TA/Prabhupada 0345 - கிருஷ்ணர் ஒவ்வொருவரின் இதயத்திலும் அமர்ந்திருக்கிறார்
Lecture on SB 1.15.1 -- New York, November 29, 1973
நம்மில் ஒவ்வொருவரும் கிருஷ்ணருடன் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கிறோம், மற்றும் கிருஷ்ணர் ஒவ்வொருவரின் இதயத்திலும் அமர்ந்திருக்கிறார். கிருஷ்ணர் மிக கருணையுள்ளவர். அவர் பொருத்து காத்திருக்கிறார், "இந்த அயோக்கியன் எப்போது என்னை திரும்பி பார்க்க போகிறான்." அவர் மிக்க கருணையுள்ளவர். ஆனால் நாம் உயிர்வாழிகள் பெரும் அயோக்கியர்கள். நாம் கிருஷ்ணரைத் தவிர எல்லாத்தையும் முகம் திருப்பி பார்பது உண்டு. இது தான் நம் நிலைமை.. நாம் பல திட்டங்களின் மூலம் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம். ஒவ்வொருவரும் சொந்தமாக திட்டம் போடுகிறார்கள், "இப்படி தான்..." ஆனால் இந்த அயோக்கியர்களுக்கு மகிழ்ச்சியைப் பெறுவதற்கு சரியான வழி என்னவென்று தெரியாது. அது கிருஷ்ணர் தான் என்பது அவர்களுக்கு தெரியாது.
ந தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும் துராஷயா யே பஹிர்-அர்த-மானின (SB 7.5.31)
உங்கள் நாட்டில் உங்களால் பார்க்க முடிகிறது. அவர்கள் பல விதமாக முயற்சி செய்கிறார்கள், பல உயரமான கட்டிடங்கள், பல மோட்டார் வாகனங்கள், பல பெரிய பெரிய நகரங்கள், ஆனால் முகத்தில் சந்தோஷம் இல்லை. ஏனென்றால் எதை தவறிவிட்டோம் என்பது அவர்களுக்கு தெரியாது. அந்த விடப்பட்ட விஷயத்தை நாம் வழங்குகிறோம். "இதோ கிருஷ்ணரை ஏற்றுக்கொள்ளுங்கள். பின்னர் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்." இது தான் நம் கிருஷ்ண உணர்வு. கிருஷ்ணரும் உயிர்வாழியும் நெருக்கமாக இணைந்துருக்கிறார்கள். ஒரு தந்தையும் மகனையும் போல், இரு தோழர்களைப் போல், அல்லது எசமானும் சேவகனையும் போல், அப்படி. நாம் மிகவும் நெருக்கமாக இணைந்துருக்கிறோம். நாம் கிருஷ்ணருடன் நமது நெருக்கமான உரவை மறந்து, இந்த ஜட உலகில் மகிழ்ச்சியை தேட முயற்சி செய்யும் காரணத்தால், நமக்கு இவ்வளவு கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. இது தான் நிலைமை. க்ருஷ்ண புலியா ஜீவ போக வாஞ்சா கரே. நாம் உயிர்வாழிகள் இந்த ஐட உலகில் மகிழ்ச்சி அடைய முயற்சி செய்கிறோம், "நீ எதற்காக இந்த ஜட உலகில் இருக்கிறாய், ஏன் ஆன்மீக உலகில் இல்லை?" ஆன்மீக உலகில் யாரும் போக்தா அதாவது அனுபவிப்பார் ஆக முடியாது. அது வெறும் கடவுள் மட்டுமே,
போக்தாரம் யக்ஞ-தபஸாம் ஸர்வ... (BG 5.29)
அதில் எந்த குழப்பமும் இருப்பதில்லை. அவர்களும் உயிர்வாழிகள் தான், ஆனால் உண்மையான அனுபவிப்பாளர், உரிமையாளர் கிருஷ்ணர் தான் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அது தான் ஆன்மீக சாம்ராஜ்யம். அதுபோலவே, இந்த ஜட உலகிலேயே, நாம் அனுபவிப்பார்கள் அல்ல, கிருஷ்ணர் தான் உண்மையில் அனுபவிப்பார் என தெளிவாக புரிந்துக் கொண்டால், பிறகு அது தான் ஆன்மீக உலகம். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் எல்லோரையும் தெளிவாக புரியவைக்க முயற்சி செய்கிறது, அதாவது நாம் அனுபவிப்பாளர் அல்ல, கிருஷ்ணர் தான் அனுபவிப்பாளர். எடுத்துக்காட்டாக, இந்த முழு உடல் இருக்கிறது, அதில் வயிறு என்பது அனுபவிப்பாளர் ஆகும். கைகள், கால்கள், கண்கள், காதுகள், மூளை இவையெல்லாம், இன்பத்தைத் அளிக்க கூடிய பொருட்களை தேடி, வயிற்றில் ஊட்டுவதில் ஈடுபட்டிருக்கவேண்டும். இது இயல்பானது. அதுபோலவே நாமும் கடவுளின் அதாவது கிருஷ்ணரின் அம்சங்கள். நாம் அனுபவிப்பார்கள் அல்ல.