TA/Prabhupada 0150 - நாம் திருநாம ஜபத்தை கைவிடக் கூடாது

Revision as of 06:20, 30 January 2019 by Anurag (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0150 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 6.1.15 -- Denver, June 28, 1975

அதாபி தே தேவ பதாம்புஜ-த்வயம் ப்ரஸாத-லேஷானுக்ருஹீத ஏவ ஹி, ஜானாதி தத்வம் ந சான்ய ஏகோ அபி சிரம் விசின்வன் (ஸ்ரீமத் பாகவதம் 10.14.29). கிருஷ்ணரின் காரணமற்ற கருணையால் அனுக்கிரகம் பெற்றவர்களால் கிருஷ்ணரை புரிந்துகொள்ள முடியும். மற்றவர்கள், ந சான்ய ஏகோ அபி சிரம் விசின்வன். சிரம் என்றால் நீண்ட காலத்திற்கு, பற்பல வருடங்களுக்கு. கடவுள் என்றால் என்ன, அதாவது கிருஷ்ணர் என்றால் என்ன, என்பதை வெறும் ஊகித்தால், அந்த செயல்முறை நமக்கு உதவாது. இதற்கு சமமான பல வேத வாக்கியங்கள் இருக்கின்றன:

அத: ஸ்ரீ-கிருஷ்ண-நாமாதி ந பவத் க்ரஹ்யம் இந்திரியை
சேவோன்முகி ஹி ஜிஹ்வாதௌ ஸ்வயம் ஏவ ஸ்புரதி அத
([[Vanisource:CC Madhya 17.136|சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 17.136).

கிருஷ்ணர், அவர் பெயர், அவர் புகழ், அவரது குணங்கள், அவர் செயல்கள்... ஸ்ரீ-கிருஷ்ண-நாமாதி ந பவத்... நாமாதி என்றால் "திருநாமத்திலிருந்து ஆரம்பித்து." ஆக சாத்தியமில்லை... நாம் பௌதீக தளத்திலேயே நம்மை வைத்திருந்தால், பிறகு ஆயிரம் வருடங்களுக்கு நாம் ஜபித்தாலும், விடுபட வாய்ப்பு இருப்பது கஷ்டம் தான். அதற்கு நாமபராதம் எனப் பெயர். அபராதங்களுடன் ஜெபித்தாலும், திருநாமத்தின் அபார சக்தியால், படிப்படியாக ஒருவன் தூய்மைப்படுத்தப்படுவான் என்பதும் உண்மையே. ஆகையினால் நாம் திருநாம ஜபத்தை கைவிடக் கூடாது.

எந்த சூழ்நிலையிலும், ஹரே கிருஷ்ண மந்திரத்தை நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். ஆனால் எச்சரிக்கை என்னவென்றால், நாம் நம்மை பௌதீக தளத்திலேயே வைத்திருந்தால், பிறகு கிருஷ்ணரை, அவருடைய திருநாமத்தை, அவரது குணங்களை, அவருடைய திருமேனியை, அவரது திருவிளையாடலை புரிந்துகொள்வது சாத்தியம் ஆகாது. அது சாத்தியம் ஆகாது. ஆக அந்த செயல்முறை தான் பக்தி. மேலும் நீங்கள் கிருஷ்ணரை புரிந்துகொள்ளும் நிலைக்கு வந்தவுடனேயே, ஆன்மீக உலகத்திற்கு செல்வதற்கு பொருத்தமானவர் ஆகிறீர்கள். அதுதான்.... கிருஷ்ணர் பகவத்-கீதையிலும் கூறுகிறார், த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி (பகவத் கீதை 4.9).