TA/Prabhupada 0282 - நாம் ஆச்சார்யர்களின் அடிச்சுவட்டை பின்பற்ற வேண்டும்

Revision as of 01:25, 23 April 2020 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0282 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 7.2 -- San Francisco, September 11, 1968

ஆக, மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷூ கஷ்சித் யததி ஸித்தயே யததாமபி ஸித்தானாம் கஸ்சின் மாம் வேத்தி தத்வத: (பகவத் கீதை 7.3) இங்கு மனுஷ்யஸ் தேஷாம் ஷாஸ்த்ர அதிகார யக்ஞானாம் ஸஹஸ்ர-மத்யே. நான் யார், கடவுள் யார், இந்த ஜட உலகம் என்பது என்ன, இது எப்படி இயங்குகிறது, இந்த விஷயங்கள் எல்லாம் கற்றறிந்த ஒருவனுடைய ஈடுபாடுகள். ஒரு முட்டாளால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவேதான் ஷாஸ்த்ர அதிகார. ஷாஸ்த்ர அதிகார என்றால் ஷாஸ்த்ரத்தை, அதாவது அறிவை வழங்கும் நூல்களை ஓரளவுக்காவது கற்றறிந்தவன். ஷாஸ்திரங்களிலுள்ள அறிவை கற்றவர்களின் எண்ணிக்கையை நாம் ஆராய்ந்தால், அந்த எண்ணிக்கை உடனேயே குறைந்துவிடும். இந்த பகுதியில் எத்தனை பேர் கல்வி அறிவற்றவர்கள் என்று நீங்கள் ஆராய்ந்தால், ஓ, அப்படி நிறைய பேரை பார்க்கலாம். மேலும் எத்தனை எம். எ. பட்டப்படிப்பு படித்தவர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்தால், உடனேயே அந்த எண்ணிக்கை குறைந்துவிடும். அதுபோலவே, மனிதர்கள் பலர் இருக்கிறார்கள், ஆனால் மனித வாழ்க்கையின் இலக்கை அடைய முயல்பவர்களை நீங்கள் தேட ஆரம்பித்தால், உடனேயே அந்த எண்ணிக்கை குறைந்துவிடும். அப்படிப்பட்ட பல ஆன்மீகவாதிகள், சித்தர்கள், சுவாமிகள், யோகிகள் இருக்கிறார்கள். அவர்களிலும் கடவுளை புரிந்துகொள்ள விரும்புவர்களை நீங்கள் எண்ணினால், கடவுளைப் பற்றிய ஞானத்தைப் பெற்றவர்களை நீங்கள் எண்ணத் தொடங்கினால், உடனேயே அந்த எண்ணிக்கை குறைந்துவிடும். மறுபடியும். ஆகையினால் கிருஷ்ணர் கூறுகிறார், ஆயிரமாயிரம் மனிதர்களில், யாரேனும் ஒருவன் பக்குவம் அடைய முயற்சி செய்யலாம். அவ்வாறு வாழ்க்கையில் பக்குவம் அடைய உண்மையிலேயே விரும்பும் ஆயிரமாயிரம் மனிதர்களிலும், கடவுளை, அதாவது கிருஷ்ணரை அறிந்தவன் யாரேனும் ஒருவனே இருப்பான் - இல்லாமலும் போகலாம். ஆனால் கிருஷ்ணர் கருணை மிக்கவர். அனைவரும் அவரை அறியும் வாய்ப்பை வழங்க அவரே நேரடியாக வருகிறார். மேலும் அவர் கருணையோ கருணை, இந்த பௌதிக உலகிலிருந்து திரும்பிச் செல்வதற்கு முன்பு, இந்த பகவத் கீதையை நமக்கு கொடுத்துவிட்டு செல்கிறார். அவரே பேசிய வார்த்தைகளால், கடவுள் யார் என்பதை அறியும் வாய்ப்பு நமக்கு கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தான். ஆக நீங்கள், பகவத் கீதையை, சரியாக, கிருஷ்ணர் எப்படி சொன்னாரோ அப்படியே, முட்டாள்தனமாக சொந்தமாக அர்த்தம் தேடாமல், உள்ளபடி, உண்மையுருவில் படித்தால்... உள்ளதை உள்ளவாறு சொல். கிருஷ்ணர் கூறுகிறார், "நான் தான் பரமபுருஷரான முழுமுதற் கடவுள்." இந்த சொற்களை முட்டாள்தனமாக உங்கள் எண்ணப்படி பொருள் விளக்கம் கூறி புரிந்துகொள்ள முயலாதீர்கள், ஆனால் அவரே சொன்னபடி, கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொள்ளுங்கள். மேலும் அவருடைய செயல்களால், அவருடைய சாஸ்திர ஞானத்தால், விவேகத்தால்... முன்னோர்கள் அனைவரும், அனைத்து ஆச்சார்யர்களும், அவரை கடவுளாக ஏற்றுக் கொண்டார்கள். ஆக நாம் ஆச்சார்யர்களின் அடிச்சுவடுகளை பின்பற்ற வேண்டும். மஹாஜனோ ஏன கத: ச பந்தா: (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 17.186). மகான்களின் அடிச்சுவடுகளை புன்பற்றினால் ஒழிய நம்மால் உயர்ந்த கருத்துகளை புரிந்துகொள்ள முடியாது. உதாரணத்திற்கு, விஞ்ஞான உலகில், புவிஈர்ப்பு சக்தி, புவிஈர்ப்பு சக்தியைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் சர் ஐஸாக் ந்யூடன், புவிஈர்ப்பு சக்தி உள்ளது என்று கூறுகிறார். அவர் ஒப்புக்கொண்டார். அவ்வளவு தான். அதாவது நீங்கள் ஒரு உயர்ந்த நபரை பின்பற்றுகிறிர்கள். அதுபோலவே, கிருஷ்ணரையும் பரமபுருஷரான முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொள்ள வேண்டும். தான்தோன்றித்தனமாக, சொந்த எண்ணப்படி அல்ல. அவர், பகவான் சைதன்யர், இராமானுஜாச்சார்யர், சங்கராச்சார்யர் , போன்ற, ஆன்மீக உலகின் எதிர்காலத்தை வழிநடத்திச் செல்லும் மகான்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். ஆகையினால் நீங்களும் அவ்வாறே ஏற்றுக் கொள்ள வேண்டும்.