TA/Prabhupada 0275 - தர்மா என்றால் கடமை
Lecture on BG 2.7 -- London, August 7, 1973
ஆகையால் கிருஷ்ணர் தான் குரு. இதோ அர்ஜுனால் கொடுக்கப்பட்ட உதாரணம். ப்ருச்சாமி த்வாம். யார் அந்த த்வாம்? கிருஷ்ணர். "நீ ஏன் என்னிடம் கேட்கிறாய்?"
தர்மஸம்-மூட-சேதா (BG 2.7)
"தர்ம, என்னுடைய கடமையில் நான் தடுமாற்றம் அடைந்துள்ளேன்." தர்ம என்றால் கடமை.
தர்மம் து சாக்ஷாத் பகவத்-ப்ரணிதம் (SB 6.3.19)
சம்மூடா-செதா:. "ஆகையால் நான் என்ன செய்ய வேண்டும்?" யச்ரேய:. "உண்மையிலேயே என் கடமை என்ன?" ஸ்ரேய:. ஸ்ரேய:வும் ப்ரேய:வும். ப்ரேய:.... அதில் இரண்டு கருத்து உள்ளது. ப்ரேய என்றால் எனக்கு உடனடியாக பிடித்துவிடும், மிகவும் அழகுள்ளது. மேலும் ஸ்ரேய என்றால் இறுதியான குறிக்கோள். அதில் இரண்டு கருத்து உள்ளது. எவ்வாறு என்றால் ஒரு பிள்ளை நாள் முழுக்க விளையாட விரும்புகிறது. அது குழந்தைத் தனம். அதுதான் ஸ்ரேய. மேலும் ப்ரேய என்றால் அவன் கல்வியை மேற்கொள்ள வேண்டும் அப்போதுதான் அவன் எதிர்கால வாழ்க்கை தீர்வு காணும். அதுதான் ப்ரேய, ஸ்ரேய. ஆகையால் அர்ஜுன் ப்ரேய கேட்கவில்லை. அவர் கிருஷ்ணரிடம் விதிமுறையை கேட்கிறார், அவருடைய ஸ்ரேயவை உறுதிப் படுத்தும் நோக்கம் அல்ல. ஸ்ரேய என்றால் உடனடியாக அவர் நினைத்துக் கொண்டிருப்பார் அதாவது: " நான் போரிடாமல் இருந்தால் சந்தோஷமடைவேன், என் உறவினர்களை கொல்லாமல் இருப்பதன் மூலம்." அது, அவர் ஒரு குழந்தைப் போல் நினைத்துக் கொண்டிருந்தார். ஸ்ரேய. ஆனால் அவர் தன் உணர்வுக்கு வந்தவுடன்... உண்மையிலேய உணர்வு அல்ல, ஏனென்றால் அவர் புத்திசாலி. அவர் ப்ரேய கேட்டுக் கொண்டிருக்கிறார், ஆ, ஸ்ரேய. யச்ரேய: ஸ்யாத். "உண்மையிலேயே என் வாழ்க்கையின் இறுதியான குறிக்கோள் என்ன?" யச்ரேய: ஸ்யாத்.
யச்ரேய: ஸ்யாத் நிஷ்சிதம் (BG 2.7)
நிஷ்சிதம் என்றால் நிலையான, எந்த தவறும் இல்லாமல். நிஷ்சிதம். பகவத் கீதையில், இருக்கிறது, நிஷ்சிதம் என்றழைக்கப்படுகிறது. நிஷ்சிதம் என்றால் நீங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. அது ஏற்கனவே தீர்வு செய்யப்பட்டுவிட்டது. "இது தான் அந்த தீர்மானம்." ஏனென்றால், நம்முடை சிறிய மூளையால், உண்மையான நிஷ்சிதம் எது என்று நம்மால் கண்டுபிடிக்க இயலாது, நிலையான ஸ்ரேய. அது நமக்கு தெரியாது. அதை நீங்கள் கிருஷ்ணரிடம் அல்லது அவருடைய பிரதிநிதியிடம் கேட்டு கொள்ள வேண்டும். இவைகள் தான் அந்த காரியங்கள். யச்ரேய: ஸ்யாத் நிஷ்சிதம் ப்ரூஹி தன்மே. ஆகையால்... "கருணையோடு என்னிடம் அதைப் பற்றி பேசுங்கள்." "ஆனால் நான் ஏன் உன்னிடம் பேச வேண்டும்?" இங்கு கூறப்படுகிறது:
சிஷ்யஸ்தே 'ஹம் (BG 2.7)
"இப்போது நான் தங்களை என் குருவாக ஏற்றுக் கொள்கிறேன். நான் தங்களுடைய சிஷ்யனாகிறேன்." சிஷ்ய என்றால்: "தாங்கள் கூறும் எதுவாயினும், நான் அதை ஏற்றுக் கொள்கிறேன்." சிஷ்ய, ஷாஸ்-டாது என்னும் வார்த்தையிலிருந்து வந்தது. ஷாஸ்-டாது. சாஸ்திரம். சாஸ்திரம். ஷாசனா. சிஷ்ய. இவை ஒரே அடிப்படையில் உள்ளது. ஷாஸ்-டாது. ஷாஸ்-டாது என்றால் ஆட்சி, ஆட்சி செய்தால். ஆகையால் நாம் பல வழிகளில் ஆட்சி செய்யலாம். நாம் ஆட்சி செய்யப்படலாம், ஒரு சரியான குருவின் சிஷ்யனாவதன் மூலம். அதுதான் ஷாஸ்-டாது. அல்லது நாம் சாஸ்திரத்தால் ஆளப்படலாம், ஆயுதம். எவ்வாறு என்றால் அரசர்கள் ஆயுதங்ள் வைத்திருப்பது போல். நீங்கள் அரசரின் அல்லது அரசாங்கத்தின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், பிறகு அங்கு காவல்துறை, இராணுவப் படை உள்ளது. அதுதான் சாஸ்திரம். மேலும் அங்கு சாஸ்திரமும் இருக்கிறது. சாஸ்திரம் என்றால் புத்தகம், வேத புத்தகம். பகவத் கீதையைப் போல். அனைத்தும் அதில் உள்ளது. ஆகையால் நாம் சாஸ்திரம் வழியாகவோ அல்லது குருவாலோ ஆட்சி செய்யப்பட வேண்டும். அல்லது சிஷ்யனாக வேண்டும். ஆகையினால் இங்கு சொல்லப்பட்டது:
சிஷ்யஸ்தே 'ஹம் (BG 2.7)
"நான் விரும்பி... நான் தங்களிடம் சரணடைகிறேன்." "இப்போது நீ சிஷ்யனாகிறாய். நீ என் சிஷ்யனாகிவிட்டாய் என்பதற்கு என்ன ஆதாரம்?" ஷாதி மாம் த்வாம் ப்ரபன்னம். "இப்பொழுது நான் முழுமையாக சரணடைன்துவிட்டேன்." ப்ரபன்னம்.