TA/Prabhupada 0443 - தனித்தன்மை என்னும் கேள்விக்கு இடமில்லை
Lecture on BG 2.8-12 -- Los Angeles, November 27, 1968
பிரபுபாதர்: தொடருங்கள். பக்தர்: தனித்தன்மை உண்மைச் சம்பவம் இல்லையெனில், கிருஷ்ணர் அதை எதிர்காலத்திற்கும் சேர்த்து அதிகமாக வலியுறுத்தி இருக்கமாடடார்." பிரபுபாதர்: ஆம். அவர் கூறியிருக்கிறார் அதாவது நாம் தனித்துவமாக இருந்ததில்லை என்னும் காலம் இருந்ததில்லை, மேலும் அத்தகைய தனித்துவம் இல்லாத காலம் எதிர்காலத்திலும் இருக்கப் போவதில்லை. மேலும் நிகழ் காலத்தைப் பொருத்தவரை, நாம் அனைவரும் தனிநபர். உங்களுக்கு தெரியும். ஆகையால் தனித்துவத்தை இழக்கும் சாத்தியம் எங்கே? உருவமற்று இருப்பது? இல்லை. அது நிகழக் கூடியதன்று. இந்த பயனற்ற, அருவவாதிகள், அவர்கள் மறுப்பதற்கான செயற்கையான வழிகள், இந்த பௌதிக வாழ்க்கையின் குழப்பமான பல்வேறு வேறுபாடுகல். அது வெறும் எதிர்மறையான பக்கம். அது நேர்மறையான பக்கம் அல்ல. நேர்மறையான பக்கம் யாதெனில், கிருஷ்ணர் கூறியது போல், த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி கெளந்தேய (ப.கீ.4.9). "இந்த மனித உடலை விட்டுவிட்டப்பின், ஒருவர் என்னிடம் வருவார்." எவ்வாறு என்றால் இந்த அறையை விட்டு வெளியே சென்றதும், நீங்கள் மற்றோரு அறைக்குச் செல்ல வேண்டும். "இந்த அறையை விட்டு வெளியே சென்றதும், நான் வானத்தில் வாழ்வேன்." என்று நீங்கள் கூற முடியாது. அதேபோல், இந்த உடலை விட்டதும், நீங்கள் கிருஷ்ணரிடம் ஆன்மிக ராஜ்யத்திற்குச் சென்றால், உங்களுடைய தனித்துவம் அங்கிருக்கும், ஆனால் நீங்கள் அந்த ஆன்மிக உடலைப் பெறுவீர்கள். அங்கு ஆன்மிக உடல் இருக்கும்போது அங்கே குழப்பம் இருக்காது. எவ்வாறு என்றால் உங்கள் உடல் நீரில் உள்ள உயிரினங்களின் உடலில் இருந்து வேறுபட்டது. நீர் உயிரினங்களுக்கு, தண்ணீரில் எந்த தொந்தரவும் இல்லை ஏனென்றால் அவைகளின் உடல் அதற்கேற்ப அமைந்துள்ளது. அவை அங்கு அமைதியாக வாழலாம். உங்களால் வாழ இயலாது. அதேபோல், மீனை, நீங்கள் நீரிலிருந்து வெளியே எடுத்தால், அவைகளால் வாழ முடியாது. அதேபோல், நீங்கள் இந்த பௌதிக உலகில் அமைதியாக வாழ முடியாது, ஏனென்றால் நீங்கள் ஆன்மிக ஆத்மா. இது வெளிநாடு. ஆனால் நீங்கள் ஆன்மிக உலகிற்குச் சென்ற உடனடியாக, உங்கள் வாழ்க்கை நித்தியமானதாகும், நிறைவான மகிழ்சசியும், மேலும் நிறைவான அறிவும், உண்மையான அமைதியும் கிடைக்கும். த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி (ப.கீ.4.9). கிருஷ்ணர் கூறுகிறார், "இந்த உடலை விட்டதும், ஒருவர் குழப்பம் நிறைந்த இந்த பௌதிக உலகிற்கு வரமாட்டார்." மாம் ஏதி, "அவர் என்னிடம் வருவார்." "என்னிடம்" என்றால் அவர் ராஜ்ஜியம், அவருடைய உடைமைகள், அவருடைய சேர்க்கைகள், அனைத்தும். ஓர் செல்வந்தரோ அல்லது ஒரு மன்னரோ கூறினால், "சரி, நீ என்னிடம் வா," அவர் தனித்தன்மை உள்ளவர் என்று பொருள்படாது. ஒரு மன்னன் கூறினால், "என்னிடம் வா ..." என்றால் அவரிடம் அரண்மனை இருக்கிறது, அவரிடம் செயலாளர் இருக்கிறார், அவரிடம் அழகான வசிக்கும் இடம் இருக்கிறது, அனைத்தும் அங்கிருக்கிறது. அவர் எவ்வாறு தனித்துவம் பெற்றவராக முடியும்? ஆனால் அவர் சும்மா சொல்கிறார், "என்னிடம் வாங்கள்." இந்த "நான்" என்றால் அனைத்தும். இந்த "நான்" என்றால் தனித்துவம் என்று பொருள் படாது. நமக்கு பிரம்ம சம்ஹிதவிலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது, லக்ஷ்மி-சஹஸ்ர-ஸ்த- ஸம்ப்ரம-சேவ்யமானம்..... சுரபீர் அபிபால்யந்தம் (பி. ஸ். 5.29). ஆகையால் அவர் தனித்தன்மை பெறவில்லை. அவர் பசுக்களை வளர்க்கிறார், சொத்துக்களின் அதிபதியான தெய்வமகள் நுறு மேலும் ஆயிரம் பேருடன் இருக்கிறார், அவருடைய நண்பர்கள், உடைமைகள், ராஜ்ஜியம், வீடு, அனைத்தும் அங்கிருக்கிறது. ஆகையால் தனித்தன்மை என்னும் கேள்விக்கே அங்கு இடமில்லை.