TA/Prabhupada 0523 - அவதாரம் என்றால் மேம்பட்ட உலகிலிருந்து வருபவர்

Revision as of 12:34, 27 April 2018 by Karunapati (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0523 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968

மதுத்விசன்: பிரபுபாதரே, 'இன்கார்னேஷன்' (ஆங்கிலம்) என்பதற்கும், அவதாரம் என்கிற வார்த்தைக்கும் என்ன வித்தியாசம்?

பிரபுபாதர்: அவதாரம் என்றால் 'இன்கார்னேஷன் ' தான். உங்கள் அகராதியில் 'இன்கார்னேஷன்' என்றால் "எதாவது ஒரு உடலை ஏற்றுக்கொள்வது" என்று அர்த்தம்; அப்படித்தானே? ஆனால் அவதாரம்... வெவ்வேறு தரம் கொண்ட அவதாரங்கள் உள்ளன. அவதாரம் என்றால் வருபவர்... மூல வார்த்தை 'அவதரண' என்பதாகும், இறங்குவது. அவதாரம் என்றால் மேம்பட்ட உலகிலிருந்து வருபவர். அவர்கள் இந்த ஜட உலகத்தின் ஜீவராசிகள் அல்ல. அவர்கள் ஆன்மீக உலகிலிருந்து வருபவர்கள். அவரை அவதாரம் என்பார்கள். மேலும் வெவ்வேறு தரம் உடைய அவதாரங்கள் உள்ளன. அவை ஸக்த்யாவேஷவதாரம், குணாவதாரம், லீலாவதாரம், யுகாவதாரம், மற்றும் பலர் உள்ளனர்.

ஆக அவதாரம் என்றால் நேராக ஆன்மீக உலகிலிருந்து வருபவர். மற்றும் அவதாரம் என்பது ஆங்கிலத்தில் 'இன்கார்னேஷன்' என மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால் 'இன்கார்னேஷன்' இந்த வார்த்தைக்கு அசல் அர்த்தம் "உடல் ஏற்றுக் கொள்பவர்." அப்படிதானே? அந்த 'இன்கார்னேஷன்', எல்லோரும் ஜட உடலை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அவதாரம்... விஷ்ணுவின் அவதாரங்கள் இருக்கின்றன மற்றும் பக்தர்களின் அவதாரங்களும் இருக்கின்றன. வெவ்வேறு தரமுடைய அவதாரங்கள் இருக்கின்றன. சமீபத்தில் வெளியிடப்படும் பகவான் சைதன்யரின் போதனைகள், இப்புத்தகத்தில் நீங்கள் இதைப் பற்றி படிப்பீர்கள்.