TA/Prabhupada 0432 - நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் வரை, காதிரவனால் உங்கள் வாழ்க்கையை அழிக்க முடியாது

Revision as of 23:31, 1 October 2020 by Elad (talk | contribs) (Text replacement - "(<!-- (BEGIN|END) NAVIGATION (.*?) -->\s*){2,}" to "<!-- $2 NAVIGATION $3 -->")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 2.3.17 -- Los Angeles, June 12, 1972

பாவக: தஹதி பாவக: (ப.கீ.2.23). ஆகையால் நவீன விஞ்ஞானிகள், கூறுகிறார்கள் அதாவது சூரிய கோள்கிரகத்தில், பூகோளத்தில் உயிரினங்கள் இல்லை என்று. ஆனால் அது உண்மையல்ல. சூரிய கோள்கிரகம் என்பது என்ன? அது ஒரு நெருப்பு உமிழ்கின்ற கோள், அவ்வளவு தான். ஆனால் ஆன்மீக ஆத்மாவால் நெருப்பில் வாழ முடியும், மேலும் அது நெருப்பு உமிழ்கின்ற உடலை பெறுகின்றது. இங்கு இருப்பது போல், இந்த கிரகத்தில், பூமியில், நமக்கு பூமிக்கு ஏற்ற உடல் கிடைத்துள்ளது. அது மிகவும் அழகாக இருக்கலாம், ஆனால் அது பூமி. வெறுமனே இயற்கை திறமையாக கையாளியதால். நாம் சும்மா வருவதுபோல்... கரந்தர என்னிடம் காண்பித்தார். அந்த பிளாஸ்டிக், சில மரங்கள். ஆக அவர்கள் பிளாஸ்டிக் மரத்தை நுண்மையாக உண்மையான மரத்தை போல் செய்துவிட்டார்கள். ஆனால் அது மரம் அல்ல. அதேபோல், இந்த உடம்பும் பிளாஸ்டிக் உடம்பைப் போல் நன்றாக உள்ளது. அதற்கு மதிப்பு இல்லை. ஆகையால் த்யாக்வா தேஹம். ஆகையால் கிருஷ்ணர் கூறிய போது அதாவது இந்த உடலை கைவிட்டு போகும் போது... ஆனால் இந்த உடம்பு பிளாஸ்டிக் உடம்பு. எவ்வாறு என்றால் நீங்கள் பருத்தி ஆடை அல்லது பிளாஸ்டிக் சட்டை அல்லது இன்னும் பல வைத்திருப்பது போல். நீங்கள் அதை கைவிடலாம். நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்று அது பொருள்படாது. அதுவும் பகவத்-கீதையில் விளக்கப்பட்டுள்ளது. வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய (ப. கீ. 2.22). ஒருவர் புது ஆடைக்காக பழைய ஆடையை விட்டுவிடுவது போல். அதேபோல், இறப்பு என்றால் இந்த பிளாஸ்டிக் உடம்பைக் கைவிட்டு, மேலும் மற்றொரு பிளாஸ்டிக் உடலை ஏற்றுக் கொள்வது. அதுதான் இறப்பு. மேலும் மறுபடியும், அந்த பிளாஸ்டிக் உடலுடன், நீங்கள் வேலை செய்ய வேண்டும். உங்களுக்கு ஒரு நல்ல உடல் கிடைத்தால், பிறகு நீங்கள் நன்றாக வேலை செய்யலாம். உங்களுக்கு ஒரு நாயின் உடல் கிடைத்தால், பிறகு நீங்கள் நாயைப் போல் நடந்துக் கொள்லவீர்கள். உடலுக்கு ஏற்ப. ஆகையால் த்யாக்வா தேஹம். கிருஷ்ணர் கூறுகிறார் அதாவது "உண்மையிலேயே என்னை புரிந்துக் கொண்ட எவரும்..." ஆகையால் நீங்கள் எவ்வாறு புரிந்துக் கொள்வீர்கள்? வெறுமனே நீங்கள் அவரைப் பற்றி கேட்டால், பிறகு நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள். பிறகு நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள். ஆகையால் கேட்டுக் கொண்டிருப்பது ஒன்றும் கடினமான வேலை அல்ல. ஆனால் நீங்கள் புரிந்துணர்வு கொண்ட ஆத்மாவிடமிருந்து கேட்க வேண்டும். அதாவது... சதாம் பிரசண்கான மம வீர்ய-ஸம்விட:. நீங்கள் ஒரு தொழில் அதிபரிடமிருந்து கேட்டால், அது சக்தி வாய்ந்ததாக இருக்காது. சாதுவிடமிருந்து, பக்தர்களிடமிருந்து, பக்தர்களின் வார்த்தைகளில் இருந்து கேட்கப்பட வேண்டும். எவ்வாறு என்றால் சுகதேவ கோஸ்வாமி பரீட்சித்து மகாராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தது போல். ஆகையால்... அல்லது நீங்களே கேட்டுக் கொண்டாலோ, நீங்கள் புத்தகம் படித்தால், நீங்களே உங்கள் வாழ்க்கையை காத்துக் கொள்வீர்கள். நீங்கள் சும்மா கிருஷ்ண புத்தகம், அல்லது பகவத்-கீதை, அல்லது பகவான் சைதன்யாவின் போதனைகள், இவைகளை படித்தால், பிறகு உங்களுக்கு தெரியும் அந்த... நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் காலம் வரை, காதிரவனால் உங்கள் வாழ்க்கையை கடக்கச் செய்ய முடியாது. காலத்தால் உங்கள் உயிரை எடுப்பது சாத்தியமில்ல. நீங்கள் தொடர்ந்து படித்து வந்தால், பிறகு காலத்திர்க்கு உங்கள் உயிரை எடுக்க ஏது சந்தர்ப்பம். அப்படி என்றால் நீங்கள் மரணமற்றவராகிக் கொண்டிருக்கிறீர்கள். மக்கள் மரணமற்றவர்களாக இருப்பதற்கு மிகவும் ஆர்வமுடன் இருக்கிறார்கள். எவரும் இறக்க விரும்பவில்லை. எல்லோருக்கும் தெரியும் அதாவது "நான் மரணம் அடைவேன்." இருந்தபோதிலும் இங்கு உடனடியாக ஆபத்து நேர்ந்தால், நெருப்பு, உடனடியாக நீங்கள் இந்த அறையை விட்டு போய்விடுவீர்கள். ஏன்? நான் இறக்க விரும்பவில்லை. நான் இறக்க விரும்பவில்லை. நான் இறந்தே ஆக வேண்டும் என்று இருந்தாலும். இருந்தும், நான் ஏன் ஓடிப் போனேன்? எனக்கு அது தெரியும்... "ஓ, நெருப்பு வந்தால் வரட்டும். நான் இன்றோ நாளையோ மரணமடைவேன். என்னை இறக்க விட்டுவிடுங்கள்." இல்லை. நான் இறக்க விரும்பவில்லை. ஆகையினால் நான் ஓடிப் போகிறேன். இதுதான் உளவியல். ஆகையால் எல்லோரும் என்றென்றும் வாழ விரும்புகிறார்கள். அதுதான் நிதர்சனம். ஆகையால் நீங்கள் என்றென்றும் வாழ விரும்பினால், அப்போது நீங்கள் கிருஷ்ண உணர்வில் சேர வேண்டும். ஆகையால் கிருஷ்ண பக்தி இயக்கம் மிகவும் முக்கியமானது மேலும் சிறந்தது. எல்லோரும் வாழ விரும்புகிறார்கள். உண்மையிலேயே, நீங்கள் வாழ விரும்பினால், அப்போ நீங்கள் கிருஷ்ண உணர்வில் சேருங்கள். இந்த செய்யுள் இதை உறுதிப் படுத்துகிறது. ஆயுர் ஹரதி வை பும்ஸாம் உத்யன் அஸ்தம் ச யன் அசெள. சூரியன் அதிகாலையில் உதயமாகிறது. அது உதயமாகும் போதே, படிப்படியாக உங்கள் வாழ்க்கையை கழிக்கிறது. அவ்வளவு தான். அதுதான் அதன் வேலை. ஆனால் நீங்கள் சூரியனை வெற்றிக் கொள்ள விரும்பினால்... சூரியன் மிகவும் சக்தி வாய்ந்தது. சண்டையிடுவது மிகவும் கடினம். ஆனால் நீங்கள் சூரியனுடன் சண்டையிடலாம். எவ்வாறு? வெறுமனே கிருஷ்ண-கதா படிப்பதின் மூலம், கிருஷ்ணரின் வார்த்தைகளை. உத்தம-ஸ்லோக-வார்தயா. வார்தயா. உத்தம-ஸ்லோக, கிருஷ்ண. ஆகையால் இது ஒரு எளிமையான செய்முறை. முட்டாள்தனமாக பேசி உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். ஆகையினால் ரூப கோஸ்வாமி அறிவுறுத்தி இருக்கிறார், அத்யாஹார: ப்ரயாசஸ் ச ப்ரஜல்ப நியாமாகர:. ப்ரஜல்ப:. அத்யாஹார: ப்ரயாசஸ் ச ப்ரஜல்ப நியாமாகர:. ஜன-சண்கஸ் ச லெளலயம் ச ஸட்பிர் பக்திர் விநஸ்யதி (நெ. 2) நம்முடைய ஆன்மீக வாழ்க்கை முடிவடைந்துவிடும், அப்படி என்றால் குழப்பம் அடைந்துவிடும்... ஆன்மீக வாழ்க்கையில் இருப்பவர்கள், கிருஷ்ண உணர்வு, அவர்கள் அதிஸ்டமானவர்கள். இந்த அதிஸ்டம் ஆறு செயல்களால் நாசப்படுத்தப்படலாம். கவனமாக இருங்கள். அது என்னது? அத்யாஹார. அத்யாஹார என்றால் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது, அல்லது தேவைக்கு அதிகமாக சேகரிப்பது. ஆஹார. ஆஹார என்றால் சேகரிப்பது. நமக்கு கொஞ்சம் பணம் சேகரிக்க தேவைப்படுகிறது, ஆனால் தேவைக்கு அதிகமாக சேகரிக்க கூடாது. அதை நாம் செய்யக் கூடாது. ஏனென்றால் எனக்கு அதிகமாக பணம் கிடைத்தால், பிறகு உடனடியாக மாயை வந்துவிடுவாள்... "நீ ஏன் எனக்கு செலவு செய்யவில்லை?" ஆம். அதனால் தேவைக்கு அதிகமாக.... உங்களுக்கு எது தேவையோ, அதை சேக்கரியுங்கள். அல்லது அதேபோல், ஆஹார என்றால் உண்பது. தேவைக்கு அதிகமாக உண்ணாதீர்கள். உண்மையிலேயே, நாம் உண்பது, உறங்குவது, உறவு கொள்வது, தற்காத்துக் கொள்வது, எதுவும் இல்லாத நிலைக்கு வந்துவிட்டோம். மேலும் அது சாத்தியமல்ல ஏனென்றால் நமக்கு இந்த உடல் இருக்கிறது. ஆனால் மிகக் குறைந்த அளவு.