TA/Prabhupada 0519 - கிருஷ்ண உணர்வில் இருப்பவர்கள் - தமக்கு விருப்பமானதை விரும்பமாட்டார்கள்

Revision as of 08:31, 30 May 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0519 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968

கடவுள் யார், அவருடைய குணம் என்ன என்பதை அறிந்துக் கொள்வதில் எல்லோரும் பேராவல் கொண்டுள்ளனர். சிலர் கடவுள் இல்லை என்கின்றனர், சிலர் கடவுள் உயிரற்றவர் என்கின்றனர். இவை அனைத்தும் நிலவும் சந்தேகங்கள். ஆனால் கிருஷ்ணர் கூறுகிறார், அஸம்ஷய. சந்தேகமின்றி. உணர்வீர்கள், பூரணமாக தெரிந்துக் கொள்வீர்கள், கடவுள் இருக்கிறார், கிருஷ்ணர் இருக்கிறார் என்று. அவரே அனைத்து சக்திகளுக்கும் மூலமானவர். அவரே ஆதி புருஷர். இவ்விடயங்களை ஐயமின்றி கற்றுக் கொள்வீர்கள். முதலாவதாக, ஆன்மீக ஞானத்தில் நாம் எந்த முன்னேற்றமும் அடைய முடியாது, சந்தேகங்களின் காரணமாக, ஸம்ஷய:. இச்சந்தேகங்கள் அகற்றப்படலாம், நிஜ அறிவை வளர்ப்பதாலும் சரியான சகவாசத்தாலும், உண்மையான முறையை பின்பற்றுவதாலும் சந்தேகங்களை அகற்றிவிடலாம். கிருஷ்ண உணர்வினர், எட்டாக் கனிக்கு கொட்டாவி விடுபவர்களும் அல்ல. பகற்கனவு காண்பவர்களுமல்ல. உண்மையில் அவர்கள் பரம புருஷ பகவானை அடைய உறுதியுடன் முன்னேறுகிறார்கள். ப்ரஹ்ம-ஸம்ஹிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று, சிந்தாமணி-ப்ரகர-ஸத்மஸு கல்ப-வ்ருக்ஷ-லக்ஷாவ்ருதேஷு ஸுரபீர் அபிபாலயந்தம் (Bs. 5.29). சிந்தாமணி தாமம் (கோலோக விருந்தாவனம்) எனப்படும் ஒரு கிரகம் உள்ளது. அந்த தாமத்தில்... பகவத் கீதையில் குறிப்பிட்டுள்ளது போன்று, மத் தாம. தாம என்றால் அவருடைய இருப்பிடம். கிருஷ்ணர் கூறுகிறார், "எனக்கென்று ஒரு தனி இருப்பிடம் உள்ளது." நாம் எவ்வாறு மறுக்க முடியும்? அந்த இருப்பிடம் எப்படிப்பட்டது? அதுவும் பகவத் கீதை முதலிய வேத இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம (BG 15.6). இங்கு, எந்த தாமம், எந்த கிரகத்திற்கு சென்றாலும்... யாதேனும் ஒன்று... ஸ்புட்னிக் மூலம் அல்ல, இயற்கையான பிறப்பாலும் கூட. எந்த கிரகத்திற்கு சென்றாலும்... இந்த கிரகத்தில் நாம் இருப்பது போன்று. எனினும் நாம் இந்த கிரகத்திலிருந்து திரும்பிச் செல்ல வேண்டும். இங்கேயே இருக்க அனுமதி இல்லை. நீங்கள் அமெரிக்கர்கள், அது சரியே; ஆனால் எத்தனை காலம் நீங்கள் அமெரிக்கர்களாக இருப்பீர்கள்? இதை இம்மக்கள் புரிந்து கொள்வதில்லை. வேறு கிரகத்திற்கோ வேறோரு இடத்திற்கோ திரும்பிச் செல்ல வேண்டி வரும். "முடியாது, நான் இங்குதான் இருப்பேன். என்னிடம் விசா உள்ளது, நிரந்தர குடியுரிமை உள்ளது." என்றெல்லாம் கூற முடியாது. இது எல்லாம் அனுமதிக்கபடுவதில்லை. ஒரு நாள் மரணம் வரும், "தயவு செய்து வெளியேறு" என்று. "இல்லை ஐயா, எனக்கு நிறைய வேலை இருக்கிறது." "இல்லை. உருப்படாத வேலை, வெளியேறு." பார்த்தீர்களா? ஆனால் கிருஷ்ண லோகத்திற்கு சென்றால், கிருஷ்ணர் கூறுகிறார், யத் கத்வா ந நிவர்தந்தே, நீங்கள் திரும்ப வர வேண்டியதில்லை. யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம (BG 15.6). இதுவும் கிருஷ்ணரின் தாமம் தான், ஏனெனில் அனைத்தும் கடவுளுடையது (கிருஷ்ணருடையது). வேறு எவரும் உரிமையாளர் அல்ல. இந்த உரிமைகோரல் அதாவது "இந்நிலமாகிய அமெரிக்கா (ஐக்கிய அமெரிக்கா), எமக்கு சொந்தமானது" இது தவறான உரிமைகோரல். இது உங்களுக்கோ வேறு ஒருவருக்கோ சொந்தமானதன்று. பல வருடங்களுக்கு முன் (நானூறு வருடங்களுக்கு முன்), இது செவ்விந்தியர்களுக்குச் சொந்தமாயிருந்தது, ஏதோ ஒரு வழியில், இப்போது நீங்கள் ஆக்கிரமித்துள்ளீர்கள். மற்றவர்கள் இங்கு வந்து ஆக்கிரமிக்க மாட்டார்கள் என்று யாரால் சொல்ல முடியும்? எனவே இவை அனைத்தும் தவறான உரிமை கோரல்கள். உண்மையில், அனைத்தும் கிருஷ்ணருக்கே சொந்தமானது. கிருஷ்ணர் கூறுகிறார் ஸர்வ-லோக-மஹேஷ்வரம் (BG 5.29): என்று "நானே எல்லா கிரகங்களினதும் உன்னத உரிமையாளனும் கட்டுப்பாட்டாளனும் ஆவேன்." எனவே எல்லாம் அவருக்கு சொந்தமானது. (கிருஷ்ணர் கூறுகிறார் எல்லாம் அவருக்குச் சொந்தம் என்று.) எனவே அனைத்தும் அவருடைய தாமம், அவருடைய இடம், அவருடைய இருப்பிடம். அப்படியிருக்கையில் ஏன் அதை மாற்ற வேண்டும்? அவர் கூறுகிறார், யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம் (BG 15.6).