TA/Prabhupada 0694 – சேவை மனப்பான்மையில் நிலைப்பதே மிகச்சரியான குணமடைதலாகும்

Revision as of 04:10, 25 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0694 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 6.46-47 -- Los Angeles, February 21, 1969

பக்தர் : "இவ்வாறு செய்ய தவறுபவன், வீழ்ச்சி அடைகிறான். பாகவதம் இதனை பின்வருமாறு உறுதிப்படுத்துகின்றது: எல்லா உயிர்வாழிகளின் மூலமான ஆதிபுருஷனுக்குத் தொண்டு செய்வது எனும் தனது கடமையை நிராகரிப்பவன் , எவனாக இருந்தாலும் அவன் நிச்சயமாக தனது ஸ்தானத்திலிருந்து வீழ்ச்சி அடைவான்"

பிரபுபாதா : ஆம்.

ய ஏஷாம்' புருஷம்' ஸாக்ஷாத்3
ஆத்ம-ப்ரப4வம் ஈஷ்2வரம்
ந ப4ஜந்த்யவஜானந்தி
ஸ்தா2நாத்3 ப்4ரஷ்டா: பதந்த்யத:4
(ஸ்ரீமத். பா 11.5.3)

இதுவும் மிக நல்ல உதாரணம். நாம் எல்லோரும் உன்னதமானவரின் அங்க துணுக்குகள் என்று பாகவதம் சொல்கிறது. அந்த உன்னதமானவருக்கு நாம் சேவை செய்யாவிடில், நாம் நம்முடைய நிலையிலிருந்து வீழ்ச்சி அடைந்தவர் ஆகிறோம். அது என்ன? அதே உதாரணத்தை குறிப்பிடலாம், இந்த விரல், நோய்வாய்ப்பட்டால், இந்த விரலால் முழு உடலுக்கு சேவை செய்ய முடியவில்லையென்றால், அது வெறுமனே வலியை மட்டும் கொடுக்கும். இந்த அங்கத் துணுக்கின் மற்றொரு இயல்பு,- புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அங்கத்தினால் தொடர்ந்து சேவை செய்ய முடியவில்லை என்றால் அது வலியில் இருக்கிறது என்று பொருள். ஆகவே, யார் ஒருவர் உன்னதமான பகவானுக்கு சேவை செய்யாமல் இருக்கிறாரோ, அவர் உன்னத பகவானுக்கு வலியை மட்டுமே கொடுக்கிறார். அவர் தொந்தரவு மட்டுமே கொடுக்கிறார். அதனால் அவர் துன்பப்பட வேண்டியதுதான். அதாவது சட்டத்தை மீறி செயல்படும் ஒரே நபரை போல், அவர் அரசாங்கத்திற்கு வலியைத் தருகிறார். எனவே அவர் குற்றவாளியாக கருதப்பட வேண்டியவர் தான். "நான் மிக நல்ல மனிதன்" என்று அவன் நினைத்துக் கொள்ளலாம் ஆனால் அவன் சட்டத்தை மீறுவதால், அவன் அரசாங்கத்திற்கு தொந்தரவு மட்டுமே கொடுக்கிறான். இது எளிமையானது தான்.

எனவே யார் ஒருவர் பகவானுக்கு சேவை செய்யவில்லையோ, எந்த உயிர் வாழி கடவுளுக்கு சேவை செய்யாமல் இருக்கிறதோ, அது வலியில் இருக்கிறது. அவன் வலியில் உள்ள காரணத்தால் கிருஷ்ணர் வருகிறார். அவர் வலியை உணர்கிறார்.. நாம் வலியை கொடுப்பது பாவகரமானது. அதே உதாரணம் ஸ்தா2நாத்3 ப்4ரஷ்டா: பதந்த்யத:4. ஒரு விஷயம் வலியை கொடுத்த உடனேயே...... அரசாங்கம், தொந்தரவு கொடுக்கும் எல்லாக் குடிமக்களையும் ஒன்று சேர்த்து சிறையில் வைத்திருப்பதைப் போல். "குற்றவாளிகளான நீங்கள் எல்லோரும் இங்கே வசிக்கவும். வெளியில் மற்றவர்களுக்கு தொந்தரவு தர வேண்டாம்". இதைப் போலவே, பகவானுடைய சட்டத்தை மீறிய குற்றவாளிகள் அனைவரும், பகவானுக்கு வலியை மட்டும் கொடுக்கும் அனைவரும், இந்த பௌதீக உலகத்தில் வைக்கப்படுகின்றனர்.. இவையெல்லாம். மேலும், ஸ்தா2நாத்3 ப்4ரஷ்டா: பதந்த்யத:4. தன்னுடைய நிலையிலிருந்து வீழ்ச்சி அடைகின்றான். உதாரணத்திற்கு, உங்கள் விரல் உங்களுக்கு வலியை கொடுத்தால், மருத்துவர் கூறுவார், " ஐயா, உங்கள் விரலை இப்போது வெட்டிஎடுக்க வேண்டியிருக்கும், இல்லை என்றால் மொத்த உடலும் பாதிக்கப்படலாம்." எனவே, ஸ்தா2நாத்3 ப்4ரஷ்டா: , அது தன்னுடைய நிலையிலிருந்து வீழ்ச்சி அடைகிறது.

ஆக, நாம் விழுந்து விட்டோம். கடவுள் உணர்வு கொள்கைகளுக்கு எதிராக இருந்ததினால் நாம் இப்போது வீழ்ந்தவர்கள் ஆக இருக்கிறோம். எனவே, நாம் நம்முடைய சொந்த நிலைக்கு திரும்ப விரும்பினால் நாம் மறுபடி, சேவை மனப்பான்மையில் வைக்கப்பட வேண்டும். அதுதான் பக்குவமான தீர்வாகும். இல்லை என்றால், நாம் வலியை அனுபவிக்க வேண்டியிருக்கும். மேலும் கடவுளும் நமக்காக வலியை அனுபவிப்பார். உதாரணத்திற்கு உங்கள் மகன் நல்லவனாக இல்லை என்றால் நீங்கள் துன்பப்படுவீர்கள், உங்கள் மகனும் துன்பப்படுவான். அதுபோலவே நாம் கடவுளின் குழந்தைகள் எனவே நாம் வலியை அனுபவித்தால், கடவுளும் வலியை அனுபவிக்கிறார். எனவே மிகச்சிறந்த வழி, நம்முடைய கிருஷ்ண உணர்வை புதுப்பித்துக்கொண்டு பகவானுடைய சேவையில் ஈடுபடுவது தான். அதுதான் இயற்கையான வாழ்க்கை, மேலும் அது ஆன்மிக வானில் அல்லது கோலோக விருந்தாவனத்தில் சாத்தியப்படும்..