TA/Prabhupada 0482 - பற்றுதலுக்கு தூண்டுகோள் மனம்தான்.

Revision as of 07:33, 31 May 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture -- Seattle, October 18, 1968

மனமே பற்றை வளர்க்கும் வாகனம். நீங்கள் யாரோ, சில பையன், சில பெண், சில நபர்கள் மீது பற்று வைத்திருந்தால்... பொதுவாக நாம் ஒரு நபர் மீது பற்று வைத்திருப்போம். அருவமான பற்று என்பது போலியான விஷயம். நீங்கள் பற்று வைக்க விரும்பினால், அந்த பற்று தனிப்பட்ட ஒன்றின் மீதுதான் இருக்க வேண்டும். இது உண்மையல்லவா? அருவமான பற்று ... நீங்கள் வானத்தை நேசிக்க முடியாது, ஆனால் நீங்கள் சூரியனை நேசிக்க முடியும், நீங்கள் சந்திரனை நேசிக்க முடியும், நீங்கள் நட்சத்திரங்களை நேசிக்க முடியும், ஏனென்றால் அவை குறிப்பிட்ட நபர். நீங்கள் வானத்தை நேசிக்க விரும்பினால், அது உங்களுக்கு மிகவும் கடினம். நீங்கள் மீண்டும் இந்த சூரியனுக்கு வர வேண்டும். எனவே யோக அமைப்பின் முழுமையான உச்சம், அன்பில் ... எனவே நீங்கள் யாரையாவது நேசிக்க வேண்டும், நபர். அது கிருஷ்ணர். இங்கிருக்கும் படத்தில் உள்ளது போல. ராதாராணி கிருஷ்ணரை நேசிக்கிறார், மேலும் அவள் பூக்களை கிருஷ்ணருக்கு வழங்குகிறார், கிருஷ்ணர் தன் புல்லாங்குழலை வாசிக்கிறார். எனவே இந்த படத்தை நீங்கள் எப்போதும் நன்றாக நினைவில் கொள்ளலாம். பின்னர் நீங்கள் தொடர்ந்து யோகத்தில், சமாதியில் இருக்கலாம். அருவமான போக்கு எதற்கு? ஏன் நீங்கள் ஏதாவது, ஏதாவது வெற்றிடமா? வெற்றிடமாக இருக்க முடியாது. ஏதேனும் வெற்றிடத்தை நீங்கள் நினைத்தால், ஏதோ ஒளி, ஏதோ வண்ணம், வண்ணமயமான, பல விஷயங்கள் இருக்கும். ஆனால் அதுவும் வடிவம். வடிவத்தை எவ்வாறு தவிர்க்க முடியும்? அது சாத்தியமில்லை. எனவே நீங்கள் உங்கள் மனதை, உண்மையான வடிவத்தில் ஏன் ஒரு நிலைப்படுத்து கூடாது, ஈஷ்2வர: பரம: க்ரு'ஷ்ண: ஸச்-சித்3-ஆனந்த3-விக்3ரஹ: (பிரம்ம ஸம்ஹிதை 5.1), முழுமுதற் கடவுள், ஆள்பவர் உன்னத ஆளுநர், அவருக்கு உடல் மற்றும் வடிவம் உள்ளதா? எப்படி? விக்ரஹஹா, விக்ரஹஹா என்றால் உடல். எந்த வகையான உடல்? ஸத்- சித்-ஆனந்த, பேரின்பம் நிறைந்த, அறிவு நிறைந்த, நித்தியமான உடல். அந்த உடல். இது போன்ற உடல் அல்ல. இந்த உடல் அறியாமை, துயரங்கள் நிறைந்தது, நித்தியமானதும் அல்ல. எதிர்மறையானது. அவரது உடல் நித்தியமானது; என் உடல் நிலையில்லாதாது. அவரது உடல் ஆனந்தத்தால் நிறைந்துள்ளது; என் உடல் துயரங்களால் நிறைந்துள்ளது, எப்போதும் என்னை தொந்தரவு செய்யும் ஒன்று- தலைவலி, பல் வலி, இந்த வலி, அந்த வலி. யாரோ, எனக்கு தனிப்பட்ட சிக்கலைக் கொடுத்திருக்கிறார்கள். நிறைய... அத்யாத்மீக, ஆதிபௌதிக, கடுமையான வெப்பம், கடுமையான குளிர், பல விஷயங்கள். இந்த உடல் எப்போதும் மூன்று வகயையான துயரங்களுக்கு உட்பட்டது, இந்த பௌதிக உடல்.