TA/Prabhupada 0601 - தனக்குள்ளேயிருந்து உணர்வையும், அறிவையும் வழங்குபவர் சைதகுரு ஆவார்

Revision as of 12:00, 28 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0601 - in all Languages Category:BN-Quotes - 1972 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Sunday Feast Lecture -- Los Angeles, May 21, 1972

எனவே இவை கடவுளின் சக்திகள். நான் சில மாயங்களைக் காட்ட முடிந்தால், உடனடியாக நான் கடவுளாக மாறுவேன் என்பதல்ல. கடவுளின் மாயம், உண்மையான மாயத்தைப் பாருங்கள். மலிவான கடவுளை ஏற்க வேண்டாம். கடவுள் தெய்வீக மாயத்தைக் காட்ட வேண்டும். நாம் சிறிய மாயத்தைக் காண்பிப்பது போல, ஏதோ விமானம் அல்லது ஸ்பூட்னிக் அல்லது ஜெட் விமானத்தை ஆகாயத்தில் மிதக்க விடுவது போல. விஞ்ஞானிகள் அறிவிக்கும் அளவுக்கு நாம் இவ்வளவு பெருமைகொள்கிறோம், இவ்வளவு பெருமைகொள்கிறோம் "கடவுள் இல்லை. நான் கடவுள், ஏனென்றால் நான் இந்த விமானத்தை உருவாக்கியுள்ளேன்." இந்த கிரகங்களுடன் ஒப்பிடும்போது உங்கள் விமானம் எம்மாத்திரம்? எனவே அறிவார்ந்த நபர்கள் இந்த விஞ்ஞானிகள் அல்லது தத்துவஞானிகளை விட கடவுளுக்கு அதிக பெருமை கொடுப்பார்கள். அவர் ஆற்றல்களைக் காண முடியும் என்பதால், எவ்வளவு ஆற்றல் உள்ளது. - அவருக்கு பல ஆற்றல்கள் உள்ளன வேத இலக்கியங்களில் நாம் புரிந்து கொள்ள முடியும், பராஸ்ய ஷக்திர் விவிதைவ ஷ்ரூயதே (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய 13.65, பொருளுரை) வேதங்களில், உபனிஷத்: ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே கடவுளுக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் செய்வதற்கு இல்லை. ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே. ந தத்-சமஸ் சாப்யதிகஷ் ச த்ருஷ்யதே. யாரும் அவருக்கு சமமானவர்களாகவோ அல்லது அவரை விட பெரியவர்களாகவோ காணப்படவில்லை. யாரும் இல்லை. அது கடவுள். யாராவது போட்டியாளர், ஒரு கடவுள் போட்டியாளர், மற்றொரு கடவுள் போட்டியாளர் என்றால் ... இப்போதெல்லாம் கடவுளாக மாறுவது ஒரு நாகரிகமாகிவிட்டது, மேலும் ஒரு "கடவுள்" மற்றும் இன்னொரு "கடவுளுக்கும்" இடையே போட்டிகள் உள்ளன ஆனால் உண்மையில், கடவுளுடன் யாரும் போட்டியிட முடியாது. அதுதான் கடவுள். ந தஸ்ய ஸம. ஸம என்றால் சமம் அதிகஸ்ய, அதாவது பெரியது. அதாவது எல்லோரும் அடிபணிந்தவர்கள் எல்லோரும் அடிபணிந்தவர்கள். எல்லோரும் கடவுளை விடத் தாழ்ந்தவர்கள். அவர் மிகவும் சக்திவாய்ந்தவராக இருக்கலாம், ஆனால் கடவுளை விட யாரும் சமமாகவோ பெரியவர்களாகவோ இருக்க முடியாது அதுவே வேதத் தகவல். ந தஸ்ய ஸம அதிகஸ்ய த்ருஷ்யதே. நாங்கள் கண்டுபிடிக்கவில்லை ... அவர்களும், சிறந்த புனித நபர்கள், அவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள், ... யார் புருஷோத்தமன் என்று. முழுமுதற்கடவுள்... ஆகவே, பெரிய புனிதர்களின் ஆராய்ச்சிப் பணிகளால், குறிப்பாக பிரம்ம தேவரின் பணிகளால் இந்த பிரபஞ்சத்திற்குள் முதல் உயிரினம் அவர்தான் ஆகவே, கிருஷ்ணர் மிகப் பெரியவர் என்பதை அவர் தனது ஆன்மீக முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளால் கண்டறிந்துள்ளார். ஈஷ்வர பரம க்ருஷ்ன (பிரம்ம சம்ஹிதை 5.1) அவர் தனது முடிவை அளிக்கிறார்: "கிருஷ்ணர் தான் முழுமுதற் கடவுள் நாம் உட்கார்ந்திருப்பதைப் போலவே, இங்கே பல பெண்கள் மற்றும் ஆண்கள் இருக்கிறார்கள். இங்கே யார் பெரியவர் என்பதை நாம் பகுப்பாய்வு செய்யலாம். எனவே, வாதிடுவதற்கு, "நீங்கள் மிகப் பெரியவர்" என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நான் பெரியவன் அல்ல. நான் என் ஆன்மீக குருவைப் பெற்றுள்ளேன். அவர் தனது ஆன்மீக குருவைப் பெற்றுள்ளார். அவருக்கு ஆன்மீக குரு உள்ளார். இந்த வழியில், நாம் பிரம்ம தேவர் வரை செல்கிறோம். இந்த பிரபஞ்சத்திற்குள் இருக்கும் அசல் ஆன்மீக குரு ஆன பிரம்ம தேவர், வேத அறிவை அளித்தார். எனவே அவர் முன்னோர், - தாத்தா, பிதாமா என்று அழைக்கப்படுகிறார் ஆனால் அவரும் சுதந்திரமாக இல்லை வேத-சூத்திரம் அல்லது பாகவதத்தில் பிரம்ம தேவர் அவர் முதல் ஜீவன். அவர் முதலில் உருவாக்கப்பட்டபோது வேறு எந்த உயிரினமும் இல்லை. ... ஆகவே, அவருக்கும் மற்றவர்களிடமிருந்து அறிவு கிடைத்தது என்று நான் சொன்னால், வாதம் உருவாகலாம் ... "அவருக்கு அறிவு கொடுக்க வேறு நபர் யார்?" எனவே பாகவதம் சொல்கிறது, "இல்லை. அவர் கிருஷ்ணரிடமிருந்து அறிவைப் பெற்றார்." எப்படி? "இதயத்திலிருந்து." தேனே ப்ரஹ்ம ஹ்ருதா. ஹ்ருதா. ஏனென்றால், கடவுள், அனைவரின் இதயத்திலும் - உங்கள் இதயம், என் இதயம், அனைவருக்குள்ளும் அமர்ந்திருக்கிறார். அவர் உங்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்க முடியும். எனவே அவரது பெயர் சைத்ய-குரு. சைத்ய-குரு என்றால் மனசாட்சியையும் அறிவையும் உள்ளிருந்து கொடுப்பவர். பகவத் கீதையில், ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்னிவிஷ்டோ: (பகவத் கீதை 15.15) "அனைவரின் இதயத்திலும் நான் அமர்ந்திருக்கிறேன்." ஹ்ருதி, "இதயத்திற்குள்"; சன்னிவிஷ்டோ, "நான் அங்கே அமர்ந்திருக்கிறேன்." சர்வஸ்ய. நீங்களும் நானும் மட்டுமல்ல, விலங்குகள் பூச்சிகள், பறவைகள், மிருகங்கள், பிரம்மா, எல்லாரும்கூட சர்வஸ்ய. அனைத்து உயிரினங்களும் எனவே ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்னிவிஷ்டோ மத்த:: "என்னிடமிருந்து"; ஸ்ம்ருதிர் ஜ்ஞானம் அபோஹனம் ச , "நினைவு, அறிவு மற்றும் மறதி." மறதியும் கூட. நீங்கள் கடவுளை மறக்க விரும்பினால், கடவுளை என்றென்றும் மறப்பதற்கு புத்திசாலித்தனத்தை கடவுள் உங்களுக்குக் கொடுப்பார் அவர் மிகவும் கனிவானவர். நீங்கள் எதை விரும்பினாலும், "இதைச் செய்யுங்கள்" என்று அவர் உங்களுக்கு புத்திசாலித்தனத்தைத் தருவார்.