TA/Prabhupada 0650 - உன்னத யோகமான கிருஷ்ணப் பிரக்ஞையின் மூலமாக இந்த சிக்கல்களிலிருந்து வெளியே வாருங்கள்
Lecture on BG 6.2-5 -- Los Angeles, February 14, 1969
பக்தர்: ஜட வாழ்வில் ஒருவர் மனம் மற்றும் புலன்களின் பாதிப்பிற்கு உள்ளாகிறார். உண்மையில், பரிசுத்தமான ஆன்மா ஜட உலகில் கட்டுப்பட்டுள்ளது ஜட இயற்கையை வெல்ல நினைக்கும் மன அகங்காரத்தினால் ஆன்மா ஜட உலகில் கட்டுப்பட்டுள்ளது. எனவே ஜட இயற்கையின் பூச்சுகளினால் கவரப்படாதபடி மனம் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இவ்வகையில் கட்டுண்ட ஆன்மா காக்கப்படலாம். புலனின்ப பொருட்களால் கவரப்பட்டு ஒருவர் தன்னை தாழ்த்திக் கொள்ளக் கூடாது. புலனின்ப பொருட்களால் எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவர் கவலைப்படுகிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு வாழ்வில் பந்தப் படுகிறார். பந்தங்களில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த வழி மனதை கிருஷ்ண சேவையில் ஈடுபடுத்துவதேயாகும். சமஸ்கிருத வார்த்தையான ஹி என்பது இந்த ஸ்லோகத்தில் அதனையே வலுப்படுத்துகிறது, அதாவது அதனை செய்ய வேண்டும். மேலும்: 'மனிதனுக்கு மனமே பந்தத்திற்குக் காரணம் மனமே விடுதலைக்கும் காரணம். புலனின்ப பொருட்களில் லயித்து உள்ள மனம் பந்தததிற்கு காரணம் புலனின்பப் பொருட்களிலிருந்து விடுபட்ட மனம் விடுதலைக்கு காரணம்.' எனவே எப்போதும் கிருஷ்ண உணர்வில் ஈடுபட்டிருக்கும் மனம் உன்னத முக்திக்கு காரணம்"
பிரபுபாதர்: ஆமாம். வேறு வழியில்லை. கிருஷ்ண உணர்வில் எப்போதும் ஈடுபட்டிருக்கும் மனம், மாயை என்னும் உணர்வில் ஈடுபடுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. எவ்வளவுக்கு மனம் கிருஷ்ண உணர்வில் ஈடுபடுகிறதோ அந்த அளவிற்கு நாம் நம்மை சூரியனின் வெளிச்சத்தில் வைத்திருக்கிறோம், என்று பொருள் இருளுக்கு அங்கு இடமில்லை. அதுவே வழிமுறை. அதை நீ விரும்பினால், உனக்கு விமோசனம். உன்னை நீ ஓர் அறைக்குள் இருட்டில் வைத்துக் கொள்ளலாம் அல்லது பரந்த வெளிச்சத்திற்கு வெளியே வரலாம். அது உன்னுடைய விருப்பம். நீ பரந்த பகல் வெளிச்சத்திற்கு வெளியே வருவாயானால் அங்கு இருட்டிற்கு இடமில்லை. இருளை போக்க வல்லது வெளிச்சம், ஆனால் வெளிச்சத்தை இருள் மூடி விடாது. நீ இருட்டறையில் இருக்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். ஒரு விளக்கை கொண்டு வருகிறாய். இருட்டு போய்விடுகிறது. ஆனால் இருட்டான ஒன்றை எடுத்துக்கொண்டு வெளிச்சத்திற்கு செல்வாயானால் அது மறைந்தே போய்விடும். ஆக, க்ருஷ்ண ஸூர்ய-ஸம மாயா அந்தகார. கிருஷ்ணர் சூரிய ஒளியைப் போன்றவர். மாயை இருட்டைப் போன்றது. இருளால் சூரிய ஒளியில் என்ன செய்ய முடியும்? சூரிய ஒளியில் உன்னை வைத்துக்கொள். இருள் உன்னை ஒன்றும் செய்ய முடியாது. இதுவே கிருஷ்ண பக்தியில் முழுமையான தத்துவம்.
உன்னை எப்போதும் கிருஷ்ணபக்தி செயல்களில் ஈடு படுத்திக் கொள். மாயை உன்னை நெருங்காது. ஏனென்றால் இருளின் தாக்கம் வெளிச்சத்தில் மறைந்துவிடும். இதுவே ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வ்யாசதேவர் தனது குருவான நாரதரின் வழிகாட்டுதலின் பேரில் பக்தி யோக முறைப்படி: பக்தி-யோகேன ப்ரணிஹிதே ஸம்யக், ப்ரணிஹிதே 'மலே. பக்தி-யோகேன மனஸி (ஸ்ரீ.பா. 1.7.4). அதே மனம். மனஸி என்றால் மனம். பக்தி யோகம் என்னும் வெளிச்சம் ஊட்டப்படும் போது பக்தி என்னும் வெளிச்சம், பக்தி-யோகேன மனஸி ஸம்யக் ப்ரணிஹிதே அமலே. மனம் அனைத்து விதமான கலப்படத்தில் இருந்தும் முற்றிலுமாக விடுவிக்கப்படும் போது. அது பக்தி யோகத்தினால் சாத்தியமாகிறது. பக்தி-யோகேன மனஸி ஸம்யக் ப்ரணிஹிதே 'மலே அபஷ்யத் புருஷம் பூர்ணம். அவர் முழு முதற் கடவுளை காண்கிறார். மாயாம் ச தத்-அபாஷ்ரயம். இந்த மாயையை அவர் வெறும் பின்னணியிலேயே காண்கிறார். வெளிச்சமும் இருளும் சேர்ந்து அபாஷ்ரயம். இங்கு வெளிச்சம் இருப்பது போல இங்கு இருளும் இருக்கிறது சிறிது இருள். எனவே வெளிச்சத்தின் குடைக்கீழ் இருளும் இருக்கும். ஆனால் இருளின் குடைக்கீழ் வெளிச்சம் இருக்காது. எனவே வியாச தேவர் முழுமுதற்கடவுளான பகவான் கிருஷ்ணரை கண்டார். இந்த மாயை என்னும் இருள் அபாஷ்ரயம் அவரது பாதுகாப்பில் இருக்கிறது.
இந்த மாயை என்பது யார என்று விளக்கப்படுகிறது. யயா ஸம்மோஹிதோ ஜீவ. அதே மாயை, மாயை எனும் சக்தி கட்டுண்ட ஆத்மாக்களை மூடி இருக்கின்றது. கட்டுண்டு இருப்பவர்கள் யார்? யயா ஸம்மோஹிதோ ஜீவ ஆத்மானம் த்ரி-குணாத்மகம் (ஸ்ரீ.பா. 1.7.5). இந்த ஆன்மீக ஆத்மாவானது கிருஷ்ணா அல்லது பகவானை போன்று வெளிச்சமாக இருந்தாலும். தன்னை இந்த ஜட உலகத்துடன் அடையாளமாக காண்கிறார். யயா ஸம்மோஹிதோ, அதற்குப் பெயர் மாயை. ஜட் அத்துடன் நம்மை அடையாளம் காணும் போது. யயா ஸம்மோஹிதோ ஜீவ ஆத்மானம் த்ரி-குணாத்மகம், பரோ 'பி மநுதே 'நர்தம். அவன் புலன் உணர்வுகளுக்கு அப்பால் இருந்தாலும் அவன் முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட்டுள்ளான். பரோ 'பி மநுதே 'நர்தம் தத்-க்ருதம் சாபிபத்யதே. அவன் மாயையின் அதிகாரத்திற்கு செயலாற்றுகிறான். ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் காண்டத்தில் ஏழாவது அத்தியாயத்தில் மிக அழகாக விளக்கப்பட்டுள்ளது.
அதுவே நமது நிலைமை. நாம் ஆன்மீகப் பொறிகள், மின்னல் பொறிகள். ஆனால் நாம் மாயை என்ற மாயா சக்தியினால் மூடப்பட்டு இருக்கிறோம். மேலும் மாயை நம்மை அதிகாரம் செய்கிறது அதனால் நாம் ஜட சக்திக்கு மேலும் மேலும் கட்டுண்டு போகிறோம். இந்த பந்தத்தில் இருந்து நாம் விடுபட வேண்டும் இந்த யோக முறை அல்லது கிருஷ்ண பக்தி என்னும் உயர்ந்த யோக முறையின் மூலம். இதுவே யோகமுறை.