TA/Prabhupada 0644 - கிருஷ்ணப் பிரக்ஞையில் அனைத்தும் உள்ளது

Revision as of 11:29, 23 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0644 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 6.1 -- Los Angeles, February 13, 1969

பிரபுபாதர்: கிரியைகள்?

பக்தர்: பொழுதுபோக்கு. கிருஷ்ண உணர்வில் இருப்பவர்களின் பொழுதுபோக்கு என்ன?

பிரபுபாதர்: பொழுதுபோக்கு?

பக்தர்: ஆம்.

பிரபுபாதர்: நடனம் ஆடுவது. (சிரிப்பொலி) வாருங்கள், எங்களுடன் நடனம் ஆடுங்கள். அது பொழுதுபோக்கு அல்லவா? மேலும் நீங்கள் சோர்வு அடையும் பொது பிரசாதம் உண்ணுங்கள். இதைவிட அதிகமாக பொழுதுபோக்கு உங்களுக்கு வேண்டுமா? உங்களுடைய பதில் என்ன. அது பொழுதுபோக்கு இல்லையா?

பக்தர்: ஆம். நான் நினைக்கிறேன் இது வரும் யாரோ ஒருவருக்கு கடினமாக ...

பிரபுபாதர்: ஏன் கடினம்? நடனம் ஆடுவது கடினமா? உச்சாடனம் செய்து மேலும் நடனம் ஆடுவது?

பக்தர்: கோயிலில் குடியிருக்கும் பக்தருக்கு அது மிக சுலபமாகும்.

பிரபுபாதர்: ஓ, நீங்கள் வந்தது போல், எவரும் வரலாம். அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். இந்த நடனத்திற்கு நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை. நீங்கள் அணைத்து ஆடுவதற்கு செல்கிறீர்கள் மேலும் பல விதமான மற்ற நடனத்திற்கு, நீங்கள் கட்டணம் செலுத்துகிறீர்கள். ஆனால் நாங்கள் வசூலிப்பதில்லை. நாங்கள் வெறுமனே, இந்த மாணவர்கள் ஏதாவது இரந்து வேண்டுகிறார்கள் ஏனென்றால் நாங்கள் பராமரிக்க வேண்டும். நாங்கள் எதுவும் வசூலிப்பதில்லை. ஆகையால் நீங்கள் வெறுமனே வந்து பொழுதுபோக்கிற்கு நடனம் ஆடினால், அது அருமையாக இருக்கும். அனைத்தும் கிருஷ்ண உணர்வில் இருக்கிறது. எங்களுக்கு இசை வேண்டும், அங்கு இசை இருக்கிறது. எங்களுக்கு நடனம் வேண்டும், அங்கு நடனம் இருக்கிறது. நீங்கள் அருமையான இசை கருவி கொண்டு வரலாம், நீங்கள் சேர்ந்துக் கொள்ளலாம். நாங்கள் அருமையான சுவையுள்ள உணவை வினியோகம் செய்கிறோம். ஆக நடைமுறையில் இது ஒரு பொழுதுபோக்கு முறையே. (சிரிப்பு) ஆம். நீங்கள் பலமாக சிந்தித்தால், நீங்கள் காண்பிர்கள், இந்த முறையில், அங்கே உழைப்பே இல்லை. வெறுமனே பொழுதுபோக்கு. ஸு-ஸுகம் (ப.கீ.9.2). அது பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஒன்பதாம் அத்தியாயத்தில் நீங்கள் காண்பிர்கள், ஸு-ஸுகம் - அனைத்தும் இனிமையாகவும் மேலும் சந்தோஷமாகவும் இருக்கும். எங்கள் அமைப்பில் ஏதாவது கண்டுபிடியுங்கள், அதாவது இது தொல்லையானது என்று நினைப்பதை. யாராவது நடைமுறை இடர்பாடுகளை என்னிடம் கூறுங்கள். "இந்த விஷயம் மிகவும் தொல்லை நிறைந்தது." சும்மா உங்களுடைய எதிரிடையான விவாதத்தை தெரிவியுங்கள். சும்மா மனதுக்கு இதமாக. அது வெறுமனே பொழுதுபோக்கு. அவ்வளவுதான். நீங்கள் சும்மா சுட்டிக்காட்டுங்கள், "சுவாமிஜி, உங்களுடைய இந்த கருத்து பொழுதுபோக்காக இல்லை, அது மகிழ்ச்சியற்ற பகுதி." ஒன்றுமில்லை.

மக்கள் விரும்புகிறார்கள். அது அவர்களுடைய இயற்கையான நிலை, இந்த குழந்தைகளைப் போல். அந்த பையன்களும் பெண்களும் நடனம் ஆடுவதை அவர்கள் பார்த்தபோது, குழந்தைகளும் நடனம் ஆடுகிறார்கள். தன்னியக்கமாக. இது இயல்பாக நடக்கிறது, இது தான் வாழ்க்கை. மேலும் இதுதான் ஆன்மீக உலகில் நம்முடைய உண்மையான வாழ்க்கை. அங்கு கவலை இல்லை. வெறுமனே மக்கள் நடனம் ஆடிக்கொண்டு, உச்சாடனம் செய்துக் கொண்டு, மேலும் நன்றாக புசித்துக் கொண்டு இருப்பார்கள். அவ்வளவு தான். தொழிற்சாலை இல்லை, வேலையாட்கள் இல்லை, தொழில்நுட்ப நிறுவனம் இல்லை. அதற்கு தேவையில்லை. இவையெல்லாம் செயற்கையானது. வேஆனந்தமயோ அப்யாசாட், (வேதாந்த-சூத்ர 1.1.12) வேதாந்தம் கூறுகிறது. அனைத்து ஜீவாத்மாக்களும், பகவான் ஆனந்தமய, நிறைந்த நிறைவான மகிழ்ச்சி உடையவர், நாம் பகவானின் அங்க உறுப்புக்களாவோம், நாமும் அதே தன்மையுடையவர்கள். ஆனந்தமயோ அப்யாசாட். ஆகையால் நம்முடைய அனைத்து செயல்முறையும் பூரண ஆனந்தமய, கிருஷ்ணருடன், அவருடைய நடன கொண்டாட்டத்தில் சேர்வது. அது உண்மையிலேயே நம்மை சந்தோஷப்படுத்தும். இங்கு நாம் செயற்கையான முறையில் சந்தோஷமடைய முயற்சிக்கிறோம். மேலும் நாம் வெறுத்துப் போகிறோம். ஆனால் நீங்கள் உண்மையிலேயே கிருஷ்ண உணர்வில் சேர்ந்திருந்தால், வெறுமனே உங்கள் அசல் நிலைக்கு உயிரூட்டுங்கள், இன்பகரமானது, சும்மா இன்பகரமானது. ஆனந்தமயோ அப்யாசாட். இவை வேதாந்த கட்டுப்பாடுகள். ஏனென்றால் நம்முடைய குணம் ஆனந்தமய. மக்கள், அனைவரும் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். இந்த ல சியினிக வழியில் பல உணவகம் உள்ளது, பல பொருள்கள் மேலும் பல பெயர் பலகைகள். ஏன்? அவர்கள் விளம்பரம் செய்கிறார்கள், "வாருங்கள், இங்கு ஆனந்தம் உள்ளது, இங்கு மகிழ்ச்சி இருக்கிறது." அவர் விளம்பரம் செய்கிறார், நாமும் அவ்வாறு செய்கிறோம். "இங்கு ஆனந்தம் உள்ளது." ஆக அனைவரும் ஆனந்தம், அல்லது மகிழ்ச்சி தேடுகிறார்கள். அதே காரியம். ஆனால் மகிழ்ச்சியில் வேறுபட்ட தரம் உள்ளது. யாரோ மகிழ்ச்சியை பௌதிக பார்வையில் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள், யாரோ மகிழ்ச்சியை ஊகம் செய்து, தத்துவம், செய்யுள், அல்லது கலை இவற்றிலிருந்து கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். யாரோ மகிழ்ச்சியை ஆன்மீக நிலையில் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். எல்லோரும் மகிழ்ச்சியை தேட முயற்சி செய்கிறார்கள். அதுதான் நம்முடைய ஒரே தொழில். இரவு பகலாக எதற்காக கடினமாக உழைக்கிறீர்கள்? ஏனென்றால் உங்களுக்குத் தெரியும், இரவில், "அந்த பெண்ணுடன் நான் சேரலாம்" "அல்லது "நான் மனைவியுடன் சேரலாம், நான் அனுபவிக்கலாம்." முழவதும், எல்லோரும் அந்த மகிழ்ச்சியை கண்டுபிடிக்க பலவகையான துன்பங்களை ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.

மகிழ்ச்சிதான் இறுதியான குறிக்கோள். ஆனால் மகிழ்ச்சி எங்கு இருக்கிறது, என்று நமக்கு தெரியவில்லை. அதுதான் மாயை. உண்மையான மகிழ்ச்சி திவ்வியமான உருவில், கிருஷ்ணரிடம் இருக்கிறது. கிருஷ்ணர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதை நீங்கள் காணலாம். நிறைய சித்திரங்கள் இருப்பதை நீங்கள் காணலாம். மேலும் நாம் சேர்ந்தால், நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் , அவ்வளவுதான். கிருஷ்ணர் இயந்திரத்தில் வேலை செய்யும் சித்திரங்களை நீங்கள் பாத்திருக்கிரிர்களா? (சிரிப்பொலி) மாபெரும் இயந்திரம்? அல்லது அவர் புகை பிடிக்கும் சித்திரங்கள் நீங்கள் பார்த்ததுண்டா? (சிரிப்பொலி) இயற்கையான மகிழ்ச்சி நீங்கள் பாருங்கள். மகிழ்ச்சி. ஆகையால் நீங்கள் அந்த வழியில் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் நீங்கள் மகிழ்ச்சி காண்பிர்கள். வெறுமனே நிறைந்த மகிழ்ச்சி, அவ்வளவுதான். ஆனந்தமயோ அப்யாசாட், (வேதாந்த-சூத்ர 1.1.12). இயற்கையாக வெறுமனே மகிழ்ச்சி. செயற்கை முறையில் அல்ல.

ஆனந்த-சின்மய-ரஸ-ப்ரதிபாவிட்டாஹ. பிரம்ம சம்ஹிதாவில் நீங்கள் பாருங்கள்.

ஆனந்த³-சின்மய-ரஸ-ப்ரதிபா⁴விதாபி⁴ஸ்
தாபி⁴ர் ய ஏவ நிஜ-ரூபதயா கலாபி⁴꞉
கோ³லோக ஏவ நிவஸத்ய் அகி²லாத்ம-பூ⁴தோ
கோ³விந்த³ம் ஆதி³-புருஷம்ʼ தம் அஹம்ʼ ப⁴ஜாமி
(பி.ச. 5.37)

ஆனந்த-சின்மய-ரஸ. ரஸ என்றால் ரசனை, அந்த இனிமை. நாம் இனிப்பான தின்பண்டம், கற்கண்டு, எதுவும் சுவைக்க முயற்சி செய்வது போல். ஏன்? ஏனென்றால் அதில் ஒரு இனிமையான சுவை உள்ளது. ஆகையால் அனைவரும் எல்லாவற்றிலும் சிறிது சுவையை பெற முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் பாலின்ப வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறோம். அதில் சிறிது சுவை உள்ளது. அது ஆதி என்று அழைக்கப்படுகிறது - சுவை. ஆகையால் அங்கே பல சுவைகள் உள்ளன. பிரம்ம ஸம்ஹிதாவில், ஆனந்த-சின்மய-ரஸ. அந்த சுவை, பௌதிக சுவை, நீங்கள் சுவைத்துப் பார்க்கலாம், ஆனால் அது உடனடியாக முடிந்துவிடும். உடனடியாக முடிந்துவிடும். சில நிமிடங்களில். ஒருவேளை உங்களிடம் சுவையான இனிப்புத் தின்பண்டம் இருந்தால், நீங்கள் அதை சுவையுங்கள். உங்களுக்கு தோன்றும், "ஓ, இது அருமையாக இருக்கிறது." "இன்னொன்று எடுங்கள்." "சரி." "மேலும் மற்றோன்று?" "இல்லை, எனக்கு வேண்டாம்," போதும். நீங்கள் பார்த்திர்களா? ஆகையால் பௌதிக சுவை முடிவடையக் கூடியது. அது முடிவற்றதல்ல. ஆனால் உண்மையான சுவை எல்லையற்றது. நீங்கள் ஒன்று சுவைத்தால் பிறகு உங்களால் அதை மறக்க முடியாது. அது தொடர்ந்து கொண்டிருக்கும், பெருகிக் கொண்டிருக்கும். ஆனந்தாம்புதி-வர்தனம். சைதன்ய மஹாபிரபு கூறுகிறார் அதாவது, " இந்த சுவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது." அது சமுத்திரத்தைப் போல், பெரியதாக இருப்பினும், அது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமுத்திரத்தை பார்த்திருக்கிறீர்கள்.அது ஒரு எல்லை கொண்டது. உங்கள் பசிபிக் சமுத்திரம் அலை பாய்கிறது, ஆனால் அது அதிகரிக்கவில்லை. அது அதிகரித்தால் அங்கு நாசம் ஏற்படும், உங்களுக்கு தெரியுமா? ஆனால் இயற்கையின் சட்டத்தின்படி, பகவானின் கட்டளையால், அது தன் எல்லையை தாண்டாது. எல்லைக்கு உட்பட்டு இருக்கும். ஆனால் சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், நிறைவான மகிழ்ச்சியான சமுத்திரம், சுவையான சமுத்திரம் இருக்கிறது, திவ்வியமான நிறைவான மகிழ்ச்சி, அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனந்தா³ம்பு³தி⁴-வர்த⁴னம்ʼ ப்ரதி-பத³ம்ʼ பூர்ணாம்ருʼதாஸ்வாத³னம்ʼ ஸர்வாத்ம-ஸ்னபனம்ʼ பரம்ʼ விஜயதே ஶ்ரீ-க்ருʼஷ்ண-ஸங்கீர்தனம் (CC Antya 20.12, Śikṣāṣṭaka 1) இந்த ஹரே க்ருஷ்ண உச்சாடனம் செய்வதன் மூலம் நீங்கள் பெறுவீர்கள், உங்கள் ஆனந்தத்தின் ஆற்றல் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.