TA/Prabhupada 0344 - ஸ்ரீமத்-பாகவதம் வெறும் பக்தியை சம்பந்தப்பட்டது

Revision as of 13:13, 26 April 2018 by Karunapati (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0344 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 3.26.11-14 -- Bombay, December 23, 1974

எல்லா வேத இயக்கியங்களை எழுதிய பிறகும், வியாசதேவர் திருப்தி அடையவில்லை. அவர் நான்கு வேதங்களை தொகுத்தார், பிறகு புராணங்கள் - புராணங்கள் என்பவை வேதங்களுக்கு துணை நூல்கள் ஆனவை. பிறகு வேதாந்த-சூத்ரம், வேத ஞானத்தின் முடிவுரை. ஆனால் அவர் திருப்தி அடையவில்லை. ஆகையால் அவர் ஆன்மீக குருநாதரான நாரத முனிவர், அவரிடம் கேட்டார்: "மனித சமுதாயத்திற்கு கல்வியை அளிக்கும் பல நூல்களை எழுதியும், எதற்காக நீ மனக்குறைவை உணர்கிறாய்?" அதற்கு அவர் கூறினார், "முனிவரே, நான் எழுதியதை நான் அறிவேன்... ஆனால் எனக்கு திருப்தி இல்லை. காரணம் என்னவென்று எனக்கு புரியவில்லை." பிறகு நாரத முனிவர் கூறினார், "உன் மனக்குறைவின் காரணம், பெருமாளின் திருச் செயல்களை நீ விவரிக்காமல் போனது தான். நீ அதிருப்தியாக இருப்பது அதனால் தான். நீ வெறும் வெளிப்புற விஷயங்களை தான் விவரித்திருக்கிறாய், ஆனால் உட்பொருளானவையை நீ விளக்க தவரியுள்ளாய். ஆக ஆன்மீக குருவான நாரத முனிவரின் வழிகாட்டுதலில் வியாசதேவரின், கடைசி பக்குவமான சமர்ப்பணம் என்பது ஸ்ரீமத் பாகவதம். ஸ்ரீமத் பாகவதம் அமலம் புராணம் யத் வைஷ்ணவானாம் ப்ரியம். ஆகையால் ஸ்ரீமத் பாகவதத்தை வைஷ்ணவர்கள் அமலம் புராணம் எனக் கருதுகிறார்கள். அமலம் புராணம் என்றால்... அமலம் என்றால் எந்த கலப்படமும் இல்லாதது. மற்ற புராணங்கள் எல்லாம் கர்மம், ஞானம், யோகம் இவைகளை சம்பந்தப்பட்டவை. ஆகையால் அவை ஸமலம், பௌதீக அசுத்தங்கள் உடையவை. மற்றும் ஸ்ரீமத்-பாகவதம் வெறும் பக்தியை சம்பந்தப்பட்டது; அதனால் அது அமலம்.


பக்தி என்றால் முழுமுதற் கடவுளுடன் நேரடியாக சம்பந்தப்பட்டது, பக்தன் மற்றும் பகவான், மற்றும் இடையில் இருக்கும் பரிமாற்றம் என்பது தான் பக்தி. பகவான் இருக்கிறார், மற்றும் பக்தன் இருக்கிறான், ஒரு எசமானும் சேவகனும் போல் தான். எசமானுக்கும் சேவகனுக்கும் இடையே இருக்கும் உரவு, அந்த பரிமாற்றம் என்பது சேவை. ஆக சேவை நாம் செய்தே... அது நம் இயல்பான சுபாவம். நாம் பணியாற்றி இருக்கின்றோம்.. ஆனால் அந்த 'சித்த' அதாவது உள்ளம் என்பது பௌதீக விஷயங்களால் அசுத்தப்படுவதால், நாம் வேறு விதமாக பணியாற்ற முயல்கிறோம். சிலர் குடும்பத்துக்கு பணிவிடை செய்வதில் ஆர்வமாக இருப்பார்கள், சிலர் சமுதாயத்திற்கு, தேசத்திற்கு, சிலர் மனித நேயத்திற்கு, அப்படி பலருக்கு. ஆனால் இந்த எல்லா பணிகளும் அசுத்தமானவை. ஆனால் எப்பொழுது கிருஷ்ண உணர்வில் நீ உன் திருப்பணியை தொடங்குகிறாயோ, அது தான் உன்னதமான பணியாகும். அது தான் உன்னதமான வாழ்க்கை. ஆக, இந்த கிருஷ்ண பக்தி இயக்கம், மனித சமுதாயத்தை பணியாற்றுவதின் உன்னத தளத்திற்கு உயர்த்துவதற்கு முயற்சி செய்து வருகிறது. மிக நன்றி.