TA/Prabhupada 0402 - விபாவரி ஷேஷ பொருள்விளக்கம் பாகம் 1

Revision as of 06:44, 31 January 2019 by Anurag (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0402 - in all Languages Category:TA-Quotes - Unknown Date Category:TA-Quot...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Purport to Vibhavari Sesa

இது பக்திவினோத் தாகுர் பாடிய ஒரு பாடல். அவர் அனைவரையும் காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க கேட்கிறார். விபாவரி ஷேஷ, இறவு முடிந்தது, ஆலோக-ப்ரவேஷ, சூரிய வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது, இப்பொழுது நீ எழுந்திருக்க வேண்டும். நித்ரா சாரி உட ஜுவ, இனிமேல் தூங்காதே. அது தான் வைதீக வாழ்க்கை. சூரிய உதயம் ஆனபிறகு உறங்கக்கூடாது. சூரியன் உதயம் ஆவதற்கு முன்பே எழுந்திருக்க வேண்டும். அது ஆரோக்கியமானதும் கூட. கட்டிலிலிருந்து எழுந்தவுடன், பகவானின் திருநாமத்தை ஜெபிக்க வேண்டும். இங்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது, போலோ ஹரி ஹரி, இப்பொழுது நீ ஹரே கிருஷ்ண மந்திரத்தை, முகுந்த் முராரி என்ற கிருஷ்ணரின் வெவ்வேறு திருநாமங்களை, ஜெபிக்க வேண்டும். முகுந்த என்றால் மோட்சம் அளிப்பவன். முராரி, முராரி என்றால் முர எனும் அசுரனுக்கு எதிரியானவன், அதாவது கிருஷ்ணர். ராம என்பது இன்னொரு பெயர், பிரபலமானது, ராம, கிருஷ்ண. ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்பது கிருஷ்ணரின் இன்னொரு அவதாரத்தின் பெயர். அதுபோலவே ந்ரஸிம்ஹ, நர-ஹரி, சிங்கம் பாதி, மனிதன் பாதி, ந்ரஸிம்ஹ தேவர். வாமன அவதாரம், ந்ரஸிம்ஹ வாமன, ஸ்ரீ-மதுஸூதன. மதுஸூதன, மது மற்றும் கைடபன் என இரண்டு அசுரர்கள் இருந்தார்கள். படைப்பிற்கு பிறகு இவர்கள் பிரம்மதேவரை விழுங்க வந்தார்கள். ஆகவே அவர்கள் கொல்லப்பட்டனர். அதனால் கிருஷ்ணரின் மற்றொரு பெயர் மதுஸூதன. பகவத்-கீதையில் பல இடங்களில் மதுஸூதன என்ற பெயரை காணலாம். மதுஸூதன என்றால் மது என்றவனின் எதிரி. கிருஷ்ணர் நண்பனாகவும் இருக்கலாம் எதிரியாகவும் இருக்கலாம். உண்மையில் அவர் அனைவருக்கும் நண்பன் தான் ஆனால் கிருஷ்ணரை எதிரியாக பார்ப்பவருக்கு அவர் ஒரு எதிரியை போல் தோன்றுவார். அவர் யாருக்கும் எதிரி கிடையாது, ஆனால் அவரை எதிரியாக பார்க்க விரும்புவனுத்கு அவரும் எதிரியைப் போன்ற தோற்றம் அளிப்பார். அது அவரது பூரணத்துவம். அரக்கர்கள் கிருஷ்ணரை எதிரியாக பார்க்க விரும்புவார்கள். எனவே, அரக்கர்களின் ஆசையை ஏற்று, அவன் முன்பு எதிரியாக தோன்றி, அவனை வதம் செய்து, அவனுக்கு மோக்ஷம் அளிப்பார். அதுதான் கிருஷ்ணரின் பூரணத்துவம் அடங்கிய லீலை, மதுஸூதன ப்ரஜேந்திர-நந்தன ஷ்யாம. வாஸ்தவத்தில் கடவுளுக்கு பெயர் எதுவும் கிடையாது, ஆனால் அவரது லீலைகளை பொறுத்து அவருக்கு பெயர்கள் அளிக்கப்படுகின்றன. உதாரணமாக மது என்ற அரக்கனை வதம் செய்ததால் அவருக்கு மதுஸூதனன் எனப் பெயர். அதுபோலவே, அவர் பர்ஜேந்திர-நந்தன என்றழைக்கப்படுகிறார், அதாவது வ்ரஜ, விருந்தாவன கிராமத்தின் மகனானவன், ஏனென்றால் அவர் யஷோதா மற்றும் நந்த மஹாராஜரின் மகனாக தோன்றினார், ப்ரஜேந்திர-நந்தன. ஷ்யாம, அவரது திருமேனி வண்ணம் கருமையானது. எனவே அவர் ஷ்யாமஸுந்தர என்றழைக்கப்படுகிறார். பூதனா-காதன, கைடப-ஷாதன, ஜய தஷரதி-ராம. அவர் பூதனா என்ற ராட்சசியை அழித்ததால், அவருக்கு பூதனா-காதன எனப் பெயர். காதன என்றால் கொல்பவன். கைடப-ஷாதன, அவர் எல்லா விதமான ஆபத்தானவர்களையும் தண்டிப்பவர். ஜய-தாஷரதி-ராம. இராவணனை வதம் செய்த சம்பவத்தை ஒட்டி, அவர் ஜய தாஷரதி என புகழப்படுகிறார். தாஷரதி என்றால்: அவர் தந்தையின் பெயர் தஷரத, ஆக அவர் பெயர் தாஷரதி, தாஷரதி-ராம. யஷோதா-துலால கோவிந்த-கோபால. யஷோதா-துலால என்றால் யஷோதா தாயாரின் செல்ல மகனானவன். கோவிந்த-கோபால, மற்றும் அவர் ஒரு மாட்டிடையச் சிறுவனாக இருந்தார், கோவிந்த, பசுவிற்கு இன்பம் அளிப்பவர். வ்ருந்தாவன-புரந்தர, விருந்தாவன பூமியின் எஜமான் ஆனவர். அவர் விருந்தாவன வாசிகள் அனைவரையும் ஈர்க்கும் மையமாக விளங்குகிறார். ராவணாந்தகர கோபி-ப்ரிய-ஜன, அவர் கோபியர்களுக்கு மிகவும் பிரியமானவர், கோபி-ப்ரிய. ராதிகா-ரமண, மற்றும் அவர் எப்பொழுதும் ராதாராணியின் சகவாசத்தில் பேரின்பத்தை பெறுவார், ஆகையால் அவர் பெயர் ராதிகா-ரமண. புவன-ஸுந்தர-பர. அவர் பல கோபியர்களை கவர்ந்தார், அப்படி என்றால் அவர் முழு பிரம்மாண்டத்தையும் கவரக்கூடியவர். இந்த பிரம்மாண்டத்தில் மட்டும் அல்ல, எங்கேயும் கிருஷ்ணரைவிட மனம் கவரக்கூடியவர் யாரும் இல்லை. எனவே அவருக்கு புவன-ஸுந்தர-பர எனப் பெயர். பர என்றால் தலைவன். ராவணாந்தகர, மாகன-தஸ்கர, கோபி-ஜன-வஸ்திர-ஹாரி.