள் அல்ல இதன் விளைவு? கிருஷ்ணரின் பிரசாதத்தை எடுத்துக்கொண்டு கிருஷ்ணரை உணர்வதில் நீங்கள் முன்னேற்றம் கொள்வீர்கள் மருத்துவர் உங்களுக்கு மாத்திரை கொடுத்து அதனால் நீங்கள் குணமடைந்தால் அது மாத்திரையின் விளைவு இன்னொரு உதாரணம் . பௌதிகம் சார்ந்த விஷயங்கள் எப்படி ஆன்மிகம் ஆகிறது ஒரு மிக சிறந்த உதாரணம்.. நீங்கள் நிறைய அளவு பாலை குடித்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு வயிற்று உபாதை வந்துவிட்டது .. மருத்துவரிடம் செல்கிறீர்கள் வேத கால அடிப்படையில் அவர்கள் தயிரை கொடுப்பார்கள் அது பாலின் தயாரிப்பு.. தயிருடன் சிறிது மருந்து கொடுத்தால் சரி ஆகிவிடும் உங்களின் வயிற்று வலியின் காரணம் பால்.. அதை சரி செய்ததும் பால் தான் ஏன்? அது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டது அதேபோல் தான் அனைத்தும் மேம்பட்ட உணர்வுகளில், பௌதிகம் என்பதே இல்லை..
அது வெறும் மாயை, இன்று காலை நான் சொன்ன சூரியன் மற்றும் பனி ஆகியவை போல பனி இருந்தால் சூரியனை பார்க்க இயலாது முட்டாள் என கூறுவான்.. அங்கு சூரியனே இல்லை. பனி மட்டுமே உள்ளது என்று ஆனால் அறிவுள்ள ஒருவன் என்ன கூறுவான்.. சூரியன் அங்கு தான் இருக்கின்றது.. பனி அதை மறைத்துக்கொண்டிருக்கிறது .. நம்மால் சூரியனை காண இயலவில்லை என்று கூறுவான் அதே போல.. அனைத்துமே கிருஷ்ணரின் ஆற்றல்கள் .. எதுவுமே பௌதிகம் அல்ல நம்முடைய இந்த மனப்போக்கு , அனைத்தும் நம்முடையது என்று எண்ணுவது , மாயை கிருஷ்ணருடனான அந்த உறவை இது மறைக்கிறது நீங்கள் இதை படிப்படியாக புரிந்துகொள்வீர்கள். Sevonmukhe hi jihvādau svayam eva sphuraty adaḥ ( Brs. 1.2.234). சேவை செய்வதில் நீங்கள் முன்னேற்றம் அடையும்போது அனைத்தும் தெளிவாகிவிடும் உங்கள் ஆற்றல் எப்படி ஆன்மிகம் ஆகின்றது என்று.