TA/Prabhupada 0274 - நாம் பிரம்ம-சம்பரதாயத்தைச் சேர்ந்தவர்கள்
Lecture on BG 2.7 -- London, August 7, 1973
ஆகையால் நீங்கள் நித்தியமானவரை அணுக வேண்டும், அப்படியென்றால் கிருஷ்ணர் அல்லது அவருடைய பிரதிநிதி. மற்றவர்களெல்லாம் போக்கிரிகளும் முட்டாள்களும் ஆவார்கள். நீங்கள் ஒரு மனிதரை அணுகினால், குரு, கிருஷ்ணரின் பிரதிநிதி அல்லாதவர், நீங்கள் ஒரு போக்கிரியை அணுகுகிறீர்கள். உங்கள் ஐயம் எவ்வாறு தெளிவுறும்? நீங்கள் கிருஷ்ணர் அல்லது அவருடைய பிரதிநிதியை அணுக வேண்டும், அதுதான் தேவைப்படுகிறது.
தத் விஞ்ஞானார்தம் ச குருமேவ அபிகச்செத் (மஉ.1.2.12)
ஆகையால் யார் குரு? ஸமித்-பாணிஹ ஷ்ரோத்ரியம் ப்ரம-நிஷ்தம். ஒரு குரு கிருஷ்ணர் உணர்வில் முழுமை பெற்றவர். ப்ரம-நிஷ்தம். மேலும் ஷ்ரோத்ரியம். ஷ்ரோத்ரியம் என்றால் கேட்டறிந்தவர், ஷ்ரோத்ரியம் பதா மூலம் அறிவு பெற்றவர், மேல்நிலையாளரிடம் இருந்து கேட்டறிதல்.
ஏவம் பரம்பராப்தமிமம் ராஜர்ஷயோ விது (BG 4.2)
ஆகையால் இங்கு நாம் அர்ஜுனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் அதாவது நாம் குழப்பமுடன் இருக்கும் போது, நம்மு டைய உண்மையான கடமையை மறக்கும் போது, அதனால் நாம் பதறும் போது, அப்போது நம் கடமை கிருஷ்ணரை அணுகுவது, அர்ஜுன் செய்துக் கொண்டிருப்பதைப் போல். ஆனால் நீங்கள் கூறினால்: "கிருஷ்ணர் எங்கே?" கிருஷ்ணர் அங்கில்லை, ஆனால் கிருஷ்ணருடைய பிரதிநிதி அங்கு இருக்கிறார். நீங்கள் அவரை அணுக வேண்டும். அது தான் வேத கட்டளை.
தத் விஞ்ஞானார்தம் ச குருமேவ அபிகச்செத் (மஉ.1.2.12)
ஒருவர் குருவை அணுக வேண்டும். மேலும் குரு என்றால் கிருஷ்ணர் சுயமான முறையில். தேனே பிரஹ்மஹ்ருதாய ஆதி-கவயே முஹ்யந்தி யத் ஸூரய: (SB 1.1.1). ஜன்மாதி அஸ்ய யதோ 'ந்வயாத் இதரதஸ் சார்தேஷூ அபிஜ்ஞ: ஸ்வராத். நீங்கள் அணுக வேண்டும். அவர் தான் குரு. ஆகையால் நாம் ஆலோசித்து, பிரம்மாவை ஏற்றுக் கொண்டோம். ஏனென்றால் இந்த பிரபஞ்சத்தில் அவர் தான் முதல் உயிருள்ளவர், அவர் குருவாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். அவர் தெரிவித்தார்... எவ்வாறு என்றால் நாம் பிரம்ம-சம்பரதாயத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு நான்கு சம்பரதாய இருக்கின்றன, பிரம்ம-சம்பரதாய, ஸ்ரீ-சம்பரதாய, ருத்ர-சம்பரதாய, மேலும் குமார-சம்பரதாய. அவர்கள் அனைவரும் மஹாஜனஸ்.
மஹாஜனோ என கதா: ச பந்தாஹ (CC Madhya 17.186)
மஹாஜனவால் கொடுக்கப்பட்ட வம்சாவளி தொடரை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆகையால் பிரம்மா மஹாஜனமாவார். பிரம்மாவின் சித்திரத்தில், கையில் வேத வைத்திருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். ஆகையால் அவர் தான், வேதம் பற்றிய முதல் அறிவுரையை அவர் தான் கொடுத்தார். ஆனால் எங்கிருந்து அவர் இந்த வேத அறிவை பெற்றார்? ஆகையினால் வேத அறிவு அபௌருஸேய. இது மனிதரால் செய்யப்பட்டதல்ல. இது பகவானால்-படைக்கப்பட்டது.
தர்மம் து சாக்ஷாத் பகவத்-ப்ரணிதம் (SB 6.3.19)
ஆகையால் எவ்வாறு பகவான், கிருஷ்ணர் பிரம்மாவிடம் கொடுத்தார்? தேனே பிரஹ்ம ஹ்ருதா. பிரம்மா, பிரம்மா என்றால் வேத அறிவு. ஸப்த-பிரம்மா. தேனே. ஹ்ருதாவிலிருந்து அவர் வேத அறிவை செலுத்தினார்.
தேஷாம் ஸதத-யுக்தானாம் பஜதாம் ப்ரீதி-பூர்வகம் (BG 10.10)
பிரம்மா படைக்கப்பட்ட போது, அவர் குழப்பமுடன் இருந்தார்: "என் கடமை என்ன? அனைத்தும் இருண்டிருக்கிறது." ஆகையால் அவர் தியானம் செய்தார், மேலும் கிருஷ்ணர் அவருக்கு அறிவை கொடுத்து அதாவது: "இதுதான் உன் கடமை. நீ இவ்வாறு செய்."
தேனே பிரஹ்ம ஹ்ருதா ய ஆதி-கவயே. ஆதி-கவயே (SB 1.1.1)
பிரம்மா தான் ஆதி-கவயே. ஆகையால் உண்மையான குரு கிருஷ்ணர் ஆவார். மேலும் இங்கு... கிருஷ்ணர் பகவத்- கீதையை அறிவுறுத்துகிறார். இந்த போக்கிரிகளும் முட்டாள்களும் கிருஷ்ணரை குருவாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் சில போக்கிரிகளிடமும் முட்டாள்களிடமும் சமூகவிரோதிகளிடாமும், பாவச்செயல் செய்பவர்களிடமும், சென்று குருவாக ஏற்றுக் கொள்கிறார்கள். அவர் எவ்வாறு குருவாக முடியும்?