TA/Prabhupada 0622 - கிருஷ்ண பிரக்ஞையில் இருப்போருடன் இணைவு கொள்க

Revision as of 03:56, 23 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0622 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 7.6.17-18 -- New Vrindaban, July 1, 1976

இந்த ஜட உலகில் அனுபவிக்க ஆசைப்பட்டிருந்தாலும், கிருஷ்ண உணர்வை ஏற்றுக்கொள்ளுங்கள். கிருஷ்ணர் உங்களை திருப்திப்படுத்துவார். அவர் உங்களுக்குக் கொடுப்பார். உங்கள் ஜட இன்பத்திற்காக வேறு ஏதாவது செய்ய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் விரும்பினால்... ஏனென்றால் ஜட இன்பத்தை நம்மால் விட்டுவிட முடியவில்லை. நினைவுக்கெட்டாத காலம் முதல் நாம் பழக்கமாகிவிட்டோம். பல ஜன்மங்களுக்குப் பிறகு பல ஜன்மங்கள் என, வெறுமனே புலன் திருப்திக்காக வாழ்வது. இந்த சிந்தனையை கைவிடுவது மிக எளிதானதல்ல. எனவே சாஸ்திரம் கூறுகிறது, புலன் திருப்தி பற்றிய எண்ணத்தைக் கொண்டிருந்தாலும், கிருஷ்ண உணர்வுக்கு வாருங்கள் என்று. அதற்கு மாறாக முயல வேண்டாம். தேவர்களைப் போல. எல்லா புலன் திருப்திகளுக்காகவும் அவர்களுக்கு வசதிகள் உள்ளன. புலன் திருப்தி என்றால் உத₃ர-உபஸ்த₂-ஜிஹ்வா (NOI 1), ஜிஹ்வா, இந்த நாக்கு, வயிறு, பிறப்புறுப்புகள். இதுதான் புலன் திருப்திக்கான முதன்மை ஆதாரங்கள். மிகவும் சுவையான உணவுகள், முடிந்தவரை வயிற்றை நிரப்பிவிட்டு, பின்னர் உடலுறவை அனுபவித்தல். இது பௌதிகம். ஆன்மீக உலகில் இந்த விஷயங்கள் இல்லை. ஜட வாழ்வில் இந்த விஷயங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

எனவே பிரகலாத மஹாராஜர் தனது நண்பர்களை எச்சரிக்கிறார்: புலனுகர்விடம் நமக்கு பற்றுதல் இருந்தால், இமோசிதும் காம-த்₃ருஷா₂ம் விஹார-க்ரீடா₃-ம்ருகோ₃ யன்-நிக₃டோ₃ விஸர்க₃꞉ (SB 7.6.17-18) நிக₃ட₃ என்றால் வேர் என்று பொருள், ஜடவுடலை ஏற்றுக்கொள்வதற்கான மூல காரணம். இந்த விஷயங்கள்தான் புலனுகர்வு. ததோ விதூ₃ராத்: தொலைதூர இடத்திலிருந்து. ததோ விதூ₃ராத் பரிஹ்ருத்ய தை₃த்யா. (SB 7.6.17-18) "எனதன்பு நண்பர்களே, நீங்கள் தைத்ய குடும்பத்தில் பிறந்தவர்கள் என்றாலும், நானும் அதில்தான் பிறந்து இருக்கிறேன்" - அவரது தந்தையும் தைத்யா. தை₃த்யேஷு ஸங்க₃ம் விஷயாத்மகேஷு: "கைவிடுங்கள் அவர்களின்..." அஸத்-ஸங்க₃-த்யாக₃ ஏஇ வைஷ்ணவ ஆசார (CC Madhya 22.87). அதே விஷயம். சைதன்ய மஹாபிரபுவும் கூறினார். எனவே யார் வைஷ்ணவர்? வைஷ்ணவா, அவர் உடனடியாக விளக்கினார், வைஷ்ணவரின் கடமை என்ன? ஒரு பக்தர் சைதன்ய மஹாபிரபுவிடம், "ஐயா, ஒரு வைஷ்ணவரின் கடமை என்ன?" என்று கேட்டார். அவர் உடனடியாக இரண்டே வரிகளில் பதிலளித்தார், அஸத்-ஸங்க₃-த்யாக₃ ஏஇ வைஷ்ணவ ஆசார: "பௌதிகவாதிகளின் சகவாசத்தை கைவிடுவது." அடுத்த கேள்வியாக, "யார் பௌதிகவாதிகள்?" அஸத் ஏக (அ)ஸ்த்ரீ-ஸங்கீ₃: "பெண்களுடன் பற்றுதலுடைய ஒருவர், அவர் அசத்." க்ருஷ்ண-ப₄க்த ஆர, அத்துடன் "கிருஷ்ண பக்தரல்லாதவர்."

நாம் இதை கைவிட வேண்டும். எனவே கட்டுப்பாட்டு விதிகள் உள்ளன. குறைந்தது, தாகாத பாலுறவு இல்லை. திருமணம் செய்து கொண்டு, ஒரு கனவானைப் போல வாழுங்கள், பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள், பின்னர் படிப்படியாக உங்களால் இந்த பாலுறவு விருப்பத்தை கைவிட முடியும். இந்த பாலுறவு ஆசையை நாம் கைவிடாவிட்டால், முற்றிலும் கிளர்ச்சியின்றி, பிறப்புச் சக்கரம் நிறுத்தப்படுவதற்கான சாத்தியம் இல்லை- பிறப்பு, இறப்பு, முதுமை, நோய். நிறுத்தப்படுவதற்கான சாத்தியமில்லை. எனவே பிரகலாத மஹாராஜர் அறிவுறுத்துகிறார், தை₃த்யேஷு ஸங்க₃ம் விஷயாத்மகேஷு: "தொடர்பு கொள்ள வேண்டாம்..." அஸத்-ஸங்க₃, அதே விஷயம், சைதன்ய மஹாபிரபு... அஸத்-ஸங்க₃-த்யாக₃ ஏஇ வைஷ்ணவ ஆசார. இது வைஷ்ணவரின் வேலை. அசத் உடன் எந்த வாய்ப்பையும் எடுக்க வேண்டாம், ஜட பற்றுள்ளவர்களுடன். இது மிகவும் கடினமான சகவாசம். பின்னர் இது சாத்தியம், உபேத நாராயணம் ஆதி₃-தே₃வம் ஸ முக்த-ஸங்கை₃ர் இஷிதோ (அ)பவர்க₃꞉ (SB 7.6.17-18). எனவே சகவாசம் மிகவும்..., ஸஜ்ஜதி ஸித்₃தா₄ஷ₂யே. கிருஷ்ண உணர்வில், பக்தி சேவையில் ஈடுபடுபவர்களுடன் உங்கள் சகவாசத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

எனவே அனைவருக்கும் பக்தர்களுடன் சகவாசம் கொள்ளும் வாய்ப்பளிக்க வெவ்வேறு மையங்களை உருவாக்கி வருகிறோம். முடிந்தவரை, நாம் தங்குமிடம் தருகிறோம், பிரசாதம் தருகிறோம் நாங்கள் உபதேசிக்கிறோம், கிருஷ்ணரை வணங்குவதற்கான வாய்ப்பைத் தருகிறோம். ஏன்? ஏனென்றால் மக்கள் சகவாசத்தின் நன்மைகளைப் பெறலாம், நாராயண. நாராயணம் ஆதி₃-தே₃வம், அவர்கள் நாராயணருடன் இணைந்திருக்கலாம். நாராயண மற்றும் நாராயணரின் பக்தி சேவையில் செயல்படுத்தப்படும் எதையும் - நாராயணர், கிருஷ்ணர், விஷ்ணு ஒரே பிரிவு….. நாராயண பரோ (அ)வ்யக்த்யாத். நாராயண என்றால் யார்..., ஆன்மீக நிலையில் இருப்பவர் - நாராயண. எனவே நாராயணருடன் தொடர்பு கொண்டவுடன், செல்வத் திருமகள் லட்சுமி இருக்கிறார். நாம் தரித்ர-நாராயண உற்பத்தியை வணங்கவில்லை, இல்லை.