TA/Prabhupada 0456 - உடம்பை இயக்குகின்ற ஜீவன் உயர்ந்த சக்தியாகும்.

Revision as of 07:27, 31 May 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 7.9.6 -- Mayapur, February 26, 1977

பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ளது, பூமிர் ஆபோ 'னலோ வாயு: கம் மனோ புத்திர் ஏவ ச அஹங்கார இதீயம் பின்னா மே ப்ரக்ருதிர் அஷ்டதா (பகவத் கீதை 7.4) இந்த பௌதிகவாதிகள் - விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் மேலும் மற்ற கற்பனையாளர்கள் - அவர்கள் இந்த மூலப் பொருட்களை- ஜடப் பொருட்களை கையாள்கிறார்கள், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், உளவியல், அல்லது, சிறிது உயர்ந்திருந்தால், புத்தி, ஆனால் அதற்கு மேல் இல்லை. அவர்கள் தங்களுடைய பல்கலைக் கழகத்தில், கல்லூரிகளில், கல்வி நிலையங்களில் செயல்படுகிறார்கள். அவர்கள் இந்த மூலப் பொருட்கள், ஜடப் பொருட்களைப் பற்றி அக்கறை கொள்கிறார்கள். அவர்களுக்கு ஆன்மீக அறிவு இல்லை. கிருஷ்ணர் கூறினார் ...... பகவத் கீதையிலிருந்து நாம் தகவல்களைப் பெறுகிறோம், அபரேயம்: "இந்த எட்டு மூலப் பொருட்களும், தாழ்வானவை." ஆகையினால், அவர்கள் இந்த தாழ்வான இயற்கையுடன் மட்டும் செயல்படுவதால், அவர்களுடைய அறிவும் தாழ்ந்ததாக உள்ளது. இது உண்மை. நான் குற்றம் சாட்டுகிறேன் என்பதல்ல. இல்லை. இதுதான் ...... அவர்களுக்குத் தகவல் இல்லை. பெரிய, உயர்ந்த பேராசிரியர், அவர்கள் கூறுகிறார்கள், இந்த உடல் அழிந்துவிடும்... "உடல் அழிந்துவிடும்" என்றால் பஞ்சத்வ-ப்ராப்த. மற்றோரு உடல் இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. சூட்சம உடல் - மனம், புத்தி, அகங்காரம். அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், அவ்வளவுதான் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் .. "இது முடிந்துவிட்டது. நான் பார்க்கிறேன், நீங்கள் உடலை எரிப்பீர்கள் அல்லது புதைப்பீர்கள், முடிந்துவிட்டது, அனைத்தும் முடிந்துவிட்டது. மேலும் மற்ற பொருட்கள் எங்கே?" ஆகையால் அவர்களுக்கு அறிவு இல்லை. அவர்களுக்கு ஆத்மாவைக் கொண்டு செல்லும் சூட்சம உடல், நிலம், நீர், பற்றிய அறிவு கூட இல்லை, மேலும் அவர்களுக்கு ஆத்மாவைப் பற்றி என்ன தெரியும்? ஆகையால் கிருஷ்ணர் பகவத் கீதையில் தகவல் கொடுக்கிறார், அபரேயம் : "இந்த மூலப் பொருட்கள், மனம், புத்தி, அகங்காரம் வரையில் கூட," பின்னா, " அவை என்னுடைய பிரிந்த சக்தி, பிரிந்த சக்தி. மேலும்," அபரேயம், "இவை தாழ்ந்தவை. மேலும் மற்றொன்றும் உள்ளது, உயர்ந்த இயற்கை." அபரேயம் இதஸ் த்வ வித்திமே ப்ரக்ருதிம் பரா. பரா என்றால் "உயர்ந்த." இப்பொது அவர்கள் கேட்கலாம், "அது என்ன? எங்களுக்கு இந்த மூலப் பொருட்கள் மட்டும் தான் தெரியும். அந்த மற்றொரு உயர்ந்த சக்தி என்ன?" ஜீவ பூத: மஹா-பாஹோ, தெளிவாக கூறுகிறது: "அது உயிர்...." மேலும் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அதாவது, இந்த எட்டு பௌதிகப் பொருட்கள் அல்லது ஐந்து பொருட்களைத் தவிர வேறு உயர்ந்த சக்தி இல்லை என்று. ஆகையினால் அவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள். முதல் முறையாக அவர்கள் சிறிது அறிவு பெறுகிறார்கள், பகவத் கீதை உண்மையுருவில், அதன் மூலம் அவர்கள் தெரிந்துக் கொள்வார்கள் அதவாது, மற்றோரு, உயர்ந்த சக்தி, ஜீவ பூத: இருக்கிறது. உடலை ஆட்டுவிக்கும் உயிர்வாழி, அதுதான் உயர்ந்த சக்தி. அவர்களுக்குத் தகவலும் இல்லை, உயர்ந்த சக்தியை புரிந்துக் கொள்ளும் முயற்சியும் இல்லை அவர்களுடைய பல்கலைக் கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இல்லை. ஆகையினால் அவர்கள் மூடா, மூடர்கள். அவர்களுடைய அறிவு என்று சொல்லப்படுவதை எண்ணி மிகவும் பெருமை கொண்டிருப்பார்கள், ஆனால் வேத அறிவைப் பொறுத்தவரை அவர்கள் மூடர்கள். மேலும் ஒருவரால் உயர்ந்த சக்தியைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை என்றால், ப்ரக்ருதி, இயற்கை, பிறகு எவ்வாறு ஒருவரால் பகவானைப் புரிந்துக் கொள்ள முடியும்? அது சாத்தியமல்ல. பின்பு மறுபடியும், பகவானுக்கும் உயர்ந்த சக்திக்கும் இடையில் உள்ள உறவு, அதுதான் பக்தி. அது மிகவும் கடினம். மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஷ்சித் யததி ஸித்தயே (பகவத் கீதை 7.3). அந்த ஸித்தயே என்றால் உயர்ந்த சக்தியைப் புரிந்து கொள்வதாகும். அதுதான் ஸித்தி. அதன் பிறகு, ஒருவரால் கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள முடியும். ஆகையால் இது மிகவும் கடினம், அதிலும் இந்த காலத்தில். மந்தா: சுமந்த-மதயோ (ஸ்ரீமத் பாகவதம் 1.1.10). அவர்கள் ... மந்தா: என்றால் அவர்களுக்கு ஆர்வம் இல்லை, அல்லது அவர்களுக்கு சிறிது ஆர்வம் இருந்தாலும், அவர்கள் மிகவும் மெதுவானவர்கள். இதுதான் முதன்மையான அறிவு என்று அவர்களுக்குப் புரியவில்லை முதலில் உங்களுக்கு அது தெரிய வேண்டும், அதாதொ ப்ரம்ம ஜினாசா, அந்த உன்னத அறிவு. அது அத்தியாவசியமானது. ஆனால் எல்லோரும் உதாசீனப்படுத்துகிறார்கள். இந்த உடலை இயக்கிக் கொண்டிருப்பது எது என்பதைப் பற்றி ஆராய்ந்தறிவதில் ஆர்வம் இல்லை. அதைப் பற்றிய கேள்வியே இல்லை. அவர்கள் தன்னிச்சையென்று நினைக்கிறார்கள், மூலப் பொருள்களின் கலவையால்... அவர்கள் இன்னமும் இந்த குறிக்கோளில் விடாப்பிடியாக இருக்கிறார்கள், மேலும் நீங்கள் சவாலிட்டால், "நீங்கள் இந்த இரசாயனத்தை எடுத்து ஒரு உயிரைத் தயார் செய்யுங்கள்," அவர்கள் கூறுவார்கள், "அது என்னால் செய்ய முடியாது." என்ன இது? உங்களால் செய்ய முடியவில்லை என்றால், பின்னர் ஏன் அபத்தமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள், அதாவது "மூலப் பொருட்கள் அல்லது இரசாயனங்களின் கலவையால் உயிர் உருவாகிறது"? நீங்கள் இரசாயனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.... கலிபோனியா பல்கலைக் கழகத்திலிருக்கும் நம் டாகடர் ஸ்வரூப தாமோதரரிடம், ஒரு சிறந்த பேராசிரியர் இரசாயன பரிணாமம் பற்றி சொற்பொழிவு கொடுக்க வந்தார். அவரிடம் உடனடியாக சவாலிட்டார், அதவாது "நான் உங்களுக்கு இரசாயனம் கொடுத்தால், உங்களால் உயிரை உருவாக்க முடியுமா?" அவர் கூறினார், "அது என்னால் முடியாது." (நகைத்து) ஆக இதுதான் அவர்களுடைய நிலை. அவர்களால் அதை நிரூபிக்க முடியாது. அவர்களால் அதைச் செய்ய முடியாது.