TA/Prabhupada 0040 - இதோ இங்கே ஒரு நித்திய பரமன்

Revision as of 15:22, 26 May 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 16.8 -- Tokyo, January 28, 1975

அங்கே லட்ச, லட்சமாகவும், கோடிக்கணக்கான உயிர்வாழிகள் இருக்கின்றார்கள், அத்துடன் ஒவ்வொரு இதயத்திலும் அங்கு அவர் அமர்ந்திருக்கிறார். ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்தோ மத்தஹ ஸ்ம்ருதிர்ஜ்ஞானம பபோஹனம் ச (ப.கீ.15.15). அவர் அவ்வாறு நிர்வகித்துக் கொண்டிருக்கிற்ர் ஆகையால் அவர் நம்மைப் போல் கட்டுப்படுத்துபவர் என்று நாம் நினைத்தால் அது நம்முடைய அறியாமை. அவர் அதிகாரம் செலுத்துபர். அங்கே கட்டுப்படுத்துபவர் இருக்கிறார். அளவற்ற அறிவும், கணக்கற்ற உதவியாளரும், அளவற்ற திறமையுடனும் அவர் நிர்வகிக்கிறார். ஒரு மனிதனால் அளவற்ற சக்தியுடன் இருக்க முடியும் என்று இந்த அருவவாதிகளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆகையினால் அவர்கள் அருவவாதிகளாகிறார்கள். அவர்களால் சிந்திக்க முடியவில்லை. இந்த அருவவாதிகள், அவர்களால் கற்பனைக்கூட செய்ய முடியாது. அவர்கள் கற்பனை செய்கிறார்கள், "ஒருவர் மனிதர் என்றால், அவர் என்னைப் போல் ஒரு மனிதராவார். என்னால் இதைச் செய்ய முடியவில்லை. ஆகையினால் அவராலும் செய்ய முடியாது." ஆகையினால் அவர்கள் மூடா. அவஜானந்தி மாம் மூடாஹ. (ப.கீ.9.11). அவர்கள் கிருஷ்ணரை தங்களுடன் ஒப்பிடுகிறார்கள். அவர் மனிதரானதால், அதேபோல் கிருஷ்ணரும் ஒரு மனிதர். அவருக்குத் தெரியாது. வேதங்கள் தெரிவிப்பது என்னவென்றால் "அவர் மனிதரான போதிலும், அவர் கணக்கற்ற அனைத்து மனிதர்களையும் பராமரிக்கிறார்." அது அவர்களுக்குத் தெரியாது. ஏகொயோ பஹூனாம் விததாதி காமான். அந்த ஒருமை மனிதர், அவர் பல லட்சம், பல கோடி கணக்கான மக்களைப் பராமரிக்கிறார். நாம் ஒவ்வொருவரும் ஒரு மனிதன். நான் ஒரு மனிதன், நீங்கள் மனிதர்கள். எறும்பும் ஒரு மனிதன், புனையும் ஒரு மனிதன், நாய் ஒரு மனிதன், பூச்சியும் ஒரு மனிதன். மரங்களும் மனிதர்கள். ஒவ்வொருவரும் மனிதர்கள். ஒவ்வொருவரும் மனிதர்கள். அத்துடன் மற்றொறு மனிதரும் இருக்கின்றார். அவர்தான் பகவான், கிருஷ்ணர். அந்த ஒரு மனிதர்தான் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான பலவிதமான மக்களை பராமரித்துக் கொண்டு இருக்கிறார். இதுதான் வேதத்தில் ஏகொயோ பஹூனாம் விததாதி காமான், நித்யொ நித்யானாம் செதானாஸ் செதனானாம் (க.உ.2.2.13). இதுதான் அந்த தகவல். ஆகையால் கிருஷ்ணரும் பகவத் கிதையில் கூறுகிறார், அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஹ ஸர்வம் ப்ரவர்ததே இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமன்விதாஹ (ப.கீ.10.8). ஆகையினால் ஒரு பக்தர், தெளிவாக புரிந்துக் கொள்ளும் பொழுது அதாவது "இங்கு ஒரு நித்தியமான பரமன், தலைவராக, கட்டுப்படுத்துபவராக, அனைத்தையும் பராமரிப்பவராக," பிறகு அவர் அவரிடம் சரணடைந்து அவருடைய பக்தனாகிறார்.