TA/Prabhupada 0016 - நான் வேலை செய்ய வேண்டும்

Revision as of 13:09, 26 May 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 7.1 -- San Francisco, March 17, 1968

ஆக கிருஷ்ணருடன் எப்படி தொடர்பு கொள்வது என்பதை ஒருவர் அறிந்திருக்க வேண்டும். கிருஷ்ணர் எங்கும் நிறைந்திருக்கிறார். இது தான் கிருஷ்ண பக்தி இயக்கம். இது தான் கிருஷ்ண உணர்வு. கிருஷ்ணரின் வடிவங்களின் தனிச்சிறப்புகளை எப்படி அதில் உணறுவது என்பது ஒருவனுக்கு தெரிந்திருக்கவேண்டும். மரக்கட்டையிலா அல்லது இரும்பிலா அல்லது வேறு ஏதாவதா... என்பது முக்கியமல்ல. கிருஷ்ணர் எங்கும் நிறைந்திருக்கிறார். கிருஷ்ணருடன் எல்லாவற்றிலும் தொடர்பு கொள்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். அது இந்த யோக முறையின் வழியாக கற்பிக்கப்படும். நீங்கள் அதை கற்றுக் கொள்வீர்கள். ஆக கிருஷ்ண உணர்வும் ஒரு யோகம், பூரணமான யோகம், எல்லாவகையான யோக முறைகளிலும் உன்னதமானது. யார் வேண்டுமானாலும், எந்த யோகியும் வரலாம்; அவர்களுடைய சவாலை நம்மால் ஏற்கமுடியும். இதுதான் ஏ-1 யோக முறை என்று நம்மால் சொல்லமுடியும். இதுதான் ஏ-1, அதே நேரத்தில் வெகு எளிமையானது. நீங்கள் உடல் பயிற்சி செய்ய வேண்டியதில்லை. ஒரு வேளை உங்களுக்கு உடல் பலவீனமானமாக இருந்தாலோ, கொஞ்சம் சோர்வடைபவராக இருந்தாலோ, கிருஷ்ண உணர்வில் நீங்கள் அப்படி உணரமாட்டீர்கள். எங்கள் மாணவர்கள் அனைவரும், அளவுக்கு மீறிய பணிச்சுமையை, அதாவது கிருஷ்ண உணர்வை, சுமக்க ஆர்வமுடன் இருப்பார்கள். "சுவாமிஜி, நான் என்ன செய்ய வேண்டும்? நான் என்ன செய்யலாம்?" உண்மையிலேயே அவர்கள் செய்துக் கொண்டிருக்கிறார்கள். சிறப்பாக. மிகவும் சிறப்பாக. அவர்கள் சலிப்படைவதில்லை. அதுதான் கிருஷ்ண உணர்வு. இந்த பெளதிக உலகில், சற்று நேரம் வேலை செய்ததும் களைப்பாக இருக்கும். ஓய்வு தேவைப்படும். நான் ஒன்றும் மிகைப்படுத்தி கூறவில்லை. நான் எழுபத்தி-இரண்டு வயதான ஒரு முதியவன். ஓ, நான் உடல் நலமில்லாமல் இருந்தேன். நான் இந்தியாவிற்குத் திரும்பிச் சென்றேன். நான் மறுபடியும் வந்திருக்கிறேன். நான் பணிபுரிய ஆவலாக இருக்கிறேன். நான் மேலும் சேவை செய்ய விரும்புகிறேன். சாதாரணமாக இருந்திருந்தால், நான் இந்த பணிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்திருப்பேன், ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை... என்னால் முடிந்தவரை, நான் பணிபுரிய விரும்புகிறேன். நான் ஆவலாக இருக்கிறேன், இரவும் பகலும். இரவில் நான் சொல் வாங்கியைக் (டிக்டாஃபோன்) கொண்டு வேலை செய்கிறேன். ஆக எனக்கு வருத்தமாக இருக்கும்... என்னால் வேலை செய்ய முடியாமல் போனால் எனக்கு வருத்தமாக இருக்கும். இதுதான் கிருஷ்ண உணர்வு. ஒருவர் வேலை செய்வதற்கு மிகவும் ஆர்வத்துடன் இருக்க வேண்டும். இது சோம்பேறிகள் சமுதாயம் அல்ல. அப்படி கிடையாது. எங்களுக்குப் போதுமான அளவிற்கு பணிகள் இருக்கின்றன. இவர்கள் பத்திரிகையை தொகுத்து அமைக்கிறார்கள், இவர்கள் பத்திரிகையை விற்பனை செய்கிறார்கள். கிருஷ்ண உணர்வை இந்த அளவில் எவ்வாறு பரப்ப முடியும் என்ற முயர்ச்சியில் முமுராமாக இருக்கிறார்கள். இது வாஸ்தவமான விஷயம்.