TA/Prabhupada 0765 - "எதுவும் எனக்கு சொந்தம் அல்ல,எல்லாம் க்ருஷ்ணருக்கே சொந்தம்",இதை முழுமையாக உணர வேண்டும்

Revision as of 18:06, 13 June 2018 by Vanibot (talk | contribs) (Vanibot #0019: LinkReviser - Revised links and redirected them to the de facto address when redirect exists)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 1.13.11 -- Geneva, June 2, 1974

அகிந்சன, அகிந்சன என்றால் என்த லௌகீக பொருளையும் சொந்தம் கொண்டாடாதவற்கள். அகிந்சன-கோசரா. மஹாராணீ குன்தீ, ஸ்ரீ க்ருஷ்ணரை வரவழைக்கும் பொழுது, கூறினாள், " என் அன்புள்ள க்ருஷ்ணா, நீ அகிந்சன-கோசரா (பாகவதம் 1.8.26) உன்னை, ஒரு லௌகீக விஷயமும் சொந்தம் உடையாதவனால் மற்றுமே உணர முடியும். அப்பொழுது நீ எங்களுக்கு இவ்வளவு செல்வத்தை அளித்திருக்கிறாயே. எங்களால் எப்படி உன்னை புறிந்து கொள்ள முடியும். குந்தீ வருத்தப்பட்டாள், " எங்கள் கஷ்ட காலத்தில், நீ எப்பொழுதும் எங்கள் கூடவே இருந்தாய். இப்பொ நீ எங்களுக்கு ஸாம்ராஜ்யம் அனைத்தையும் கொடுத்திருக்கிறாய். மேலும் நீ எங்களை விட்டு த்வாரிகைக்கு செல்கிறாயே. இது என்ன க்ருஷ்ணா ? எங்களை மீண்டும் பழைய கஷ்டமான நிலைக்கே எடுத்து செல், அதுவே சிறந்தது ஏன் என்றால் நீ எங்கள் கூடவே இருக்கலாம். அகிந்சன-கோசரா. க்ருஷ்ணா என்றால் அகிந்சன-கோசரா. யார் ஒருவருக்கு லௌகீக வாழ்க்கையின் சுகம் அனுபவிக்க இஷ்டமோ, முழுமையாக க்ருஷ்ண உணர்வை அடைவது சாத்தியம் அல்ல. இது மிக ரகசியமானது. அதனால் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு சொன்னார், நிஷ்கிந்சனஸ்ய பகவத் பஜநோன்முகஸ்ய (சைதன்ய சரிதம் மத்ய 11.8) பகவத்-பஜனா, க்ருஷ்ண பாவனை பெற்ற பக்தன் ஆவது, நிஷ்கிந்சனஸ்ய, யார் ஒருவன் இந்த லௌகீக உலகில் எதன் மேலையும் சொந்தம் கொண்டாடுவது இல்லையோ, அவனுக்காக. அதற்கு அர்த்தம் வருமையில் தவிப்பது அல்ல. இல்லவே இல்லை. ஒருவனுக்கு, " எதுவும் எனக்கு சொந்தம் அல்ல, எல்லாம் க்ருஷ்ணருக்கே சொந்தம்" , இது முழுமையாக புரிய வேண்டும். நான் வெறும் அவன் தாஸன், அவ்வளவு தான். " இதை தான் அகிந்சனா என்பாற்கள். மேலும், " க்ருஷ்ணரை முன்னே வைத்து, கொஞ்சம் லௌகீக ஆசைகளையும் அநுபவிப்போமே," அதுவும் ஏமாற்றுதல் தான். " எல்லாம் க்ருஷ்ணனுடையது, நமக்கு சொந்தம் ஒன்றும் இல்லை. " இந்த உணர்வு பரிபூரணமாக இருக்க வேண்டும். அப்போழுது தான் க்ருஷ்ணர் உங்கள் நண்பர் ஆவார். தங்களின் மிகச்சிறந்த நலன் எவ்வாரு ஆகவேண்டும், இதற்க்கான பொருப்பை அவரே ஏற்று கொள்கிறார். தேசாம் சதத யுக்தானாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி (கீதை 10.10) ப்ரீதி பூர்வகம். இது ஒரு மிக சிறந்த தீர்மானம். " க்ருஷ்ணா, நான் உன்னை மற்றுமே விரும்புகிரேன். வேரு எதையும் அல்ல. எதையுமே அல்ல. " ந தனம் ந ஜனம் ந சுந்தரீம் கவிதாம் வா ஜகதீச (சைதன்ய சரிதம் 20.29) இது தான் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவின் கற்பித்தல். ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு இந்த தத்துவத்தை மீண்டும் மீண்டும் கற்ப்பித்திருக்கிறார். நிஷ்கிந்சனஸ்ய பகவத் பஜன. பகவத் பஜன இதற்க்காக அவரே நிஷ்கிந்சனை ஆனார். அவர் அந்த க்ருஷ்ணரே தான், சகல செல்வங்களுக்கும் அதிபதி. த்யக்த்வா ஸுரேப்ஸிதா: , ஸுதுஸ்த்யஜா-ஸுரேப்ஸித-ராஜ்ய-லக்ஷ்மீம் (பாகவதம் 11.5.34). ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவின் மனைவி மிக அதிக அழகானவள். செல்வத்தின் தாயார், விஷ்ணு ப்ரியா, லக்ஷமி ப்ரியா. ஆனால் இந்த அனைத்து உலகின் நலனை கூறி, அவர் க்ருஷ்ணராக இருந்தாலும், அவர் நமக்கு உதாரணம் காட்டி இருக்கிறார். அவருடைய இருபத்தி நான்காவது வயதில், அவர் சன்யாசம் ஏற்றுக்கொண்டார்.