TA/Prabhupada 0296 - பகவான் ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போதிலும், அவர் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொ
Lecture -- Seattle, October 4, 1968
வேதங்களில் கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம் இருக்கிறது. எல்லா புனித நூல்களிலும், பெரிய மகான்களும் கூட, பக்தர்கள், இறைவனின் பிரதிநிதிகள்... ஏசு கிறிஸ்துவைப் போல் தான். அவர் கடவுளைப் பற்றிய அறிவை வழங்கினார். அவர் சிலுவையில் அறையப்பட்ட போதிலும், அவருடைய கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. ஆக நம்மிடம், புனித நூல்களிலிருந்து, வேதங்களிலிருந்து, பெரிய மகாங்களிடமிருந்து, கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம் கிடைத்திருக்கிறது. அப்படி இருந்தும், "கடவுள் இறந்துவிட்டார். கடவுள் இல்லை," என்று நான் கூறினால், பிறகு எப்படிப்பட்ட மனுஷன் நான்? இதைத் தான் அரக்கன் என்று அழைக்கிறோம். அவர்கள் இதை ஒருபோதும் நம்பமாட்டார்கள். அவர்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்... அரக்கன், என்ற வார்த்தைக்கு எதிர்ச்சொல் 'புதா'. புதா என்றால் மிகவும் புத்திசாலி, விவேகமுள்ளவன். எனவே சைதன்ய-சரிதாம்ருதத்தில் கூறப்பட்டிருக்கிறது, க்ருஷ்ண யே பஜே சே படா சதுர. கிருஷ்ணரால் கவரப்பட்டு அவரை நேசிக்கும் எவனும்... வழிபடுதல் என்றால் நேசிப்பது. ஆரம்பத்தில் அது வழிபடுதல், ஆனால் அது இறுதியில் நேசமாக மாறி பக்குவம் அடையும். வழிபடுதல்.
ஆக இதி மத்வா பஜந்தே மாம் புதா. விவேகமுள்ள எவனும், புத்திசாலியாக இருக்கும் யாரும், கிருஷ்ணர் தான் காரணங்களுக்கு எல்லாம் முழுமுதற் காரணம் என்று யாரொருவன் அறிந்திருக்கிரானோ....
- ஈஷ்வர பரம க்ருஷ்ண
- சச்-சித்-ஆனந்த-விக்ரஹ
- அனாதிர் ஆதிர் கோவிந்த
- ஸர்வ-காரண-காரணம்
- (ப்ரஹ்ம சம்ஹிதா 5.1)
ஸர்வ-காரண:, அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு, தூண்டல்-விளைவு. ஆக நீங்கள், இதன் காரணம் என்ன, அந்த காரனத்திற்குக் காரணம் என்ன, அதற்கும் காரணம் என்னவென்று மென்மேலும் தேடிக் கொண்டே போனால், இறுதியில் நீங்கள் கிருஷ்ணரைத் தான் காண்பீர்கள். சர்வ-காரண-காரணம். மேலும் வேதாந்தம் கூறுகிறது, ஜன்மாதி அஸ்ய யத: ((ஸ்ரீமத் பாகவதம் 1.1.1)). ஒரு விஷயம் தானாகவே தோன்றியது என்று உங்களால் சொல்ல முடியாது. அது முட்டாள்தனம். அனைத்திற்கும் உருவாகும் இடம், தோற்றுவாய் ஒன்று இருக்கும். அனைத்திற்கும். அதுதான் புத்திசாலித்தனம். "ஒரு பெரிய கோளம் வெடித்துச் சிதறி தான் எல்லாம் தோன்றியது - ஒருவேளை அப்படி இருக்கலாம்," இப்படி நவீன விஞ்ஞானத்தில் சொல்வதைப் போல் எல்லாம் சொல்லாதீர்கள். அதுவும் "ஒருவேளை," புரிகிறதா. ஆக இப்படிப்பட்ட அறிவு பயனற்றது. நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். நான் விஞ்ஞானியிடம், "இந்த கோளம் எப்படி தோன்றியது?" என்று கேட்டால், அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. ஆக மூல காரணத்தைக் கண்டுபிடியுங்கள், அப்போது நீங்கள் காண்பீர்கள்... என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால், பிறகு நாம் பின்பற்ற வேண்டும்... மஹாஜனோ யேன கதா: ஸ பந்தா: ((சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 17.186)). நாம் அங்கீகரிக்கப்பட்ட ஆச்சாரியர்களை பின்பற்ற வேண்டும். நீங்கள் கிறிஸ்தவர் என்றால், ஏசு கிறிஸ்துவை பின்பற்றுங்கள். அவ்வளவு தான். அவர் கூறுகிறார், "கடவுள் இருக்கிறார்." அப்போது கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர் கூறுகிறார், "கடவுள் இதைப் படைத்தார்." கடவுள் கூறினார் ' படைப்பு நடக்கட்டும்,' உடனேயே எல்லாம் படைக்கப்பட்டது. ஆக நாம் இதை ஏற்றுக் கொள்கிறோம், "ஆம். கடவுள் படைத்தார்." இங்கேயும் இந்த பகவத்-கீதையில் கடவுள் கூறுகிறார், கிருஷ்ணர் கூறுகிறார், அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ (பகவத் கீதை10.8), "ஆதியும் மூலமும் நானே." ஆக படைப்பின் மூல காரணம், அந்த தோற்றுவாய் கடவுள் தான். ஸர்வ-காரண-காரணம் (ப்ரஹ்ம சம்ஹிதா 5.1). அவர் தான் காரணங்களுக்கு எல்லாம் காரணம்.
ஆக நாம் புனிதம் அடைந்த மகான்களின் எடுத்துக்காட்டை பின்பற்ற வேண்டும், அங்கீகரிக்கப்பட்ட புனித நூல்களையும், வேதங்களையும் படிக்க வேண்டும், மற்றும் அவர்கள் காட்டிய வழியை பின்பற்ற வேண்டும். பிறகு கிருஷ்ண உணர்வு, அதாவது கடவுளின் புரிந்துணர்த்தல் என்பது கடினமான விஷயம் அல்ல. அது மிகவும் சுலபமானது. கடவுள் என்றால் என்ன, என்ற புரிதலின் பாதையில் எந்த தடங்கலும் இருக்காது. எல்லாமே அதில் இறுக்கிறது. பகவத்-கீதை இருக்கிறது, ஸ்ரீமத் பாகவதம் இருக்கிறது. உங்கள் பைபிள் இருக்கிறது, கொரான் இருக்கிறது, அதை பின்பற்றினாலும் சரி, எங்கும். கடவுள் இல்லாமல், எந்த புனித நூலும் இருக்க முடியாது. இப்போதெல்லாம் அவர்கள் பல கருத்துகளை மனதில் தோன்றியதுபோல் உருவாக்குகிறார்கள். ஆனால் எந்த மனித சமூகத்திலும், கடவுள் என்ற கருத்து இருக்கத் தான் இருக்கிறது - காலத்திற்கு தகுந்தபடி, மக்களுக்கு தகுந்தபடி, ஆனால் அந்த அடிப்படை கருத்து இருக்கிறது. இப்போது நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், ஜிஞாஸா. ஆகையினால் வேதாந்த சூத்திரம் கூறுவது என்னவென்றால், நீங்கள் கடவுளைப் பற்றி பணிவுடன் வினவி, விசாரித்து புரிந்துகொள்ள வேண்டும். இந்த வினவுதல் தான் மிகவும் முக்கியமானது.