TA/Prabhupada 0716 – நமது அறிவின் மூலமாக கிருஷ்ணரைப் புரிந்துக்கொள்ள வேண்டும்

Revision as of 10:45, 25 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0716 - in all Languages Category:TA-Quotes - 1977 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on CC Madhya-lila 8.128 -- Bhuvanesvara, January 24, 1977

முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒருவர் கிருஷ்ணர் என்றால் என்ன என்று புரிந்து கொள்வதுதான். மற்றொரு நாள் யாரோ ஒருவர் "கிருஷ்ணர் என்பதன் பொருள் என்ன?" என்று கேள்வி கேட்டார். "கிருஷ்ணர்" என்றால் எல்லோரையும் வசீகரிப்பவர் என்று பொருள். எல்லோரையும் கவராவிடில் அவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்? ஆக விருந்தாவன வாழ்க்கை என்றால் கிருஷ்ணர், கிருஷ்ணர் என்றால் என்ன, கடவுள் என்றால் என்ன, என்று காட்டுவதற்காக தானே கீழிறங்கி வருகிறார். எனவே இந்த ஓவியம், விருந்தாவன வாழ்க்கை, அதாவது கிராமத்து வாழ்க்கை. அதாவது கிராமத்து நபர்கள், விவசாயிகள், பசுக்கள், கன்றுகள்- அதுதான் விருந்தாவனம். அது நியூயார்க் , லண்டனைப் போல மிகப்பெரிய நகரம் அல்ல; அது ஒரு கிராமம், அதன் மையப் புள்ளி கிருஷ்ணர். இதுதான் விருந்தாவன வாழ்க்கை. அங்கே இருக்கும் கோபியர்கள், அவர்கள் கிராமத்து பெண்கள், மாடுமேய்க்கும் பையன்கள், அவர்கள் கூட கிராமத்து பையன்கள் தான். நந்த மகாராஜா, அந்த கிராமத்தின் தலைவர், விவசாயி. அதைப்போலவே, அங்கிருக்கும் வயதானவர்களும், வயதான கோபியர்களும், அன்னை யசோதாவும் அவருடைய நண்பர்களும்- எல்லோரும் கிருஷ்ணரால் வசீகரிக்கபட்டிருந்தனர். இதுதான் விருந்தாவன வாழ்க்கை. அவர்களுக்கு கிருஷ்ணர் என்றால் என்ன என்று கூட தெரியாது. அவர்களுக்கு, கிருஷ்ணரை புரிந்து கொள்வதற்காக வேதங்களை, புராணங்களை, வேதாந்தத்தை படிக்க வேண்டும் என்று தெரியாது. ஆனால் கிருஷ்ணரிடத்தில் அவர்களுக்கு இருந்த பற்று இயல்பானது.

எனவே இந்த ஸ்வாபாவிக ஆகர்ஷன.... தற்போதைய நொடியில் நமக்கு கிருஷ்ணரிடம் இயல்பான கவர்ச்சி இல்லை. எனவே நாம் கிருஷ்ணர் என்றால் என்ன என்று புரிந்து கொள்வதற்கு கண்டிப்பாக ஞானம் தேவை. இதுதான் க்ருஷ்ண தத்த்வ வேத்தா. ஆக, கிருஷ்ணரிடத்தில் எல்லா வசீகரிக்கும் தன்மைகளும் இல்லை என்றால், ஏன் ஒருவர் கிருஷ்ணரிடத்தில் கவரப்பட வேண்டும்? இந்த கவர்ச்சி... பொதுவாக, இந்த ஜட உலகத்தில், நாம் ஒரு செல்வந்தரிடத்தில் அல்லது பலமிக்க மனிதரிடம், ஆணோ அல்லது பெண்ணோ, அவரிடம் கவரப் படுகிறோம். நம்முடைய பிரதமரை போல. அவர் ஒரு பெண், ஆனால் அவர் சக்தி மிக்கவராக இருப்பதினால், நாம் வசீகரிக்கப்படுகிறோம்; அவரைப் பற்றிப் பேசுகிறோம். பராசர முனிவர் இந்த வசீகரிக்கும் தன்மைகளை பக என்று விளக்குகிறார். பக என்றால் ஐஸ்வர்யம். எனவே இந்த ஐஸ்வரியங்கள்.... யார் ஒருவர் மிக பணக்காரராக இருக்கிறாரோ, அவர் வசீகரமானவர். சக்தி மிகுந்த ஒருவர், அவரும் வசீகரமானவர். செல்வாக்கு மிகுந்த ஒருவர், அழகானவர், மற்றும் அதிகம் படித்தவர்....... இந்தவகையில், வசீகரம் இருக்கிறது. எனவே, நாம் கிருஷ்ணருடைய வாழ்க்கையை ஆழ்ந்து படித்தோமானால், உலக வரலாற்றில், கிருஷ்ணரை விட அதிக செல்வம் படைத்தவர் யாரும் இல்லை என்பதை நாம் காணலாம், கிருஷ்ணரை விட சக்திசாலி யாருமில்லை, கிருஷ்ணரை விட அழகான நபர் யாரும் இல்லை, அதிகம் படித்த, ஞானவான், தத்துவவாதி, கிருஷ்ணரை விட யாருமில்லை. நீங்கள் படித்தால், இவை அனைத்தையும் நீங்கள் காணலாம். இந்த ஆறு ஐஸ்வர்யங்களும் கிருஷ்ணரிடம் முழுமையாக காணப்படுகிறது; எனவே தான் அவர் பகவான். பக என்றால் ஐஸ்வர்யங்கள், வான் என்றால் அதனை உடையவர். இதுதான் கிருஷ்ணர் என்பதின் அர்த்தம், அவர் எல்லோரையும் வசீகரிப்பவர், காரணம் அவர் இந்த ஆறு ஐஸ்வர்யங்களையும் உடையவர். இதுதான் கிருஷ்ணர் என்பதான் விளக்கம். எனவே நாம் யாரை வேண்டுமானாலும் அல்லது எல்லாரையும் பகவான் என்று ஏற்றுக் கொள்ளக் கூடாது. அவரிடத்தில் ஆறு ஐஸ்வரியங்களும் இருக்கிறதா என்று நாம் பரிசோதித்துப் பார்க்கவேண்டும்.