TA/Prabhupada 0433 - நாங்கள் கூறுகிறோம் &

Revision as of 23:31, 1 October 2020 by Elad (talk | contribs) (Text replacement - "(<!-- (BEGIN|END) NAVIGATION (.*?) -->\s*){2,}" to "<!-- $2 NAVIGATION $3 -->")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Morning Walk -- May 13, 1975, Perth

கணேஷ்: ஸ்ரீல பிரபுபாத, ஸ்ரீ ஐஸொபனிசத்தில் கூறப்பட்டுள்ளது அதாவது ஒருவர் அறிவின்மையின் செய்முறையை கற்றுக் கொள்ள வேண்டும் என்று. அத்துடன் தன்னையறியும் விஞ்ஞானத்தின் செயல்முறையுடன். பிரபுபாதர்: ஹிம்? கணேஷ: ஐஸொபனிசத்தில் ப்ரவுருதியுடன் நிவுருதி. அது எப்படி? பிரபுபாதர்: அது என்ன ப்ரவுருதி மேலும் நிவுருதி? அமொக: அவர் சொல்கிறார் ஐஸொபனிசத்தில் கூறப்பட்டிருக்கிறது அதாவது, அது சொல்கிறது நீங்கள் தன்னையறியும் விஞ்ஞானத்தின் செயல்முறையுடன் சேர்த்து அறிவின்மையின் செய்முறையையும் கற்றுக் கொள்ளுங்கள். பிரபுபாதர்: அறிவின்மையின் செய்முறை, ஆம். அது தான் ப்ரவுருதியும் நிவுருதியும். ப்ரவுருதியு என்றால் புலன்களால் ஆனந்தம் அடைதல். மேலும் நிவுருதி என்றால் தானே மறுத்தல். ஆகையால் நாங்கள் கூறும் போது அதாவது "நீங்கள் தவறான உடலுறவு கொள்ள கூடாது," மேலும் அவர்களுடைய விருப்பம் தவறான உடலுறவு, ஆகையினால் அது புரட்சிகரமாக உள்ளது. அவர்கள் தன் கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள். அவர்களுக்கு இயன்றளவுக்கு சந்தோஷமாக உடலுறவு அனுபவிக்க வேண்டும் - தன்பாலினச் சேர்க்கை, இந்த உடலுறவு, அந்த உடலுறவு, நிர்வாண நடனம், அனைத்தும் உடலுறவைச் சார்ந்தது, ப்ரவுருதி. மேலும் நாம் சொல்கிறோம், "இதை நிறுத்துங்கள்," நிவுருதி. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை ஏனென்றால் அவர்கள் ஆசுர. ப்ரவுருதி ஜகத். இது அவசியமானது என்று அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களுக்கு இது தெரியவில்லை. இது முக்கியமானது. தபஸா ப்ரமஸரியெந (ஸ்ரீ.பா.6.1.13). தபஸ்ய என்றால் ப்ரமஸரிய. சுவாமிகள் என்று தவறாக அழைக்கப்படுபவர்கள், தவறாக யோக பயிற்சி என்று அதற்காக வருகிறார்கள் மேலும்... ஆனால் அவர்களே பாலியலுக்கு பலியாகிறார்கள். இது தான் நடந்துக் கொண்டிருக்கிறது. உண்மையிலேயே, இது ஏமாற்று வேலை - அவர்கள் சுவாமிகளாகி சில யோக முறையை கற்றுக் கொடுக்கிறார்கள் - ஏனென்றால் அவர்களுக்குத் தெரியாது, அதாவது ஒருவர் முதலில் இதை நிறுத்த வேண்டும் என்று. ப்ரமஸரியெந. ஆகையால் இந்த ஏமாற்று வேலை உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது, மேலும் நாம் அவர்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கிறோம். முர்கயொபதேஸோ ஹி ப்ரகொபாய ந ஸாந்தயெ. அந்த போக்கிரிகளுக்கு வழிமுறை கொடுத்தால், அவனுக்கு கோபம் வந்துவிடும். அதை சாதகமாக எடுத்துக் கொள்ளமாட்டான். இதுதான் நம்முடைய நிலைமை. அனைத்து சந்தேகமுள்ள பேராசிரியர்கள், தத்துவ ஞானிகள், அவர்கள் அனைவரும் ப்ரவுருதி-மார்கத்தில் உள்ளார்கள். ஆகையினால் அவர்கள் யாரையாவது அழைத்து வருகிறார்கள், "எங்களுடைய சுய அர்த்தம் கற்பித்தல் இவ்வாறானது." ப்ரவுருதி-மார்க. ஏனென்றால் அவர்களால் சாஸ்திரத்தில் சில ஆதாரம் கண்டுபிடிக்க முடிந்தால், பிறகு அவர்கள் நினைப்பார்கள், "நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்." இது தான் நடந்துக் கொண்டிருக்கிறது. ப்ரவுருதிம் ச நிவுருதிம் ஜனா ந விதுர் ஆசுரா:. உலகம் முழுவதிலும் அசுரர்கள் நிறைந்திருக்கிறார்கள், ஹிரண்யகஷிபுவின் சந்ததிகள், மேலும் இது மிகவும் கடினம். ஆனால் நாம் அவர்களுக்கு ஹரே கிருஷ்ண மந்திரம் உச்சாடனம் செய்ய வாய்ப்பு அளிக்கிறோம், படிப்படியாக அவர்கள் புரிந்துக் கொள்வார்கள். (நீண்ட இடை நிறுத்தம்) நம்முடைய கஷ்டம்: இந்த தவறான சுவாமிகள், மதகுருக்கள், போப்பாண்டவர்கள், அவர்களும் ப்ரவுருதி-மார்கத்தில் இருக்கிறார்கள். இந்த மதகுருக்கள், அனைவரும், தவறான உடலுறவு மேற்கொள்கிறார்கள். ப்ரவுருதி-மார்கம். ஆகையால் அவர்கள் பரப்புகிறார்கள், "ஆம், நீங்கள் ஆண்களுடன் தன்னோத்த பாலினம் கொள்ளலாம்." அவர்கள் ஆண்களுக்கும் ஆண்களுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். உங்களுக்கு தெரியுமா? அவர்கள்ஆண்களுக்கும் ஆண்களுக்கும் வெளிப்படையாக தேவாலயத்தில் திருமணச் சடங்குகள் செய்து வைக்கிறார்கள். அவர்கள் எந்த ரகத்தைச் சேர்ந்த ஆடவர்கள்? மேலும் அவர்கள் மதகுருக்கள். சும்மா பாருங்கள். இவ்வளவு கீழ்தரமான நபர்கள், குடித்துக் கொண்டிருக்கிறார்கள்... அவர்களுடைய குடிக்கும் நோயை குணப்படுத்த அவர்களுக்கு மருத்துவமனை உள்ளது. ஐந்தாயிரம் நோயாளிகள் அமெரிக்காவில் ஒரு மருத்துவமனையில், அனைவரும் குடிக்கு அடிமையானவர்கள், மேலும் அவர்கள் மதகுருக்கள். சும்மா பாருங்கள். வெறுமனே நீளமாக ஆடை அணிந்து, என்ன என்பார்கள், மேலங்கி? ஸ்ருதகீர்தி: உடைகள். அமோக: பழக்கம்? பிரபுபாதர்: உடையும் சிலுவையும், அவர்கள் மதகுரு ஆகிவிட்டார்கள். இந்தியாவிலும் கூட, வெறுமனே ஒரு நூல் அணிந்திருந்தால், ஒரு பிராமண. இரண்டு பைசா நூல். அவ்வளவுதான். பரமஹம்ஸ: ரயில் நிலையத்தில் இருக்கும் கூலிகாரன் கூட. பிரபுபாதர்: மேலும் வெறுமனே ஒரு தண்டா, ஒருவர் சந்நியாசி ஆகிறார். இது உலகம் முழுவதும் நடக்கிறது. முசல்மண், நீண்ட தாடி இருந்தால், அவர் ஒரு முசல்மண். முஸலெ: இமன். முஸலெ: என்றால் குறைவற்ற, மேலும் இமன் என்றால் நேர்மையான. அதுதான் முசல்மானின் அர்த்தம். குறைவற்ற நேர்மையான,முழுமையான தீவிர ஈடுபாடு கொண்டவர்.