TA/Prabhupada 0487 - பைபிளோ, குரானோ, பகவத்கீதையோ - நாம் அவற்றுள் இருக்கும் நற்செய்திகளை மட்டுமே பார்க்கவேண்

Revision as of 03:40, 30 May 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0487 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture -- Seattle, October 18, 1968

பிரபுபாதர்: அப்படியானால், வேறு ஏதாவது கேள்வி? ஜாஹ்னவா: கிறிஸ்து உணர்வு மற்றும் கிருஷ்ண உணர்வு, வார்த்தைகள் மிகவும் ஒத்தவை. தயவுசெய்து சொற்களை ஒன்றிணைத்து, வார்த்தைகள் எங்களுக்கு எப்படி வந்தன என்பதை விளக்குங்கள். பிரபுபாதர்: நான் பல முறை விளக்கியுள்ளேன் - ஒரு சிறு அகராதி மற்றும் சர்வதேச அகராதி. சிறு அகராதி, அகராதி இல்லை என்று நீங்கள் கூற முடியாது, ஆனால் இது ஒரு குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கானது. சர்வதேச அகராதி என்பது ஒரு குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கானது. அவர்கள் அனைவரும் மாணவர்களே கிறிஸ்து ... கிறிஸ்துவால் பேசப்பட்டதும்கூட, கடவுள் உணர்வுதான், ஆனால் அது ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கானது. மேலும் அவர்கள் எந்த வகையானவர்கள்? அவர்கள் நாகரிகமானவர்கள்கூட இல்லை. ஏனெனில், கிறிஸ்து இறையுணர்வை விளக்கிக் கொண்டிருந்தார், அதுதான் அவருடைய தவறு, அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். அவர்கள் எந்த வகையனவர்கள்? நீங்களே மதிப்பிடுங்கள். அவருடைய ஒரே தவறு என்னவென்றால், அவர் கடவுளை விளக்கினார், அதற்கு, அவர்கள் - அவரை சிலுவையில் அறைந்தார்கள். சிலுவையில் அறையப்பட்டதுதான் அதற்கான வெகுமதி. எனவே அவர்கள் எந்த வகையானவர்கள்? அந்த சமூகத்தின் நிலையைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஆகையால், இயேசு கிறிஸ்து பேசியது, அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் அர்ஜுனனைப் போன்ற ஒருவரிடம் பகவத் கீதையைப் பேசும்போது, ​​அது வேறு விஷயம். எனவே நாம் நேரத்திற்கு ஏற்ப, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, கேட்போர் கூட்டத்தின் படி பேச வேண்டும். இங்கே ஒரு சில நபர்கள் மட்டுமே கலந்துகொள்கிறார்கள் என்று நீங்கள் பார்க்கவில்லையா? ஏன்? அவர்களால் கிருஷ்ண விஞ்ஞானத்தை கிருஷ்ண உணர்வைப் புரிந்து கொள்ள முடியாது. இது எல்லா வகுப்பினருக்கும் பொருந்தாது. இது கடவுள் உணர்வின் மிக உயர்ந்த தரமாகும். அன்பு. இறைவன் மீது அன்பு. எனவே சந்தேகத்திற்கு இடமின்றி இறைவன் மீதான அன்பின் போதனைகளும் உள்ளன. அதுதான் வித்தியாசம். அதே விஷயம். எப்போதும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். தொடக்க நிலையில் இருக்கும் மாணவர்களுக்கான சிறிய அகராதி, மற்றும் உயர்நிலை மாணவர்கள், முதுகலை மாணவர்களுக்கான சர்வதேச அகராதி, அவை இரண்டும் அகராதிகள். ஆனால் இது ஒருவருக்கானது, அது வேறு ஒருவருக்கானது. மற்றும் இதன் சோதனை பலேன பரிச்சியதே . பலேன பரிச்சியதே, நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு காட்டில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அங்கு பல மரங்கள் உள்ளன. ஆனால் இந்த மரம் என்ன, அது என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் பூவைப் பார்த்தவுடனேயே, "ஓ, இதோ ஆப்பிள். ஓ, இது ஆப்பிள் மரம்." அன்றொருநாள், நீங்கள் ஆப்பிள் மரத்தை பார்த்ததில்லை என்று சொன்னீர்களல்லவா?. ஆம். இப்போது, ​​நீங்கள் ஆப்பிளைப் பார்த்தவுடன், "இது ஆப்பிள் மரம்." என்று புரிந்து கொண்டீர்கள். எந்த வேதத்தின் சோதனையும், ஒருவர் கடவுள் மீதான அன்பை எவ்வாறு வளர்த்துக் கொள்கிறார் என்பது தான். பலேனா பரிச்சியதே. சில மதக் கொள்கைகளைப் பின்பற்றுவதனால், நீங்கள் கடவுள் மீதான உங்கள் அன்பை வளர்த்துக் கொள்கிறீர்கள் என்றால், அது சரியானதுதான்.. இது பைபிளா அல்லது குரானா அல்லது பகவத் கீதையா என்பது முக்கியமல்ல. அது ஒரு பொருட்டும் அல்ல. பழம் என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். மக்கள் கடவுளின் அன்பை வளர்த்துக் கொள்கிறார்களா என்பதுதான் பழம், அப்படியானால், அது சரியானது. இது நல்லதா, அது நல்லது, இது கெட்டதா, இது ... என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்காதீர்கள். விளைவை வைத்து புரிந்து கொள்ள முயற்சி செய்யவும். அதாவது, நீங்கள் பழத்தைப் பார்த்தால், அது முதல் தரம். எனவே இது பைபிளா அல்லது கீதையா என்பது முக்கியமல்ல. பைபிளைப் படிப்பதன் மூலம் நீங்கள் கடவுள் மீதான அன்பை வளர்த்துக் கொள்ள முடிந்தால், அது முதல் தரம், பகவத் கீதையினால் நீங்கள் கடவுள் மீதான அன்பை வளர்த்துக் கொள்ள முடிந்தால், அது முதல் தரம். அவ்வாறு இல்லையெனில், அது பைபிளோ, குரானோ, பகவத்-கீதையோ, அது உங்களுக்கு எந்த விளைவையும் ஏற்படுத்தாது. எனவே அது உங்களைப் பொறுத்தது.. ஒப்பிடுவதன் மூலம் அல்ல, ஆனால் உங்கள் சொந்த செயல்பாடுகளால். இயேசு கிறிஸ்து கொடுத்த போதனையை நீங்கள் உண்மையில் பின்பற்றினால், நீங்கள் கடவுளின் மீதான அன்பையும் வளர்த்துக் கொள்வீர்கள். எந்த சந்தேகமும் இல்லை. இதேபோல், நீங்கள் கிருஷ்ணரின் அறிவுறுத்தலைப் பின்பற்றினாலும், நீங்களும் வளர்ச்சியடைவீர்கள். எனவே அது உங்களுடையது. நீங்கள் பின்பற்ற முயற்சியுங்கள். நீங்கள் பின்பற்றவில்லை என்றால், ஒரு ஒப்பீட்டு ஆய்வு செய்ய முயற்சி செய்தால், "இது நல்லது" அல்லது "இது மோசமானது", "இது மோசமானது" அல்லது "இது நல்லது," ஷ்ரம ஏவ ஹீ கேவலம் (ஸ்ரீமத் பாகவதம் 1.2.8) அது வீண் வேலை என்று அறியப்படுகிறது ஒப்பீட்டு ஆய்வு ஏன்? நீங்கள் எந்த அளவுக்கு கடவுள் மீதான அன்பை வளர்த்துக் கொள்கிறீர்கள் என்று பாருங்கள், அவ்வளவுதான். பலேன பரிச்சியதே. " அதில் ஆப்பிள் உள்ளதா; அதுவே முக்கியம், இந்த மரம் என்ன என்பது முக்கியமில்லை. நான் ஆப்பிளில் அக்கறை கொண்டுள்ளேன். "