TA/Prabhupada 0403 - விபாவரி ஷேஷ பொருள்விளக்கம் பாகம் 2

Revision as of 12:31, 13 April 2020 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0403 - in all Languages Category:TA-Quotes - Unknown Date Category:TA-Quot...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Purport to Vibhavari Sesa

அவர் பகவான் ராமச்சந்திரராக அவதரித்த பொழுது, இராவணனை வதம் செய்தார், எனவே ராவணாந்தகர. மாகன-தஸ்கர, மற்றும் விருந்தாவனத்தில் அவரை வெண்ணை திருடனாக அறிவார்கள். அவரது குழந்தைப்பருவ லீலையில், அவர் கோபியர்களின் பானைகளிலிருந்து வெண்ணையை திருடுவார். அது அவருக்கு இன்பமூட்டும் ஒரு பொழுதுபோக்காக இருந்தது, எனவே அவர் மாகன-தஸ்கர என்றழைக்கப்படுகிறார், மாகனசோர. கோபி-ஜன-வஸ்திர-ஹாரி, மற்றும் அவர் கோபியர்களின் ஆடைகளை, அவர்கள் குளிக்கும் பொழுது எடுத்ததுச் சென்றார். இது மிகவும் எச்சரிக்கைகுறிய இரகசியமான விஷயம். உண்மையில் கோபியர்கள் கிருஷ்ணரை விரும்பினார்கள். அவர்கள் காத்யாயனி அம்மனிடம் வேண்டினார்கள்; கிருஷ்ணர், தன் சமவயதான பெண்களுக்கு மிகவும் மனம் கவரக்கூடியவராக தோன்றியதால், அவர்கள் கிருஷ்ணர் தனக்கு கணவராக இருக்கவேண்டும் என விரும்பினார்கள். வெளித்தோற்றத்தில், கிருஷ்ணர் சமவயதினராக இருந்தார், ஆனால் எப்படி அவரால் எல்லா கோபியர்களுக்கும் கணவனாக இருக்கமுடியும்? ஆனால் அவர் ஏற்றார். கோபியர்கள் கிருஷ்ணருக்கு மனைவியாக இருக்க விரும்பியதால், கிருஷ்ணரும் அவர்களின் வேண்டுகோளை ஏற்றார். அவர்களுக்கு கருணை காட்டுவதற்காக, அவர் ஆடைகளை திருடினார். மேலும் ஒரு கணவனானவன் மனைவியின் ஆடைகளுக்கு சொந்தக்காரன் ஆவான். அந்த உரிமையில் அவர் அப்படி செய்தார். வேறு யாரும் அவற்றை அணுகமுடியாது. ஆக அதுதான் நோக்கம், ஆனால் பொதுமக்கள் இதை அறியமாட்டார்கள். ஆகவே கிருஷ்ண-லீலைகளை தன்னுணர்வடைந்த ஒருவரிடமிருந்து கேட்கவேண்டும், இல்லாவிட்டால் இந்த பாகத்தை தவிர்ப்பதே நல்லது. ஏனென்றால் நாம் அதை தவறாக புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. கிருஷ்ணர் ஆடைகளை திருடிச் சென்றதால், அவர் மிகவும் தாழ்வடைந்தவர், பெண் ஆசை கொண்டவர், அப்படி. ஆனால் அப்படி கிடையாது. அவர் முழுமுதற் கடவுள். அவர் ஒவ்வொரு பக்தனின் ஆசைகளையும் நிறைவேற்றுவார். ஆக கோபியர்களை ஆடையில்லாமல் பார்க்க கிருஷ்ணருக்கு ஆசை ஒன்றும் கிடையாது. ஆனால் அவர்கள் மனைவி ஆக விரும்பியதால், அவர் அவர்களின் ஆசையை நிறைவேற்றினார். ஒரு ஒப்புதலாக, "ஆம், நான் உங்களுக்கு கணவன், உங்கள் ஆடைகளுக்கு சொந்தக்காரன். இதோ உங்களது ஆடைகளை உங்களுக்கே தருகிறேன். இவையை எடுத்து வீட்டிற்கு திரும்பிச் செல்லுங்கள்." எனவே அவர் கோபி-ஜன-வஸ்திர-ஹரி என்றழைக்கப்படுகிறார். ப்ரஜேர ராகால, கோப-வ்ருந்த-பால, சித்த-ஹாரி வம்ஸி-தாரி. ப்ரஜேர-ராகால, விருந்தாவனத்தின் இடையச் சிறுவன், மற்றும் கோப-வ்ருந்த-பால, மாட்டிடையர்களை எப்படி திருப்திப்படுத்துவது என்பதே அவரது நோக்கம். அவரது தந்தை, உறவினர்கள் அனைவரும் பசுக்களை வளர்த்தார்கள். அவர்களை திருப்தி படுத்தியதால் அவர் கோப-வ்ருந்த-பால. சித்த-ஹாரி வம்ஸி-தாரி, மேலும் அவர் புல்லாங்குழலை வாசித்து, அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்ததால் அவர் சித்த-ஹாரி. அவர் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தார். யோகேந்திர-வந்தன, கிருஷ்ணர் விருந்தாவனத்தில் ஒரு மாட்டிடைய சிறுவனைப் போல் விளையாடுகிறார். ஒரு கிராமத்து சிறுவனைப் போல் தன் நண்பர்களுடன் வேடிக்கையாக பேசிக்கொண்டு இருப்பார். அப்படி இருந்தாலும், அவர் யோதீந்திர-வந்தன. யோகீந்திர என்றால் மிகச்சிறந்த யோகி, தெய்வீக திறன்கள் கொண்டவர். த்யானவஸ்தித-தத்-கதேன மனஸா பஷ்யந்தி யம் யோகினஹ (ஸ்ரீமத் பாகவதம் 12.13.1). யோகினஹ என்பவர்கள் தியானத்தால் யாரை தேடுகிறார்கள்? இந்த கிருஷ்ணரை தான். அவர்கள் கிருஷ்ணரை தேட முயற்சி செய்கிறார்கள். ஆக அவர்கள் தன் மனதை கிருஷ்ணரின்மேல் செலுத்தி தியானம் செய்யவேண்டும் என்ற விவரத்தை புரிந்துகொள்ளாமல் இருக்கும்வரை, மர்ம சக்திகளை அடையும் அவர்களது யோக கொள்கை திசைத் தவறி போனதாகும். யோகினாம் அபி ஸர்வேஷாம் மத்-கத-அந்தர (பகவத்-கீதை 6.47). சிறந்த யோகியானவன் எப்பொழுதும் கிருஷ்ணரை இதயத்தில் வைத்திருக்கவேண்டும். அது தான் யோகத்தின் பக்குவமான நிலை. ஆகையால் அவர் பெயர் யோதீந்திர-வந்தன, ஷ்ரீ நந்த-நந்தன, ப்ரஜ-ஜன-பய-ஹாரி. அவர் பெரிய யோகீகளால் வழிபடப்பட்டிருந்தாலும், அவர் விருந்தாவனத்தில் நந்த மஹாராஜரின் மகனாக வாழ்கிறார். மற்றும் விருந்தாவன வாசிகளும், கிருஷ்ணரின் இரட்சிப்பில் தாம் பாதுகாப்பாக இருப்பதாக நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நவீன நீரத, ரூப மனோஹர, மோஹன-வம்ஸி-விஹாரி. நவீன நீரத, நீரத என்றால் மேகம், அவர் மேனி வண்ணம் ஒரு புதிய மேகத்தைப் போல் இருக்கிறது. புதிய, கரும் மேகம், ரூப. அப்படி இருந்தும் அவர் மிகவும் அழகாக தோன்றுகிறார். இந்த பௌதிக உலகில் கருப்பு நிறம் என்பது அவ்வளவு அழகானதாக கருதப்படுவதில்லை, ஆனால் அவர் திருமேனி திவ்யமானது, அதனால் அவர் கருமையான நிறம் கொண்டவராக இருந்தாலும், அவர் பிரம்மாண்டத்தையே கவரக்கூடியவர். ரூப மனோஹர. மோஹன-வம்ஸி-விஹாரி, அவர் வெறும் தனது புல்லாங்குழலுடன் நின்றாலே போதும், அவர் திருமேனி கருமையாக இருந்தாலும், அவர் அனைவருக்கும் மனம் கவரக்கூடியவராக தோன்றுகிறார். யஷோதா-நந்தன, கம்ஸ-நிஷூதன, யஷோதாவின் மகனாக அவர் கொண்டாடப்படுகிறார், அவரே கம்ஸனை வதம் செய்தவர், மற்றும் நிகுஞ்ஜ-ராஸ-விலாஸி, மேலும் அவர் நிகுஞ்ஜ, வம்ஸீ-வடம் எனும் தோட்டத்தில் தனது ராஸ நடனத்தை ஆடுவார். கதம்ப-கானன, ராஸ-பராயண, பல கதம்ப மரங்கள் இருக்கின்றன. கதம்ப என்பது குறிப்பாக விருந்தாவனத்தில் பூக்கும் ஒரு பூ வகை. மிகவும் நறுமணமுள்ள, அழகான, கெட்டியான ஒரு பூ. ஆக கதம்ப-கானன, இந்த கதம்ப மரத்தடியில் அவர் தனது ராஸ நடனத்தை மகிழ்ச்சியாக ஆடுவார். ஆனந்த-வர்தன ப்ரேம-நிகேதன, புல-ஷர-யோஜக காம, இவ்வாறு அவர் கோபியர்களின் காமத்தை, திவ்யமான ஆனந்தத்தை பெருகச் செய்தார். ஆனந்த-வர்தன ப்ரேம-நிகேதன, ஏனென்றால் அவர் எல்லா ஆனந்த்திற்கும் இருப்பிடமாக விளங்குகிறார். அவர் எல்லா ஆனந்த்திற்கும் இருப்பிடமாக இருப்பதால், கோபியர்களும் அந்த இன்பத்தை பெற அவரிடம் வருவார்கள். தண்ணீர் இருக்கும் ஏரியிடம் நாம் தண்ணீரை பிடிக்க செல்வது போல் தான். அதுபோலவே, நமக்கு உண்மையான, ஆனந்தமயமான வாழ்வு வேண்டியிருந்தால், நாம் அதை இன்பத்தின் இருப்பிடமான கிருஷ்ணரிடமிருந்து பெறவேண்டும். ஆனந்த-வர்தன, அந்த இன்பம் பெருகத் தான் செய்யும். பௌதிக இன்பம் குறைந்துவிடும். அதை நீண்ட காலமாக அனுபவிக்க முடியாது, அது குறைந்துவிடும். ஆனால் ஆன்மீக இன்பம், அதையே இன்பத்தின் இருப்பிடமான கிருஷ்ணரிடமிருந்து பெற்றால், அது பெருகும். உனக்கு கிடைக்கும் இன்பத்தின் திறம் பெருகும், உனக்கு கிடைக்கும் இன்பம் மென்மேலும் அதிகரிக்கும். அந்த இன்பத்தை பெறுவதற்கான ஆசை அதிகரக்க, அந்த ஆனந்தத்தின் வழங்கலும் இடைவிடாமல் பெருகும். அதற்கு ஒரு அளவே இல்லை. புல-ஷர-யோஜக-காம, அவரே தெய்வீகமான காமதேவரும் ஆவார். காமதேவர் பௌதிக உலகின் அற்பமான காமத்தை தனது வில்லையும் அம்புகளையும் கொண்டு அதிகரிக்கிறார். அதுபோலவே ஆன்மீக உலகில், அவர் (கிருஷ்ணர்) மீயுயர்ந்த காமதேவர் ஆவார். அவர் கோபியர்களின் காமத்தை அதிகரிக்கிறார். அவர்கள் அங்கு அவரிடம் வந்தனர், மற்றும் இருவருக்கும் இடையே எந்த குறைப்பாடும் இல்லை. அவர்கள் தனது ஆசையை வளரச் செய்தார்கள், மற்றும் கிருஷ்ணரும் பௌதிக சிந்தனையற்ற இன்பத்தை அவர்களுக்கு வழங்கினார். அவர்கள் தன்னைமறந்து ஆடினார்கள், அவ்வளவு தான். கோபாங்கன-கண, சித்த-வினோதன, ஸமஸ்த-குண-கண-தாம. குறிப்பாக கோபாங்கனர்களுக்கு அவர் மனம் கவரக்கூடியவராக தோன்றினார். கோபாங்கன என்றால் வ்ரஜ-தாமத்தின் நடனக்காரர்கள். கோபாங்கன-கண, சித்த-வினோதன, அவர்கள் அப்படியே கிருஷ்ணரின் சிந்தனையில் மூழ்கி கிடந்தார்கள். கிருஷ்ணருக்காக அவர்கள் உள்ளத்தில் அவ்வளவு ஆசையும் நேசமும் இருந்தது, அதனால் அவர் வடிவத்தை தன் உள்ளத்திலிருந்து ஒரு நிமிடம் கூட அவர்களால் நீக்க முடியவில்லை. சித்த-வினோதன, அவர் கோபியர்களின் உள்ளத்தை கவர்ந்தார், சித்த-வினோதன. ஸமஸ்த-குண-கண-தாம, அவர் எல்லா தெய்வீக குண்ங்களின் இருப்பிடமாக விளங்குகிறார். யமுனா-ஜீவன, கெலி-பராயண, மானஸ-சந்திர-சகோர. மானஸ-சந்திர-சகோர, சகோர என்பது ஒரு வகையான பறவை. அது நிலவையே பார்த்து கொண்டிருக்கும். அதுபோலவே, கோபியர்களின் மத்தியில் அவர் ஒரு நிலாவைப் போல் இருந்தார், மற்றும் அவர்கள் அவரையே கண்டு மகிழ்ந்தனர். மேலும் அவர் யமுனா நதியில் நீராடி மகிழ்ந்ததால், அவர் யமுனா நதியின் உயிரானவர். நாம-ஸுதா-ரஸ, காவோ க்ருஷ்ண-யஷ, ராகோ வசன. ஆத பக்திவினோத் தாகுர் எல்லோரையும் வேண்டிக் கேட்கிறார், "இப்போது நீ பகவானின் இந்த வெவ்வேறு திருநாமங்களை ஜெபித்து என்னை காப்பாற்று." ராகோ வசன மனொ: "என் அன்புக்குரிய மனமே, என் வாக்கை காப்பாற்று. மறுக்காமல் கிருஷ்ணரின் இந்த பல்வேறு திருநாமங்களை தொடரந்து நீ ஜெபிக்கவேண்டும்."