TA/Prabhupada 0431 - பகவான் உண்மையிலேயே ஜீவாத்மாக்களின் பூரணமான நண்பர்

Revision as of 03:15, 23 April 2020 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0431 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.11 -- Edinburgh, July 16, 1972

ஆனந்தமாக இருக்க, புரிந்துக் கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் உள்ளன, அது பகவத்-கீதையில் கூறப்பட்டுள்ளது. போக்தாரம் யக்ஞ-தபஸாம் ஸர்வ-லோக-மஹேஷ் வரம் ஸுஹ்ருதம் ஸர்வ-பூதானாம் க்ஞாத்வா மாம் ஷாந்திம் ருச்சதி (ப. கீ. 5.29) நீங்கள் மூன்று விஷயங்களை மட்டும் புரிந்துக் கொள்ள வேண்டும் பிறகு நீங்கள் அமைதியடைவீர்கள். அது என்ன? முதல் விஷயம் யாதெனில், "பகவான் அனுபவிப்பவர், நான் அனுபவிப்பவர் அல்ல." ஆனால் இங்கு, நம் தவறு, எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், "நான் அனுபவிப்பவர்." ஆனால் உண்மையிலேயே நாம் அனுபவிப்பவர் அல்ல. உதாரணதிற்கு, ஏனென்றால் நான் பகவானின் அங்க உறுப்புக்கள்... எவ்வாறு என்றால் என் கை என் உடலின் அங்க உறுப்பு போல். ஒருவேளை இந்த கை ஒரு நல்ல பழ கேக் வைதிருந்தால், சுவையான கேக். கைகளால் அதை அனுபவிக்க முடியாது. கை அதை எடுத்து, மேலும் வாயில் போடுகிறது. மேலும் அது வயிற்றுக்கு போகும் போது, அந்த உணவை உண்பதால் ஏற்படும் சக்தி, அது கைகளால் அனுபவிக்கப்படுகிறது. இந்த கையால் மட்டுமல்ல, - இந்த கையும் தான், கண்களும், கால்களும் தான். அதேபோல், நாம் எதையும் நேரடியாக அனுபவிக்க முடியாது. நாம் அனைத்தையும் பகவானின் மகிழ்ச்சிக்கு வைத்து அதன் பிறகு நாம் எடுக்கும் போது, அந்த மகிழ்ச்சியில் பங்கெடுத்தால், அது தான் நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கை. இதுதான் அதன் மெய்யியல். நாம் எதையும் எடுக்கக் கூடாது. பகவத்-பிரசாதம். பகவத்-பிரசாதம். நம்முடைய தத்துவம் யாதெனில் நாம் நல்ல உணவுகளை தயார் செய்து மேலும் நாம் கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்வோம், மேலும் அவர் உண்ட பின், பிறகு நாம் அதை எடுப்போம். அது தான் எங்கள் தத்துவம். கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்யாத எதையும் நாங்கள் உண்ணபதில்லை. ஆகையால் நாங்கள் கூறுகிறோம் பகவான் நித்தியமாக அனுபவிப்பவர். நாம் அனுபவிப்பவர்கள் அல்ல. நாம் அனைவரும் ஊழியர்கள். ஆகையால் போக்தாரம் யக்ஞ-தபஸாம் ஸர்வ-லோக-மஹேஷ் வரம் (ப. கீ. 5.29). மேலும் பகவான் அனைத்திற்கும் உரிமையாளர். அது தான் உண்மை. ஒருவேளை இவ்வளவு பெரிய சமுத்திரம். நீங்கள் உரிமையாளரா? நாம் உரிமை கோருகிறோம் அதாவது நான் இந்த நிலத்தின் அல்லது கடலின் உரிமையாளர் என்று. ஆனால் உண்மையிலேயே, என் பிறப்பிற்கு முன், அந்த கடல், நிலம் அங்கிருந்தது, மேலும் என் இறப்பிற்குப் பிறகு, கடல் அங்கேயே இருக்கும், அந்த நிலம் அங்கேயே இருக்கும். நான் எப்போது உரிமையாளரானேன்? எவ்வாறு என்றால் இந்த மண்டபத்தில் இருப்பது போல். இந்த மண்டபத்திற்குள் நாம் பிரவேசிக்கும் முன், இந்த மண்டபம் இருந்தது, மேலும் நாம் இந்த மண்டபத்தை விட்டு வெளியேறும் போது, மண்டபம் இருக்கும். பிறகு நாம் எப்போது உரிமையாளரானோம்? நாம் பொய்யாக அதாவது இங்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் உட்கார்ந்து இருந்ததால் உரிமையாளர் என்று உரிமை கோரினால், அது பொய்யான கருத்து. ஆகையால் ஒருவர் புரிந்துக் கொள்ள வேண்டும் அதாவது நாம் உரிமையாளாரும் அல்ல அனுபவிப்பாளரும் அல்ல. போக்தாரம் யக்ஞ... பகவான் தான் அனுபவிப்பாளர். மேலும் பகவான் தான் உரிமையாளர். ஸர்வ-லோக-மஹேஷ் வரம். மேலும் ஸுஹ்ருதம் ஸர்வ-பூதானாம் (ப. கீ. 5.29), அவர் எல்லோருக்கும் உன்னதமான நண்பர். அவர் மனித சமுதாயத்திற்கு மட்டும் நண்பர் அல்ல. அவர் விலங்கு சமுதாயத்திற்கும் நண்பர். ஏனென்றால் ஒவ்வொரு ஜீவாத்மாக்களும் பகவானின் பிள்ளைகள். நாம் எவ்வாறு மனிதர்களை ஒரு மாதிரியாகவும் மிருகங்களை வேறு மாதிரியாகவும் கையாளுகிறோம்? இல்லை. பகவான் உண்மையிலேயே ஜீவாத்மாக்களின் பூரணமான நண்பர். நாம் இந்த மூன்றையும் வெறுமனே புரிந்துக் கொண்டால், பிறகு நாம் உடனடியாக அமைதியடைவோம். போக்தாரம் யக்ஞ-தபஸாம் ஸர்வ-லோக-மஹேஷ் வரம் ஸுஹ்ருதம் ஸர்வ-பூதானாம் க்ஞாத்வா மாம் ஷாந்திம் ருச்சதி (ப. கீ. 5.29) சாந்திக்கான செயல்முறை இதுதான். நீங்களே நிறுவ முடியாது... நீங்கள் நினைத்தால் அதாவது "நான் மட்டும் தான் பகவானி மகன், மேலும் இந்த மிருகங்களுக்கு, ஆன்மா கிடையாது, நாம் அதை கொல்லலாம்," அது ஒரு சிறந்த தத்துவம் அல்ல. ஏன் இல்லை? ஆன்மா பெற்றிருக்கிறார் என்பதற்கு அறிகுறி என்ன? ஆன்மா பெற்றிருக்கிறார் என்பதற்கு அறிகுறி அதே நான்கு சூத்திரம்: உண்பது, உறங்குவது, உறவு கொள்வது, மேலும் தற்காத்துக் கொள்வது. மிருகங்களும் இந்த நான்கு செயல்களில் சுறுசுறுப்பாக இருக்கின்றன; நாமும் இந்த நான்கு செயல்களில் சுறுசுறுப்பாக இருக்கின்றோம். பிறகு மிருகங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் எங்கே? ஆகையால் வேத இலக்கியத்தின் தத்துவதில் அனைத்திற்கும் தெளிவான கருத்து உள்ளது. முக்கியமாக அவை பகவத்-கீதையின் உண்மையுருவில் சுருக்கமாக இருக்கிறது. ஆகையால் எங்களுடைய ஒரே வேண்டுகோள் யாதெனில் நீங்கள் கிருஷ்ண உணர்வாகுங்கள். இதுதான் அந்த வாய்ப்பு. வாழ்க்கையில் இந்த மனித வடிவில் மட்டும் தான் பகவான் யார் என்பதை புரிந்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது, நான் யார், பகவானுடன் என்னுடைய உறவு என்ன? மிருகங்கள் - நாம் பூனைகளையும் நாய்களையும் இந்த கூட்டத்திற்கு அழைக்க முடியாது. அது சாத்தியமல்ல. நாம் மனிதர்களை அழைத்திருக்கிறோம், ஏனென்றால் அவர்களால் புரிந்துக் கொள்ள முடியும். ஆகையால் மனிதர்களுக்கு அந்த முன்னுரிமை இருக்கிறது, புரிந்துக் கொள்ளும் சலுகை. துர்லபம் மானுஸ்ம் ஜென்ம. ஆகையினால் அது துர்லப என்றழைக்கப்படுகிறது, இந்த மனித வாழ்க்கை நமக்கு மிகவும் அரிதாக கிடைத்திருக்கிறது. இந்த உருவத்தின் வாழ்க்கையில் நாம் புரிந்துக் கொள்ள முயற்சி செய்யாவிட்டால் "பகவான் யார், நான் யார், நம்முடைய உறவு என்ன," பிறகு நாம் தற்கொலையில் ஈடுபடுகிறோம். ஏனென்றால் இந்த வாழ்க்கைக்கு பிறகு, இந்த உடலை விட்டு பிரிந்ததும், நான் மற்றொரு உடலை ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் ஏப்படிப்பட்ட உடலை நான் ஏற்றுக் கொள்ளப் போகிறேன் என்று எனக்கு தெரியாது. அது என் கைகளில் இல்லை. நீங்கள் கட்டளையிட முடியாது அதாவது "அடுத்த பிறவியில் என்னை ராஜாவாக்குங்கள்." அது சாத்தியமல்ல. நீங்கள் உண்மையிலேயே அரசனாக கூடிய தகுதி பெற்றிந்தால், இயற்கை உங்களுக்கு அரசனின் வீட்டில் உடலை கொடுக்கும். நீங்கள் அதைச் செய்ய முடியாது. ஆகையினால், நாம் வேலை செய்ய வேண்டும், இன்னும் நல்ல உடல் அடுத்த கிடைக்க. அதுவும் பகவத்-கீதையில் விளக்கப்பட்டுள்ளது. யாந்தி தேவ-வ்ரதா தேவான் பித்ரூன் யாந்தி பித்ரு-வ்ரதா: பூதானி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்-யாஜினோ 'பி மாம் (ப.கீ.9.25) ஆகையால் நாம் இந்த வாழ்க்கையில் நம் அடுத்த வாழ்க்கைக்கு தயார் செய்துக் கொள்ள வேண்டும் என்றால், ஏன் நீங்கள் வீடுபேறு அடைய கூடிய உடலை தயார் செய்யக் கூடாது, பரமபதம்அடைதல். இதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம். நாங்கள் அனைத்து மனிதருக்கும் அவர்கள் எவ்வாறு தன்னை தயார் செய்துக் கொள்ளலாம் என்று கற்றுக் கொடுக்கிறோம் அப்போது அவர் இந்த உடலை விட்டு பிரிந்த பின், நேரடியாக பகவானிடம் செல்லலாம். வீடுபேறு அடைதல், பரமபதம் அடைதல். இது பகவத்-கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி கெளந்தெய (ப.கீ 4.9). த்யக்த்வா தேஹம், இதை துறந்த பிறகு.... (இடைவேளை) ... நாம் விட்டுவிட வேண்டும். எனக்கு இந்த உடலை விட விருப்பம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நான் செய்ய வேண்டும். அது இயற்கையின் சட்டம். "மரணத்தைப் போல் நிச்சயமானது." இறப்பிற்கு முன், நாமே நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும், அடுத்த உடல் என்ன. நாம் அதைச் செய்யவில்லை என்றால், பிறகு நம்மை நாமே கொல்கிறோம், தற்கொலைச் செய்துக் கொண்டிருக்கிறோம். ஆகையால் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மனித இனத்தைக் காப்பாற்றுவதற்கானது உடல் சம்மந்தப்பட்ட வாழ்க்கையின் தவறான எண்ணத்தால் உயிர்ச்சேதம் ஏற்படாமல் இருக்க. மேலும் சுலபமான முறை யாதெனில் பதினாறு வார்த்தைகளை உச்சாடனம் செய்வது, அல்லது நீங்கள் ஒரு தத்துவ ஞானி, அல்லது விஞ்ஞானியாக இருந்தால், உங்களுக்கு அனைத்தையும் விஞ்ஞான முறையில், தத்துவ முறையில் தெரிய வேண்டும் என்றால், எங்களிடம் இதைப் போல் பெரிய புத்தகங்கள் இருக்கின்றன. நீங்கள் புத்தகத்தைப் படித்தோ, அல்லது வெறுமனே எங்களுடன் சேர்ந்து மஹா மந்திரம் உச்சாடனம் செய்யலாம். மிக்க நன்றி.