TA/Prabhupada 0502 - மூடக் கருத்துக்களை விடுத்து, கிருஷ்ணபக்தி என்னும் பரந்த வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்

Revision as of 11:22, 27 November 2019 by MaliniKaruna (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0502 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.15 -- Hyderabad, November 21, 1972

So the Prahlāda Mahārāja advising that "You give up all this nonsense conceptions" Vanaṁ gato yad dharim āśrayeta (SB 7.5.5). Just vanaṁ gataḥ, means just become free from this conception, gṛham andha-kūpam conception of life. Take the broader life of Kṛṣṇa consciousness. Then you'll be happy. Hitvātma-pātaṁ gṛham andha-kūpaṁ vanaṁ gato yad dharim āśrayeta (SB 7.5.5). Harim āśrayeta. The real business is harim āśrayeta. Vanaṁ gataḥ. Vanaṁ gataḥ means go to the forest. Formerly, after gṛhastha life, vānaprastha life, sannyāsa life, they used to live in the forest. But going to the forest is not the main purpose of life. Because in the forest there are many animals. Does it mean they are advanced in spiritual life? That is called markaṭa-vairāgya. Markaṭa-vairāgya means "monkey renunciation." Monkey is naked. Nāga-bābā. Naked. And eats fruit, monkey, and lives underneath a tree or on the tree. But he has got at least three dozen wives. So this markaṭa-vairāgya, this kind of renunciation, has no value. Real renunciation. Real renunciation means you have to give up the andha-kūpa life and take shelter of Kṛṣṇa, harim āśrayeta. If you take shelter of Kṛṣṇa, then you can give up this, all this "ism" life. Otherwise, it is not possible; you'll be entrapped by this "ism" life. So hitvātma-pātaṁ gṛham andha-kūpaṁ vanaṁ gato yad dharim āśrayeta (SB 7.5.5). Not to give up... If you give up something, you must take up something. Otherwise, it will be disturbed. Take up. That is recommendation: paraṁ dṛṣṭvā nivartate (BG 2.59). You can give up your family life, social life, political life, this life, that life when you take Kṛṣṇa conscious life. Otherwise, it is not possible. Otherwise, you must have to take some of this life. There is no question of your freedom. There is no question of freedom from anxieties. This is the way.

So here the same thing, that tattva-darśibhiḥ, those who are actually seer of the Absolute Truth... athāto brahma jijñāsā, as it is said in the Vedānta-sūtra... Just yesterday, one boy was asking me: "What is the Vedānta? Vedānta, what is the meaning of Vedānta?" It is very nice, it is very easy. Veda means knowledge, and anta means ultimate. So Vedānta means ultimate knowledge. So ultimate knowledge is Kṛṣṇa. Kṛṣṇa says, vedaiś ca sarvair aham eva vedyo vedānta-kṛd veda-vid ca aham. He is the maker of Vedānta and He is the knower of Vedānta. Unless He is knower of Vedānta, how He can write Vedānta? Actually, Vedānta philosophy is written by Vyāsadeva, incarnation of Kṛṣṇa. So He's vedānta-kṛt. And He's vedānta-vit also. So the question was whether Vedānta means advaita-vāda or dvaita-vāda. So it is very easy to understand. The first aphorism of Vedānta: athāto brahma jijñāsā, to inquire about Brahman, the Absolute Truth. Now the, to inquire where? If you want to inquire, you must go to somebody who knows the thing. Therefore, immediately, in the very beginning of the Vedānta-sūtra, there is duality, that one must inquire, and one must answer. Athāto brahma jijñāsā. So in Vedānta-sūtra, how you can it is advaita-vāda? It is dvaita-vāda, from the very beginning. Athāto brahma jijñāsā. One must inquire what is Brahman, and one must reply, or the spiritual master, or the disciple, that it is dual. How you can say it is advaita-vāda? So we have to study in this way. Here it is said, tattva-darśibhiḥ. Tattva-darśibhiḥ means vedānta-vit, one who knows Vedānta. Janmādy asya yataḥ (SB 1.1.1). One who knows the Absolute Truth, from where everything begins. Janmādy asya yataḥ. That is the beginning of Śrīmad-Bhāgavatam.

====================================

ஆக, "இந்த தேவையற்ற கருத்துக்களை எல்லாம் கை விட்டு விடுங்கள்" என்று பிரகலாத மகாராஜர் வலியுறுத்துவது, வனம் கதோ யத் தரிம் ஆஷ்ரயேத (SB 7.5.5). வனம் கதோ என்பது, என்பது இந்தக் கருத்தில் இருந்து விடுபடுவது கிரக அண்ட ரூபம் என்னும் வாழ்க்கையைப் பற்றிய கருத்திலிருந்து. கிருஷ்ண பக்தி என்னும் அகன்ற வாழ்க்கையினை எடுத்துக்கொள்ளுங்கள் அப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஹித்வாத்ம-பாதம் க்ருஹம் அந்த-கூபம் வனம் கதோ யத் தரிம் ஆஷ்ரயேத (SB 7.5.5). ஹரிம் ஆஷ்ரயேத. நம் உண்மையான வேலை ஹரிம் ஆஷ்ரயேத. வனம் கத:. வனம் கத: என்றால் காட்டுக்குச் செல் என்று அர்த்தம் முன்பெல்லாம் கிரகஸ்த வாழ்க்கையானாலும் வானப்பிரஸ்த வாழ்க்கையானாலும் சந்நியாச வாழ்க்கையானாலும் காட்டிலேயே வாழ்ந்தார்கள். ஆனால் காட்டுக்குச் செல்வது அல்ல வாழ்க்கையின் குறிக்கோள். காட்டில் அதிக விலங்குகள் இருப்பதால் அவர்கள் ஆன்மீக வாழ்வில் உயர்ந்தவர்கள் என்றா அர்த்தம்? இதற்குப் பெயர்தான் மர்கட-வைராக்ய. மர்கட-வைராக்ய என்றால் குரங்கின் துறவறம் என்று பொருள் குரங்கு ஆடையின்றி இருக்கும். நாக பாபா என்றால் ஆடையின்றி இருத்தல் பழங்களை தின்று மரங்களுக்கு கீழேயும் மேலேயும் வாழும் குரங்கு ஆனால் அதற்கு குறைந்தபட்சம் மூன்று டஜன் மனைவியர்கள் உண்டு. எனவே இத்தகைய மர்கட-வைராக்ய துறவறத்தினால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. உண்மையான துறவறம். உண்மையான துறவறம் என்பது அந்தகூப வாழ்க்கையைக் கைவிட்டு கிருஷ்ணரிடம் சரணடைவது, ஹரிம் ஆஷ்ரயேத. கிருஷ்ணரிடம் சரவணன் அடைவதன் மூலம் எல்லாவித வாதங்களில் இருந்தும் விடுபடமுடியும். இல்லையேல் அது சாத்தியப்படாது இந்த வாதங்களிலேயே அகப்பட்டு தவிப்போம். எனவே, ஹித்வாத்ம-பாதம் க்ருஹம் அந்த-கூபம் வனம் கதோ யத் தரிம் ஆஷ்ரயேத (SB 7.5.5). கைவிட வேண்டியது இல்லை. ஒன்றை கைவிட்டால் மற்றொன்றை எடுத்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் அதனால் பாதிப்பு ஏற்படும் எனவே எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவே பரிந்துரைக்கப்படுகிறது: பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே (BG 2.59). குடும்ப வாழ்க்கை சமூக வாழ்க்கை அரசியல் வாழ்க்கை இந்த வாழ்க்கை அந்த வாழ்க்கை அனைத்தையும் கைவிடலாம் நீங்கள் பக்தி வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் அது சாத்தியப்படாது. இவற்றில் ஏதாவது ஒரு வாழ்க்கையை எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அது இல்லாமல் விடுதலை என்ற கேள்விக்கே இடமில்லை. கவலைகளிலிருந்து விடுதலை என்பதும் இல்லை. இதுதான் வழி.

எனவே இங்கும் அதுவேதான் தத்த்வ-தர்ஷிபி:, யாரொருவர் மெய்ஞானத்தை உணர்கிறாரோ அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா, வேதாந்த சூத்திரத்தில் கூறியுள்ளபடி..... நேற்றுதான் என்னை ஒரு சிறுவன் கேட்டான்: "வேதாந்தம் என்பது என்ன? வேதாந்தம் என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?" அது மிகவும் அருமையானது எளிமையானது. வேதம் என்றால் அறிவு அந்தம் என்றால் இறுதி முடிவு எனவே வேதாந்தம் என்றால் இறுதியான முடிவான அறிவு. முடிவான அறிவே கிருஷ்ணர். கிருஷ்ணர் சொல்கிறார், வேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யோ வேதாந்த-க்ருத் வேத-வித் ச அஹம். அவரே வேதாந்தத்தை செய்தவர் வேதாந்தத்தை அறிந்தவர். வேதாந்தத்தை அறிந்தவர் இல்லை என்றால் அவரால் எப்படி வேதாந்தத்தை எழுத முடியும்? உண்மையில் வேதாந்த தத்துவத்தை எழுதியவர் கிருஷ்ணரின் அவதாரமான வியாச தேவர். எனவே அவர் வேதாந்தக் க்ருத் மற்றும் வேதாந்த வித். எனவே கேள்வி என்னவென்றால் வேதாந்தம் என்பது அத்வைத வாதமா துவைத்த வாதமா என்பதுதான். அதுவும் புரிந்து கொள்வதற்கு மிக எளிதானது. வேதாந்தத்தைப் பற்றிய முதல் பழமொழி என்னவென்றால்: அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா, பிரம்மனை பற்றி மெய்ஞானத்தைப் பற்றி கண்டறிதல் அதை எங்கு கண்டறிவது? அதைக் கண்டறிய வேண்டுமானால் அதை அறிந்த ஒருவரிடம் தான் செல்ல வேண்டும். வேதாந்த சூத்திரத்தின் தொடக்கத்திலேயே இருமை தன்மை உள்ளது, அதாவது ஒருவர் கேட்க வேண்டும் ஒருவர் சொல்ல வேண்டும். அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா, வேதாந்த சூத்திரம் அது அவைத்த வாதம் என்று எப்படிச் சொல்வது? அது துவைத்து வாதம்தான் தொடக்கத்தில் இருந்தே. அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா. பிரம்மன் என்றால் என்ன என்று கேட்டு அதற்கான விடையும் அறிய வேண்டும். அது குருவாக இருந்தாலும் சிஷ்யனாக இருந்தாலும் அதுதான் இதுவே இருமை தன்மை. அது அத்வைத்த வாதம் என்று எப்படிச் சொல்வது? இவ்வாறுதான் நாம் படிக்க வேண்டும். அதனால்தான் இங்கு என்று சொல்லப்படுகிறது: தத்த்வ-தர்ஷிபி:. தத்த்வ-தர்ஷிபி:. என்றால் வேதாந்த வித் வேதாந்தத்தை அறிந்தவர். ஜன்மாத்யஸ்ய யத: (SB 1.1.1). மெய்ஞானத்தை உணர்ந்தவர், எங்கு அனைத்தும் தொடங்குகிறது என்பதை உணர்ந்தவர் ஆவார் ஜன்மாத்யஸ்ய யத: இதுவே ஸ்ரீமத் பாகவதத்தின் தொடக்கம்.