TA/Prabhupada 0423 - நான் உங்களுக்காக கடினமாக உழைக்கிறேன், ஆனால் நீங்கள் சாதகமாகிக் கொள்ள மறுக்கிறீர்கள்
Lecture on SB 2.9.14 -- Melbourne, April 13, 1972
ஆகையால் இது ஒரு சிறந்த காரியம். இதோ அந்த சந்தர்ப்பம். நமக்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளத, லக்ஷ்மி. கிருஷ்ணர் எவ்வாறு உபசரிக்கப்படுகிறார். லக்ஷ்மி-ஸஹஸ்ஸர-சத-சம்பரம-சேவ்யமானம் (பிஸ.5.29). ஒரு வாழ்க்கையில் முயற்சி செய்வதன் வழி, கிருஷ்ண லோகத்திற்குச் செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நித்தியமான, நிறைவான மகிழ்சியான வாழ்க்கை பெறுவதற்கு, நான் அதை நிராகரித்தால், நான் எவ்வளவு துர்பாக்கியசாலி ஆவேன். நீங்கள் இழிந்து விழுந்தால் கூட. ஆனால் அங்கு ஒரு வாய்ப்பு உள்ளது, உடனடியாக இடமாற்றம் அடைவதற்கு. ஆனால் வாய்ப்பு இல்லாவிட்டால் கூட, அது முழுமை பெறாவிட்டாலும், அது தோல்வி அடைந்தாலும், இருப்பினும் அது கூறப்படுகிறது, "அது வெற்றிகரமானது," ஏனென்றால் அடுத்த பிறவி மனித வாழ்க்கை என்று உத்தரவாதமாகிவிட்டது. மேலும் சாதாரண கருமிகளுக்கு, அடுத்த பிறவி என்ன? எந்த தகவலும் இல்லை. யம் யம் வாபி ஸ்மரன்பாவம் த்யஜத்யந்தே கலேவரம் (பா.கீ.8.6). அவர் ஒரு மரமாகலாம், அவர் ஒரு பூனையாகலாம், அவர் ஒரு தேவராகலாம். தேவர்களுக்கு மேல் கிடையாது. அவ்வளவு தான். மேலும் அந்த தேவர் யார்? அவர்களுக்கு உயர்ந்த வான்கோளத்தில் சில வாய்ப்புகள் கிடைக்கும் மேலும் மறுபடியும் இழிந்து வீழ்கிறார்கள். கிஸீணே புண்யெ புனர் மர்த்ய-லோகம் விஷந்தி. வங்கியின் எஞ்சிய தொகைக்கு பிறகு, அந்த புண்ய, தெய்வபக்தி செயல்கள், பக்தி செயல்களால் வந்த கர்மபலன்கள் நிறைவாகிவிடும், மறுபடியும் வீழ்கிறான். ஆ-பிரம்ம-புவனால் லோகன் புனர் ஆவர்தினோ அர்ஜுன: "பிரம்ம வசிக்கும் பிரம்ம லோகத்திற்குச் சென்றாலும், அவருடைய ஒரு நாளை நாமால் கணக்கிட முடியாது; நீங்கள் அங்கு சென்றாலும் கூட, பிறகு அவர்கள் வந்துவிடுவார்கள்." மத்-தாம கத்வா புனர் ஜனம ந வித்யதே. "ஆனால் நீங்கள் என்னிடம் வந்தால், பிறகு அங்கே மறுபடியும் கீழே வருவதில்லை." இதுதான் கிருஷ்ண உணர்வின் வாய்ப்பு. த்யக்த்வா ஸ்வ-தர்மம் சரணாம்புஜம் ஹரேர் பஜன் அபக்வோ 'தபதேத் ததோ யதி யத்ர க்வ வாபத்ரம் அபூத் அமுஷ்ய கிம் கோ வார்த ஆப்தோ 'பஜதாம் ஸ்வ-தர்மத: (ஸ்ரீ.பா.1.5.17) தஸ்யைவ ஹேதோ: ப்ரயதேத கோவிதோ ந லப்யதே யத் ப்ரமதாம் உபரி அத: தல் லப்யதே துஹ்கவத் அன்யத: ஸுகம் காலேன ஸர்வத்ர கபீர-ரம்ஹஸா (ஸ்ரீ.பா.1.5.18) இதையெல்லாம் நீங்கள் படிக்க வேண்டும். நீங்கள் படிப்பதில்லை. பகவத் கீதையின் முதல் தொகுதியில் இதன் விவரங்கள் விளக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் நீங்கள் படித்திருக்கமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் படிப்பீர்களா? ஆகையால் நீங்கள் படிக்கவில்லை என்றால், பிறகு நீங்கள் அமைதியற்ற நிலையில் இருப்பீர்கள்: "ஓ, என்னை ஜப்பானிலிருந்து இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கும் போகவிடுங்கள்." நீங்கள் அமைதியற்ற நிலையில் இருக்கிறீர்கள் ஏனென்றால் நீங்கள் படிப்பதில்லை. நான் உங்களுக்காக கடினமாக உழைக்கிறேன், ஆனால் நீங்கள் சாதகமாகிக் கொள்ள மறுக்கிறீர்கள். உண்பதையும் தூங்குவதையும் சாதகமாக்காதீர்கள். இந்த புத்தகங்களை சாதகமாக்குங்கள். பிறகு உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். என்னுடைய கடமை - உங்களுக்கு விலை மதிப்பற்ற பொருள்களை கொடுத்துவிட்டேன், இரவு பகலாக ஒவ்வொரு வார்த்தைக்கு வார்த்தை, உங்களை வசப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தேன். மேலும் இதை நீங்கள் சாதகமாக்கிக் கொள்ளவில்லை என்றால், பிறகு உங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்? சரியா?