TA/Prabhupada 0649 – மனம் ஓட்டுனர் – உடல் வாகனம்

Revision as of 13:42, 23 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0649 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 6.2-5 -- Los Angeles, February 14, 1969

பக்தர்: ஐந்தாவது ஸ்லோகம். "தன் மனதால் ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். தாழ்த்திக் கொள்ளுதல் கூடாது. கட்டுண்ட ஆத்மாவிற்கு மனமே நண்பனும் ஆகும் எதிரியும் ஆகும் (ப.கீ. 6.5)."

பொருளுரை: "சமஸ்கிருத சொல்லான ஆத்மா என்பது, வெவ்வேறு சூழ்நிலைக்கு ஏற்றார்போல் உடல், மனம் மற்றும் ஆன்மாவைக் குறிக்கும். யோக முறையில் மனமும் கட்டுண்ட ஆன்மாவும் மிக முக்கியமானவை. யோகப் பயிற்சிக்கு மனமே பிரதானம் ஆதலால் இங்கு ஆத்மா என்பது மனதை குறிக்கின்றது. யோக முறையின் நோக்கம் மனதை கட்டுப்படுத்துவது மற்றும் புலன் இன்ப பொருட்களின் பற்றிலிருந்து விலக்குவது. இதனால் அறிவுறுத்தப் படுவது என்னவென்றால் அறியாமையிலிருந்து கட்டுண்ட ஆத்மாவை விடுவிக்க மனம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

பிரபுபாதர்: அஷ்டாங்க யோக முறையில் இந்த எட்டு தட்டுகள் கொண்ட யோக முறையில், தியானம் தாரணம் என்பவை மனக்கட்டுப்பாட்டை குறிக்கின்றன. மனம், கட்டுப்படுத்தாத வரை... மனிதன் முதலில் தன் மனதைக் கொண்டு தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. மனமே ஓட்டுனர். உடலே ரதம் அல்லது வண்டி. நம் ஓட்டுனரை நாம் அழைப்பது போல, "என்னை கிருஷ்ணபக்தி கோவிலுக்கு அழைத்துச் செல்" என்று சொல்ல ஓட்டுனர் உங்களை அங்கு அழைத்துச் செல்வார். அதே ஓட்டுனரிடம், "போதைப் பொருள் விற்கும் கடைக்கு அழைத்துச் செல்" என்றால், ஓட்டுனர் அங்கே உங்களை ஓட்டிச் செல்வார். ஓட்டுனரின் கடமை நாம் விரும்பிய இடத்திற்கு நம்மை ஓட்டிச் செல்வது. அதுபோலவே நம் மனம் நமது ஓட்டுனர். அதனை கட்டுப்படுத்த முடிந்தால் - ஓட்டுனர் நம்முடைய உரிமையை வைத்துக் கொண்டு, அவன் நினைத்த இடத்திற்கெல்லாம் நம்மை கொண்டு போவார் என்று இருந்தால். நாம் ஒழிந்தோம். அப்போது நம் ஓட்டுநர் நம் எதிரி ஆகிறார். ஆனால் அதே ஓட்டுனர் நம் ஆணைப்படி செயல்படுவாரானால், அவர் நமக்கு நண்பராகிறார். எனவே யோக முறை என்பது இவ்வாறு மனதை கட்டுப்படுத்துவது தான் இவ்வாறு நண்பனாக இருப்பது தானே தவிர எதிரியாக அல்ல.

உண்மையில் மனம் செயல்படுவது சுதந்திரம் இல்லாததாலும், பகவானின் அங்கமாக இருப்பதனால் முழு சுதந்திரம் இருக்கிறது என்பதாலும், எனவே நமக்கு சுதந்திரம் அதிகம் இல்லை. நம் மனம் நமது சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது. "சரி நாம் இப்பொழுது கிருஷ்ணர் கோவிலுக்கு செல்வோம்" என்று மனம் கூறினால், "அட அது என்ன முட்டாள்தனம் கிருஷ்ணர், நாம் கிளப்புக்கு செல்வோம்." என்று மனம் கூறலாம். அப்போது மனம் நம்மை இயக்குகிறது. எனவே நமது கிருஷ்ண பக்தி இயக்கம் கிருஷ்ணரை மனதில் நிறுத்துவதற்காக தான். அவர் நமக்கு நண்பனாக செயல்படுவாரே அன்றி வேறில்லை. நீங்களே பாருங்கள். மற்ற எவருக்கும் இடம் கொடுக்க அவர் அனுமதிப்பதில்லை. கிருஷ்ணர் மனதில் இடம் பிடித்த உடன், சூரிய வெளிச்சம் வந்தது போல் இருக்கும், சூரியன் வானில் இருக்கும் போது இருட்டு என்ற பேச்சிற்கே இடமில்லை. சாத்தியமே இல்லை. சூரியனுக்கு முன்பு இருட்டு வர வாய்ப்பே இல்லை. அதுபோல்தான் கிருஷ்ணர் சூரியனை போன்றவர். கிருஷ்ணரை மனதில் வைய்யுங்கள். மாயா, என்னும் இருட்டு வரவே வராது. அதுவே முதல் தரமான யோக முறையாகும். அதுவே யோக முறையின் உத்தம நிலை. யாருடைய மனம் தேவையற்றவற்றை ஏற்றுக் கொள்ளாத அளவிற்கு திடமாக இருக்கின்றதோ, அவருக்கு வீழ்ச்சி என்பது ஏது? மனம் வலுவானது என்றால் ஓட்டுனர் வலுவானவர் என்பது போல. உன் விருப்பம் இன்றி அவர் உன்னை எங்கும் கூட்டிச் செல்ல முடியாது.

எனவே முழு யோக முறையின் நோக்கமே மனதை வலுப்படுத்துவதுதான். பரத்திலிருந்து விலகுவது அல்ல. இதுவே யோகத்தின் உத்தம நிலை. ஸ வை மன: க்ருஷ்ண-பதாரவிந்தயோ: (ஸ்ரீ.பா. 9.4.18). அம்பரீஷ மகாராஜாவைப் போல ஒருவர் மனதை கிருஷ்ணர் மேல் உறுதியாக நிலைநிறுத்த வேண்டும். ஒருமுறை அஷ்டாங்க யோகியான மாபெரும் முனியான துர்வாச முனிவருக்கும் அரசரும் கிரகஸ்தரும் சாமானியருமான அம்பரீஷ மகாராஜாருக்கும் சண்டை வந்தது. கிரகஸ்தர் என்றாலே பண விஷயத்தில் எண்ணி எண்ணி செலவு செய்ய வேண்டும். அவரோ மன்னர். துர்வாச முனிவர் மாபெரும் யோகி. அவருக்கு மன்னர் மேல் பொறாமை ஏற்பட்டது. "அதெப்படி? நான் பெரும் யோகி வானில் உலா வரும் திறமை உடையவன், இவனோ சாதாரண மன்னன் இவனுக்கா யோக முறையில் இத்தனை உத்திகள் தெரியும்? இவனைப் போய் மக்கள் கொண்டாடுகின்றனரே? எதனால்? நான் அவனுக்கு பாடம் கற்பிக்கிறேன்." எனவே அவர் மன்னனுடன் சண்டையை தொடங்கினார், அது பெரிய கதை, அதனை நான் வேறு ஒரு நாள் கூறுகிறேன், அவர் தோற்கடிக்கப்பட்டார். நாராயணர் அவரை மகாராஜா அம்பரீஷன் தாமரை திருவடிகளிலேயே சரணடையச் சொன்னார். அங்கீகரிக்கப்பட்ட சாஸ்திரங்களில் இருந்து நாம் இத்தகு உதாரணங்களை காண்கின்றோம், இவர் வெறுமனே கிருஷ்ணரை மனதில் கொண்டு இருந்தார். மாபெரும் யோகியை தோற்கடித்து விட்டார். துர்வாச முனிவரும் மாபெரும் யோகியும் ஒரு வருடத்திற்குள் ஜட வானிலும் அதையும் தாண்டி ஆன்மீக வானிலும் பிரயாணம் செய்தார். நேரடியாக பகவானின் திருநாம வைகுண்டத்திற்கு சென்று பரமபுருஷ பகவானையும் நேரில் கண்டார். இருந்தும் அவர் பலவீனமாகத்தான் இருந்தார் எனவே கீழே வந்து மகாராஜ் அவரின் காலடியில் விழ வேண்டி வந்தது. அம்பரீஷ மஹராஜ் ஒரு சாதாரண மன்னன்தான், கிருஷ்ணரை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தார், அவ்வளவுதான். இந்த உதாரணங்களை நாம் காண்போம்.

எனவே யோக முறையின் அதி உன்னத நிலை மனதை கட்டுப்படுத்துவதே ஆகும். கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளை நம்முள் வைத்திருந்தால் மனதை கட்டுப்படுத்துவது மிகவும் எளிதாகும். கிருஷ்ணரை மட்டுமே சிந்தித்தால் நாம் வெற்றியாளர்கள். நாம் முதல்தர யோகி ஆகிவிடலாம். யோகமுறை என்பதே யோக இந்திரிய சம்யம யோகம் என்பது புலன்களை கட்டுப்படுத்துவது. புலன்களுக்கும் மேல் மனதை. மனதைக் கட்டுப்படுத்தினால் புலன்கள் தானாகவே கட்டுப்படும். நாக்கு தேவையற்ற எதையோ உண்ண ஆசைப்பட்டால், மனம் உறுதியாக இருந்து "இல்லை, நீ அதனை உண்ண முடியாது. கிருஷ்ண பிரசாதம் தவிர வேறு எதுவும் உண்ணக்கூடாது" என்று கூறுமானால் நா கட்டுப்படுத்தப்படும். இவ்வாறாக மனம் இந்திரியங்களை கட்டுப்படுத்துகிறது. இந்த்ரியாணி பராண்யாஹுர் இந்த்ரியேப்ய: பரம் மன: (ப.கீ. 3.42). எனது உடல் என்பது புலன்களால் ஆனது எனவே என்னுடைய செயல்கள் என்பது புலனின்ப செயல்கள் தான். ஆனால் புலன்களுக்கு மேலே உள்ளது மனம். மனதிற்கு மேலே உள்ளது புத்தி. புத்திக்கும் மேலே உள்ளது ஆன்மா. ஆன்மீகத் தளத்தில் ஆன்ம தளத்தில் ஒருவர் இருக்கும்போது, அவருடைய புத்தியும் ஆன்மீக மயமாகிறது மனமும் ஆன்மீக மயமாகிறது, அவர் புலன்கள் ஆன்மீக மயமாகிறது, அவர் ஆன்மீக மயமாகிறார். இதுவே கிருஷ்ண பக்தி ஆகும். உண்மையில் ஆன்மா செயலாற்றுகிறது, ஆனால் அது தனது சக்தியை முட்டாள் மனதிற்கு கொடுத்துவிட்டு தான் தூங்குகிறது. ஆனால் அது எழுப்பப்படும் போது, முதலாளி விழித்திருக்கும் பொழுது வேலைக்காரன் எந்த முட்டாள்தனமும் செய்யமுடியாது. அதுபோலவே நாம் கிருஷ்ண உணர்வில் விழித்திருக்கும் பொழுது நம் புத்தி, மனம், புலன்கள் ஆகியவை முட்டாள்தனமாக செயல்படுவதில்லை. அதன்படிதான் அவை செயல்படும். அதுவே ஆன்மீக மயமாக்குதல். அதுவே சுத்திகரிப்பு.

ஹ்ருஷீகேண ஹ்ருஷீகேஷ-ஸேவனம் பக்திர் உச்யதே (சை.ச. மத்திய 19.170). பக்தி என்பது ஆன்மீகமாக செயல்படுதல். எப்படி செயல்படுவது? ஐம்புலன்களை கொண்டு தான் செயல்பட வேண்டும். எனவே நம் புலன்களை ஆன்மீக மயமாக்க வேண்டும். தியானம், செயலை நிறுத்துதல், அதாவது முட்டாள்தனமான செயல்களை நிறுத்துதல், அதே சமயத்தில் கிருஷ்ண உணர்வில் செயல்படுதல் இதுவே உன்னதம். புலன்களை முட்டாள்தனமான செயல்களில் இருந்து நிறுத்துவது உன்னத நிலை ஆகாது. நாம் சரியாக செயல்பட வேண்டும். அதுவே உன்னத நிலை. நம் புலன்களை சரியான முறையில் செயல்படும்படி பழக்கப்படுத்தாவிட்டால் மறுபடியும் அது முட்டாள்தனமான செயல்களில் விழுந்துவிடும். எனவே நாம் நம் புலன்களுக்கு கிருஷ்ண சேவையில் ஈடுபடும் வாய்ப்பை கொடுக்க வேண்டும். அதன் பின்னர் வீழ்ச்சிக்கு இடமில்லை. அதுவே கிருஷ்ண பக்தி.