TA/Prabhupada 0434 - ஏமாற்றுக்காரர் கூறுவதை கேட்காதீர்கள் மேலும் மற்றவர்களை ஏமாற்ற முயற்சிக்காதீர்கள்
Morning Walk -- May 10, 1975, Perth
பிரபுபாதர்: நவீன காலம் என்றால் எல்லோரும் போக்கிரிகளும் மேலும் முட்டால்களும் ஆகும். ஆகையால் நாம் போக்கிரிகளையும் முட்டாள்களையும் பின்பற்ற வேண்டியதில்லை. நீங்கள் மிகவும் பூரணமான, கிருஷ்ணரை பின்பற்ற வேண்டும். பரமஹம்ஸ: பிரச்சனை யாதெனில் எல்லோரும் ஏமாற்றுகிறார்கள். எல்லோரும் இது அல்லது அது என்று சில அறிவுரை சமர்ப்பிக்கிறார்கள்... பிரபுபாதர்: ஆகையினால் நாம் கிருஷ்ணரை ஏற்றுக் கொண்டுவிட்டோம், ஏமாற்றாத ஒருவர். நீங்கள் ஏமாற்றுக்காரன், ஆகையினால் நீங்கள் ஏமாற்றுக்காரர்களை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் ஏமாற்றுவதில்லை, மேலும் நாங்கள் ஏமாற்றாத ஒருவரை ஏற்றுக் கொண்டோம். அதுதான் உங்களுக்கும் எனக்கும் இடையில் உள்ள வேற்றுமை. கணேஷ: ஆனால் நாங்கள் எல்லோரும் உங்களுடன் வருவதற்கு முன் ஏமாற்றுக்காரர்களாக இருந்தோம், ஸ்ரீல பிரபுபதா. நங்கள் எல்லோரும் ஏமாற்றுக்காரர்களாக இருந்தோம், ஆனால் அது எப்படி நாங்கள் ஒரு ஏமாற்றுக்காரரை ஏற்றுக் கொள்ளவில்லை? அது எப்படி நாங்கள் ஏமாற்றுக்காரர்கள் உங்களிடமிருந்து சில அறிவை ஏற்றுக் கொள்ள முடிந்து? பிரபுபாதர்: ஆம், ஏனென்றால் நாம் கிருஷ்ண கூறியதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் ஏமாற்றுக்காரர் அல்ல. அவர் பகவான். நான் உங்களிடம் பேசிக் கொண்டிருப்பது, அது என் சொந்த அறிவுரையல்ல. கிருஷ்ண கூறியதை நான் உங்களிடம் சமர்ப்பிக்கிறேன். அவ்வளவு தான். ஆகையினால் நான் ஏமாற்றுக்காரர் அல்ல. நான் ஏமாற்றுக்காரராக இருந்திருக்கலாம், ஆனால் பின்னர் நான் கிருஷ்ணரின் வார்த்தைகளை மட்டும் கூறுவதால், அதன் பின்னர் நான் ஏமாற்றுக்காரர் அல்ல. (நீண்ட இடை நிறுத்தம்) கிருஷ்ண கூறுகிறார், வேதாஹம் ஸமதீதாநி (ப.கீ.7.26), "எனக்கு கடந்த காலம், நிகழ் காலம் மேலும் எதிர் காலம் தெரியும்." ஆகையினால் அவர் ஏமாற்றுக்காரர் அல்ல. ஆனால் நம்மைப் பொறுத்தவரை, நமக்கு கடந்த காலம் எவ்வாறு இருந்தது மேலும் எதிர் காலம் எவ்வாறு இருக்கும் என்று தெரியாது. மேலும் நிகழ் காலம் பற்றியும் நமக்கு சரியாக தெரியாது. மேலும் நாம் ஏதாவது பேசினால், அது ஏமாற்றுதல். அது ஏமாற்றுதல். (நீண்ட இடை நிறுத்தம்) எங்கள் கிருஷ்ண பக்தி இயக்கம் யாதெனில் ஏமாற்றுக்காரர் கூறுவதை கேட்காதீர்கள் மேலும் மற்றவர்களை ஏமாற்ற முயற்சிக்காதீர்கள். நேர்மையாக இருங்கள், அதிகாரிகள் கூறுவதை கேளுங்கள். இதுதான் கிருஷ்ண. (நீண்ட இடை நிறுத்தம்) அமோக: ஸ்ரீல பிரபுபத? ஏன் சில மக்கள், கிருஷ்ண உணர்வைப் பற்றி கேட்டவுடன், அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள், மேலும் சிலர் ஏற்றுக் கொள்வதில்லை. இருப்பினும், அதற்கு பிறகு, அதை ஏற்றுக் கொண்ட சிலர், அவர்கள் தங்குகிறார்கள், மேலும் சிலர் சில காலம் ஏற்றுக் கொண்டு பிறகு தவறிப் போகிறார்கள்? பிரபுபாதர்: அது தான் அதிஷ்டம் மேலும் துரதிஷ்டம். எவ்வாறு என்றால் ஒருவர் தந்தையின் சோத்துக்களுக்கு உரிமையாளராகிறார். பல இலட்சம் டாலர்கள், மேலும் அவன் பணத்தை தவறான வழியில் பயன்படுத்தியதால் ஏழையாகிரான். அதைப் போல். அவன் துரதிஷ்டகாரன். அவனுக்கு பணம் கிடைத்தது, ஆனால் அவனால் அதை உபயோகிக் முடியவில்லை. ஜெயதர்ம: சொத்து என்றால் அது கிருஷ்ணரின் கருணை என்று பொருள்படுமா? பிரபுபாதர்: கிருஷ்ணரின் கருணை என்றும் அங்கு இருக்கிறது. உங்கள் சொந்த விருப்பதால் அதை தவறாக பயன்படுத்தல். உங்களுக்கு சரியான சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது - அது தான் சொத்து. ஆனால் நீங்கள் அந்த அதிஷ்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அது உங்கள் துரதிஷ்டம். அது சைதன்ய-சரிதாம்ருத்தாவில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பகவான் சைதன்ய கூறுகிறார், ஏய் ப்ரஹ்மன்ட ப்ரமிதே கோன் பாக்யவான் ஜிவ (ஸி. ஸி. மத்திய 19.151) . கோன் - சில அதிஷ்டமான மனிதன் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் பெரும்பாலானவர்கள் துரதிஷ்டமானவர்கள். சும்மா பாருங்கள், ஐரோப்பிய மேலும் அமெரிக்க நாடுகள் முழுவதிலும் நாங்கள் பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்கிறோம். எத்தனை மாணவர்கள் வந்திருக்கிறார்கள்? மிகவும் குறைந்த எண்ணிக்கை, இருந்தாலும் அவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் அதிஷ்டசாலிகள்.