TA/Prabhupada 0095 - நம்முடைய வேலை சரணடைவது

Revision as of 12:38, 2 August 2015 by Visnu Murti (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0095 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on BG 4.7 -- Bombay, March 27, 1974

நாம் சரணடைகிறோம், ஆனால் நாம் கிருஷ்ணரிடம் சரணடையவில்லை. இதுவே நோய். இதுவே நோய். கிருஷ்ணர் பக்தி இயக்கம் என்றால் இந்த நோயை குணப்படுத்துவதாகும். இந்த நோயை குணப்படுத்துங்கள். கிருஷ்ணரும் வருகிறார். அவர் கூறுகிறார், யதா யதா ஹி தர்மஸ்ய (ப.கீ. 4.7). தர்மஸ்ய க்லானி:, சமய செயல்முறையில் முரண்பாடு, அங்கே முரண்பாடு இருக்கும் போது, கிருஷ்ணர் கூறுகிறார், ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம். மேலும் அப்யுத்தானமதர்மஸ்ய. அங்கே இரண்டு பொருள்கள் இருக்கின்றன. மக்கள் கிருஷ்ணரிடம் சரணடையாத போது, அவர்கள் பல "கிருஷ்ணர்களை" உருவாக்குவார்கள், பல அயோக்கியர்கள், அங்கே சரணடைய. அதுதான் அதர்மஸ்ய. தர்ம என்றால் கிருஷ்ணரிடம் சரணடைவது, ஆனால் கிருஷ்ணரிடம் சரணடைவதற்கு பதிலாக, அவர்கள் பூனை, நாய், இது, அது என்று பலவற்றிடம் சரணடைகிறார்கள். அது அதர்ம, கிருஷ்ணர் இங்கு இந்து மதம், முஸ்லிம் மதம், அல்லது கிறிஸ்துவ மதம் என்று ஸ்தாபிக்க வரவில்லை. இல்லை. அவர் உண்மையான மதத்தை ஸ்தாபிக்க வந்தார். உண்மையான மதம் என்றால் நாம் சமர்ப்பிக்க வேண்டும், உண்மையானவரிடம் சரணடைய வேண்டும். அதுதான் உண்மையான மதம். நாம் சரணடைந்துக் கொண்டிருக்கிறோம். எல்லோருக்கும் சில கருத்துக்கள் இருக்கும். அவர் அங்கே சரணடைந்துவிட்டார். அரசியலோ, சமூக சேவையோ, பொருளியலோ, மதசார்ந்தோ, ஏதோவொன்று. எல்லோருக்கும் சில கருத்துக்கள் இருக்கும். மேலும் அந்த கருத்துச் சம்மந்தப்பட்ட தலைவர்களும் அவ்விடத்தில் இருக்கிறார்கள். ஆகையால் நம் வேலை சரணடைவதாகும். அது உண்மை செய்தி. ஆனால் நமக்கு எங்கு சரணடைவது என்று தெரியவில்லை. அதுதான் கஷ்டம். மேலும் சரணடைவதில் தவறு அல்லது இடந்தவறி போவதால், உலகம் முழுவதும் ஒளுங்கற்ற நிலையில் உள்ளது. இந்த சரணடைதலை அந்த சரணடைதலுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறோம். இனிமேலும் காங்கிரஸ் கட்சி இல்லை. இப்பொழுது போது உடைமைக் கொள்கை கட்சி. மறுபடியும், "போது உடைமைக் கொள்கை கட்சி இல்லை. இந்த கட்சி, அந்த காட்சி." கட்சி மாறுவதில் என்ன பயன்? ஏனென்றால் இந்த கட்சி அல்லது அந்த கட்சி, அவர்கள் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை. நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடையும் கருத்துடன் வரவில்லை என்றால், அங்கே எந்த அமைதியும் ஏற்படாது. அதுதான் கருத்து. வெறுமனே வாணலியிலிருந்து தீக்குள் செல்வதால் நீங்கள் காப்பாற்றப்படமாட்டீர்கள். ஆகையினால் கிருஷ்ணரின் கடைசி அறிவுரை யாதெனில் ஸர்வ தர்மான்பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி. (ப.கீ. 18.66). ஆகையால் மதத்தின் முரண்பாடு என்றால், இதுவும் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. ஸ வை பும்ஸாம் பரோ தர்ம: முதல் தரம் அல்லது உன்னதமான தர்ம. பரஹ என்றால் உன்னதமான, தெய்வீகமான. ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே (ஸ்ரீ.பா. 1.2.6).

நாம் அதோக்ஷஜேவிடம் சரணடையும் போது, அதோக்ஷஜே என்றால் ஒப்புயர்வற்ற நித்தியமானவர், அல்லது கிருஷ்ணர். கிருஷ்ணரின் மற்றொரு பெயர் அதோக்ஷஜே. அஹைதுகி அப்ரதிஹதா. அஹைதுகி என்றால் எந்த காரணமும் இல்லாமல். "கிருஷ்ணர் அத்தகைய, மேலும் அதுபோன்றவர், ஆகையினால் நான் சரணடைகிறேன்" என்பதல்ல. இல்லை. எந்த காரணமும் இல்லாமல். அஹைதுகி அப்ரதிஹதா. அதை சோதனை செய்ய முடியாது. ஒருவராலும் சோதனை செய்ய முடியாது. நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டுமென்றால் அங்கே சோதனை கிடையாது, எந்த தடையும் இல்லை. நீங்கள் எந்த நிலையிலும் செய்யலாம். நீங்கள் செய்யலாம். அஹைதுகி அப்ரதிஹதா யயாத்மா ஸுப்ரஸீததி. அதன்பின் நீங்கள், ஆத்மா, உங்கள் ஆத்மா, உங்கள் ஆத்மா, உங்கள் எண்ணம், உங்கள் உடல், திருப்தி பெறும். இதுதான் அந்த செயல்முறை.