TA/Prabhupada 0279 - உண்மையிலேயே நாம் பணத்திற்கு சேவை செய்கிறோம்
Lecture on BG 7.2 -- San Francisco, September 11, 1968
இப்பொழுது இங்கு, இந்த அத்தியாயத்தில், இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது, அதாவது யார் வழிபாடிர்க்குரிய ஒப்புயர்வற்றவர். நாம் வழிபட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடைய அறிவுத்திறனுக்கு ஏற்ப, நாம் யாரோ ஒருவரை வழிபட்டுக் கொண்டிருக்கிறோம். குறைந்தபட்சம் நாம் நம்முடைய முதலாளியை வழிபட்டுக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை நான் ஒரு அலுவலகத்திலொ அல்லது தொழிற்சாலையிலோ பணி புரிந்தால், நான் முதலாளியை வழிபட வேண்டும், நான் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும். ஆகையால் எல்லோரும் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போது, யார் அந்த வழிபாடிர்க்குரிய ஒப்புயர்வற்றவர், கிருஷ்ணர், அவர் எவ்வாறு அந்த வழிபாடிர்க்குரிய ஒப்புயர்வற்றவர், அது இந்த அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது.
யஸ்வரூபம் சர்வ கரம் ச யக்ச திஹ்யாம் தத் உபாய-விஷாயகம் ஞானம் வியக்தமத்ர பக்தி-ப்ரதிஞானம்
ஆகையினால் நாம் புரிந்துக் கொள்கிறோம் அதாவது இங்கு இருக்கிறார் ஒப்புயர்வற்ற கட்டுப்படுத்துபவர், வழிபாடிர்க்குரிய ஒப்புயர்வற்றவர், பிறகு நம் வாழ்க்கையின் பிரச்சனை உடனடியாக தீர்த்துவைக்கப்படும். நாம் தேடிக் கொண்டிருக்கிறோம்...
சும்மா அன்றொரு நாள், நான் உங்களுக்கு ஒரு கதை சொன்னேன், அதாவது ஒரு முகமதன் பக்தர், அவர் உயர்ந்தவருக்கு சேவை செய்ய விரும்பினார். அவர் நவாபுக்கு சேவை செய்துக் கொண்டிருந்தார், பிறகு அவர் பேரரசனிடம் சென்றார், பாட்ஷா, பிறகு பேரரசரிடமிருந்து ஹரிதாஸிடம், அவர் ஒரு துறவி, மேலும் ஹரிதாஸிடமிறுந்து அவர் கிருஷ்ணரை விருந்தாவனத்தில் வழிபட உயர்வு பெற்றார். ஆகையால் நாம் துருவியறியுந்தன்மையும், போதுமான புத்தி கூர்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நாம் சேவை செய்துக் கொண்டிருக்கிறோம். எல்லோரும், நாம் சேவை செய்கிறோம், குறைந்தபட்சம் நாம் நம் புலன்களுக்கு சேவை செய்கிறோம். எல்லோரும், நடைமுறையில், அவர்கள் எந்த தலைவர் அல்லது எஜமானருக்கு சேவை செய்யவில்லை, தங்கள் புலன்களுக்கு சேவை செய்கிறார்கள். ஒருவேளை என் தலைவராக யாருக்காவது சேவை செய்துக் கொண்டிருந்தால், உண்மையிலேயே நான் அந்த நபருக்கு சேவை செய்யவில்லை, நான் அவருடைய பணத்திற்கு சேவை செய்துக் கொண்டிருக்கிறேன். அவர் இவ்வாறு கூறினால், "நாளை நீங்கள் இலவசமாக வேலை செய்ய வேண்டும். இப்போது நீங்கள் ஒரு நாளைக்கு இருபது வெள்ளி பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நாளை என்னிடம் பணம் இல்லை. நீங்கள் இலவசமாக வேலை செய்ய வேண்டியிருக்கும்." "ஆ, இல்லை, இல்லை, ஐயா. நான் வர மாட்டேன் ஏனென்றால் நான் உங்களுக்கு சேவை செய்யவில்லை; நான் உங்கள் பணத்திற்கு சேவை செய்கிறேன்." ஆகையால் உண்மையிலேயே நாம் பணத்திற்கு சேவை செய்கிறோம்.
மேலும் நீங்கள் ஏன் பணத்திற்குச் சேவை செய்கிறீர்கள்? ஏனென்றால் பணத்தால் நம் புலன்களை திருப்தி படுத்தலாம். பணமில்லாமல், சமாளிக்க கூடிய இந்த புலன்களை, நம்மால் திருப்திபடுத முடியாது. நான் மது அருந்த வேண்டுமென்றால், நான் இம்மாதிரியான காரியங்களை அனுபவிக்க வேண்டுமென்றால், அப்போ எனக்கு பணம் தேவைபடுகிறது. ஆகையினால் முடிவாக நான் என் புலன்களுக்கு சேவை செய்கிறேன். ஆகையினால் கிருஷ்ணர் கோவிந்த என்று அழைக்கப்படுகிறார். நமக்கு இறுதியாக நம்முடை புலன்நுகர்வு வேண்டும், மேலும் கோ என்றால் புலன்கள். இதோ இருக்கிறார் அந்த நபர், முழு முதற் கடவுள். நீங்கள் கிருஷ்ணருக்கு சேவை செய்தால், பிறகு உங்கள் புலன்கள் திருப்தி அடையும். ஆகையினால் அவர் பெயர் கோவிந்த. உண்மையிலேயே, நாம் நம் புலன்களுக்கு சேவை செய்ய விரும்புகிறோம், ஆனால் உண்மையான புலன்கள், அந்த நித்தியமான புலன்கள், கிருஷ்ணர் ஆவார், கோவிந்த. ஆகையினால் பக்தி, பக்தி மயத்தொண்டு, என்றால் புலன்களை தூய்மைப்படுத்துதல். நித்திய புனிதரின் சேவையில் பணி புரிவது. பகவான் நித்திய புனிதராவார். பகவத் கீதையில், பத்தாவது அத்தியாயத்தில் நீங்கள் காண்பீர்கள், கிருஷ்ணர் அர்ஜுனால் வர்ணிக்கபடுகிறார்,
பவித்ரம் பரமம்
பகவான்: "நீங்கள் நித்திய புனிதராவீர்." ஆகையால் நாம் நித்திய புனிதரின் புலன்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்றால், அப்போது நாமும் புனிதமாக வேண்டும். ஏனென்றால் இல்லாமல்... புனிதாமாவது என்றால் ஆன்மீகம். ஆன்மீக வாழ்க்கை என்றால் புனிதமான வாழ்க்கை, மேலும் பௌதிக வாழ்க்கை என்றால் தூய்மைக் கேடான வாழ்க்கை. எவ்வாறு என்றால் நமக்கு இந்த உடல் இருப்பது போல், பௌதிக உடல். இது தூய்மையற்ற உடல். ஆகையினால் நாம் பிணியினால் வேதனைப்படுகிறோம், முதுமையினால் வேதனைப்படுகிறோம், நாம் பிறப்பினால் வேதனைப்படுகிறோம், இறப்பினால் வேதனைப்படுகிறோம். மேலும் நம்முடைய உண்மையான, தூய்மையான வடிவம், ஆன்மீக வடிவம், இது போன்ற துன்பமில்லை. அங்கு பிறப்பு இல்லை, இறப்பு இல்லை, அங்கு பிணி இல்லை மேலும் முதுமையும் இல்லை. பகவத் கீதையில் நீங்கள் அதை படித்திருக்கிறீர்கள்,
நித்ய: ஸாஸ்வ தோ 'யம் ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே (BG 2.20)
நித்ய. நான் மூத்தவராயினும், ஏனென்றால் நான் என் உடலை மாற்றிக் கொண்டிருப்பதால்... நான் ஒரு ஆத்மாவாக தூயாவர். எனக்கு பிறப்பு இல்லை, இறப்பு இல்லை, ஆனால் நான் வெறுமனே உடலை மாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆகையினால் நான் தான் மூத்தவர். ஆனால் நான் .மூத்தவராயினும், எனக்கு என்னுடைய புதிய ஆன்மா இருக்கிறது. நான் எப்போதும் புத்துனர்வுடன் இருக்கிறேன். இதுதான் என்னுடைய நிலைப்பாடு.