TA/Prabhupada 0330 - ஒவ்வொருவரும் தன்னை தானே கவனித்துக் கொள்ளவேண்டும்

Revision as of 10:34, 26 April 2018 by Karunapati (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0330 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 1.26-27 -- London, July 21, 1973

"நான் இந்த ஜட வாழ்க்கையில் பாதுகாப்பாக இருக்கப் போகிறேன், என் சமுதாயம், நட்பு, அன்பு, தேசம், அரசியல், சமூகவியல், இவைகளின் உதவியுடன்," என நாம் நினைத்திருந்தால், "அது முடியாது ஐய்யா, அது சாத்தியம் இல்லை." அது நடக்காத விஷயம். உன்னை நீயே தான் கவனித்துக் கொள்ளவேண்டும். உன் சமுதாயம், நட்பு, நேசம், தேசம், இதுவெல்லாம் உன்னை ஒருபொழுதும் உதவ முடியாது. ஏனென்றால் நீ மாயையின் பிடியில் இருக்கிறாய்.


தைவீ ஹி ஏஷா குணமயீ மம மாயா துரத்தயயா (BG 7.14)


ப்ரக்ருதே: க்ரியமாணானி குணை: கர்மாணி ஸர்வஷ: அஹங்கார–விமூடாத்மா கர்தாஹம் இதி மன்யதே (BG 3.27)


நீ மாயையின் பிடியில் இருக்கிறாய். உனக்கு எந்த சுதந்திரமும் கிடையாது. மேலும் யாருக்கும் உன்னை விடுவிப்பதற்கு சுதந்திரம் கிடையாது. அது சாத்தியம் அல்ல. நான் சிலசமயங்களில் இந்த உதாரணத்தை தந்திருக்கிறேன், அதுவது ஒரு விமானத்தை ஓட்ட கற்பதுப் போல் தான். நீ ஆகாயத்தில் வெகு உயரமாக செல்லலாம். ஆனால் நீ‌ ஆபத்தில் சிக்கினால் வேறு எந்த விமானமும் உன்னை காப்பாற்ற முடியாது. உன் நேரம் முடிந்தது. ஆகையால் உன்னை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக, நீ மிகவும் கவனமான பைலட்டாக இருக்கவேண்டும். அதுபோலவே, இந்த ஜட உலகிலும் ஒவ்வொருவரும் தன்னை தானே கவனித்துக் கொள்ளவேண்டும். அவன் எப்படி மாயையின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியும் என்பது தான் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம். ஒரு ஆசிரியர், உனக்கு குறிப்புகளை தான் தர முடியும். "நீ இவ்வாறு காப்பாற்ற படலாம்." என ஒரு ஆச்சார்யர் குறிப்புகளை தான் தரமுடியும். ஆனால் அதை செயல்படுத்துவது உன் கையில் தான் இருக்கிறது.


நீ உன் ஆன்மீக கடைமைகளை சரியாக நிறைவேற்றினால், நீ காப்பாற்ற படலாம். மறுபுறம், நீ பின்பற்ற தவறினால், ஆச்சாரியார் உனக்கு என்ன தான் கற்பித்திருந்தாலும், அவரால் எப்படி உன்னை காப்பாற்ற முடியும்? அவர் முடிந்தவரை தன் கருணையால், தன் அறிவுறுத்தலால் உன்னை காப்பாற்றலாம். ஆனால் நீ தான் அந்த பொறுப்பை தீவிரமாக கையாளவேண்டும். ஆக சிக்கல் என்னவென்றால்... அர்ஜுனன் இந்த சிக்கலில் தான் சிக்கிக் கொண்டிருக்கிறான். அது ஒரு பொதுவான பிரச்சினை தான். தேஹாபத்யா-கலத்றாதிஷு. தேஹாபத்யா. தேஹா என்றால் இந்த உடல். அபத்யா என்றால் குழந்தைகள். கலத்றா என்றால் மனைவி.


தேஹாபத்யா-கலத்றாதிஷு ஆத்ம ஸைன்யேஷ்வ அஸத்ஸ்வ அபி (SB 2.1.4)


நாம் நினைப்பது என்னவென்றால், "நான் இந்த காவலர்களால் காப்பாற்றப் படுவேன். எனக்கு என் பிள்ளைகள், பேரன்கள், பாட்டனார், மாமனார், சகோதரர்கள், இவ்வளவு பேர், நண்பர்கள், நேசிப்பவர்கள் இருக்கிறார்கள்." எல்லோரும் அப்படி தான் நினைக்கிறார்கள். ""என் நாடு, என் சமுதாயம், என் தத்துவம், என் அரசியல்." இல்லை. எதாலையும் உன்னை காப்பாற்ற முடியாது. தேஹாபத்யா-கலத்றாதிஷு அஸத்ஸு அபி. இதுவெல்லாம் தற்காலிகமானது. அவை வந்து போகும். அஸத்ஸு அபி. ப்ரமத்தோ தஸ்ய நிதனம் பஷ்யான் அபி ந பஷ்யதி. இந்த சமுதாயம், நட்பு மற்றும் அன்பு, இவைகளுக்காக அளவுக்கதிகமாக பற்றுடையவனுக்கு ப்ரமத்த எனப் பெயர். ப்ரமத்த என்றால் பைத்தியக்காரன். பஷ்யன் அபி ந தஸ்ய நிதனம். அவன் கண்டறிவதில்லை. அவனுக்கு தெரிகிறது "என் தந்தை இறந்து விட்டார். நான் சிறுவனாக இருந்த போது, என் தந்தை என்னை பாதுகாப்பாக வைத்திருப்பார். இப்போது என் தந்தை இறந்து விட்டார். எனக்கு அபயம் அளிப்பவர் யார்? என் தந்தை என்னை காக்க உயிருடனா இருக்கிறார்? என்னை பாதுகாப்பவர் யார்? என் தாய் எனக்கு பாதுகாப்பாக வைத்திருந்தாள். இப்போது என்னை பாதுகாப்பவர் யார்? நான் என் குடும்பத்தில், என் பிள்ளைகள், என் மகள்கள், என் மனைவியுடன் இருந்தேன், ஆனால் நான் அவர்களை விட்டு சென்றேன். இப்போது என்னை பாதுகாப்பவர் யார்? வாஸ்தவத்தில் கிருஷ்ணர் எப்பொழுதும் உனக்கு அபயம் அளிக்கிறார். உன் சமுதாயமோ, நண்பர்களோ நேசிப்பவர்களோ அல்ல. அவர்கள் இடம் தெரியாமல் போகிவிடுவார்கள்.