TA/Prabhupada 0302 - மக்களுக்கு சரணடைவதில் நாட்டம் இருப்பதில்லை

Revision as of 19:08, 29 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture -- Seattle, October 2, 1968

பிரபுபாதர்: நாம் பகவான் ஸ்ரீ சைதன்யரின் போதனைகளை படித்து வருகிறோம். நமது கடந்த சந்திப்பில் தொடங்கி இருந்தோம், மற்றும் நாம் அதை மீண்டும் படிப்போம். நீ படிப்பாயா ? ஆம். தமால கிருஷ்ணன்: பக்கம் இருபத்தி ஒன்பது, ஆனால் எது வரை படித்திருந்தீர்கள்? பிரபுபாதர்: எங்கிருந்து வேண்டுமானாலும் படியுங்கள். ஆம். தமால கிருஷ்ணன்: சரி. பகவத் கீதையில், உயிர்வாழியின் இயல்பான நிலை ஆன்மா என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவன் ஜடப்பொருள் அல்ல. ஆன்மாவாக அவன் பரமாத்மாவின், பரம்பொருளின், புருஷோத்தமரான முழுமுதற் கடவுளின் அம்சம் ஆவான். தஞ்சமடைவது ஆன்மாவின் கடமை. அதன் மூலம் மற்றுமே உயிர்வாழியால் ஆனந்தம் அடைய முடியும் என்றும் நாம் கற்றுக்கொள்ளலாம். பகவத் கீதையின் இறுதி அறிவுறுத்தல் என்னவென்றால் ஆன்மா, பரமாத்மாவான கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைய வேண்டும் மற்றும் அவ்வகையில் ஆனந்தத்தை உணரவேண்டும். இங்கேயும் பகவான் சைதன்யர், சனாதனரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார், அதே தத்துவத்தை தான் கூறுகிறார், ஆனால் ஆன்மாவை பற்றி எதுவும் போதிக்கவில்லை ஏனென்றால் ஏற்கனவே கீதையில் அது விவரிக்கப்பட்டுள்ளது." பிரபுபாதர்: ஆம். கருத்து என்னவென்றால், ஆன்மாவின் இயல்பான நிலைப்பாடு என்ன, என்பது மிக விரிவாக ஸ்ரீமத் பகவத் கீதையில் விளக்கப் பட்டிருக்கிறது. பகவத் கீதையின் இறுதி கற்ப்பித்தலாக, கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஸரணம் வ்ரஜ (பகவத் கீதை 18.66). அவர் அர்ஜுனனுக்கு எல்லா வகையான யோக முறைகளைப் பற்றி, எல்லா வகையான தர்மச் சடங்குகளைப் பற்றி, யாகங்களைப் பற்றி, தத்துவ ஊய்த்துணர்வை பற்றி, உடல் மற்றும் ஆன்மாவின் இயல்பான நிலையைப் பற்றியும் அறிவுறுத்தினார். அவர் பகவத் கீதையில் எல்லாவற்றையும் விவரித்திருக்கிறார். இறுதியில் அவர் அர்ஜுனனிடம் கூறுகிறார், "பிரியமான அர்ஜுனனே, நீ என் மிக நெருங்கிய நண்பன், ஆகையால் வேத ஞானத்தின் உச்சக்கட்ட இரகசியத்தை உனக்கு அளிக்கிறேன்." அது என்ன இரகசியம்? "நீ வெறும் என்னிடம் சரணடை." அவ்வளவுதான். மக்களுக்கு சரணடைவதில் நாட்டம் இருப்பதில்லை, ஆகையால் அவனுக்கு பல விஷயங்களை கற்க வேண்டிய நிலைமை உள்ளது. ஒரு குழந்தைக்கு இயல்பாகவே தந்தையாரிடம் சரணாகதியின் எண்ணம் இருக்கிறது, ஆகவே அவன் மகிழ்ச்சியோடு இருக்கிறான், அது போல் தான். வாழ்வில் எப்படி மகிழ்ச்சி அடைவது என்பதற்கு தத்துவங்களை கற்க தேவை இல்லை. குழந்தை, தன் தந்தையாரின் பராமரிப்பின் மீது பரிபூரணமாக சார்ந்து இருப்பதால் அவன் சந்தோஷமாக இருக்கிறான். எளிதான தத்துவம். நாம் வாழ்க்கை முறையில் மற்றும் கல்வியில் முன்னேறி இருப்பதனால் இந்த எளிய தத்துவத்தை பல வார்த்தைகளில் சுற்றி வளைத்து புரிந்து கொள்ள விரும்புகிறோம். இது தான். சுற்றி வளைத்து தான் புரிந்து கொள்ள ஆசை என்றாலும் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் ஒரு பற்றாக்குறையும் அல்ல. எங்களிடம் தத்துவ தரிசனம் அளிக்கும் கொள்ளளவு புத்தகங்கள் உள்ளன. ஆனால் இந்த எளிய முறையை ஏற்றுக் கொண்டால், அதாவது நாம்... கடவுள் தலைச்சிறந்தவர் மற்றும் நாம் அவரது அம்சங்கள், ஆகையால் அவரது கொண்டு செய்வது, அவரிடம் சரணடைவது என் கடமை. அவ்வளவு தான் தேவை. ஆகையால் சைதன்ய மஹாபிரபு, இயல்பான நிலை, தத்துவ சிந்தனை, ஞானம், மற்றும் பல விஷயங்கள், யோக முறை, இவை எல்லாம் விளக்காமல், ஆரம்பத்திலேயே, முழுமுதற் கடவுளின் தொண்டு செய்வதே உயிர்வாழியின் இயல்பான நிலை என்றார். அது தான்... அது தான் சைதன்ய மஹாபிரபுவின் கற்பித்தலின் ஆரம்பம். அதாவது பகவத் கீதையின் கற்பித்தல் எவ்விடத்தில் முடிகின்றதோ, அங்கிருந்து சைதன்ய மஹாபிரபு தொடங்குகிறார். பிரபுபாதர்: ஆம். மேலும் வாசியுங்கள். தமால கிருஷ்ணன்:"கிருஷ்ணர் தன் கற்பித்தலை எவ்விடத்தில் நிற்பாட்டினாரோ அங்கிருந்து அவர் தொடங்குகிறார். பகவான் சைதன்யர் கிருஷ்ணரே தான் என தலை சிறந்த பக்தர்கள் ஒப்புக்கொள்கிறார்கள், மற்றும் கீதையில் தனது கற்பித்தலை எவ்விடத்தில் நிற்பாட்டினாரோ அங்கிருந்து அவர் தனது கற்பித்தலை மேற்கொண்டு சனாதனருக்கு அளிக்க ஆரம்பித்தார். பகவான் சனாதனரிடம் கூறினார், "உண்மையான நிலையில் நீ பரிசுத்தமான ஆன்மாவாவாய். இந்த ஜட உடல் உன் உண்மையான உள்ளமை அல்ல, உன் மனமும் உன் மூலத் தன்மை அல்ல, உன் புத்தியும் அல்ல, அல்லது பொய்யான தன்முனைப்போ உள்ளமையின் மூலத் தன்மை அல்ல. நீ பரமேஸ்வரரான கிருஷ்ணரின் நித்திய தாசன் , அது தான் உன் மூலத் தன்மை. பிரபுபாதர்: இங்கு சில புள்ளிவிவரங்கள் உள்ளன. நம் தன்னுணர்வில், அடிமட்ட ஜடத் தளத்தில் இருப்பவர்கள், "நான் இந்த உடல்." என நினைக்கிறார்கள். நான் இந்த உடல். உடல் என்றால் புலன்கள். ஆகையால் என் திருப்தி என்றால் புலன்களின் திருப்தி - புலனுகர்ச்சி. இது தன்னுணர்வின் அடிமட்ட வகையாகும். நான் என்பது உடலையும் கூறுகிறது. நான் என்றால் உடல், நான் என்றால் மனம், நான் என்றால் ஆன்மாவும் தான். நான் என்கிற சமபொருட்சொல். உடல், மனம் மற்றும் ஆன்மா, மூன்றையும் நான் என்கிறோம். வாழ்வின் அடிமட்ட நிலையில், நான் என்றால் இந்த உடல் என்று நினைக்கிறோம். மேலும் சூட்சுமமான நிலையில், நான் என்றால் மனம் மற்றும் புத்தி என நினைக்கிறோம். ஆனால் வாஸ்தவத்தில், நான் என்பது இந்த உடல், மனம் மற்றும் புத்திக்கும் அப்பால் பட்டது. அது தான் வாஸ்தவமான நிலைப்பாடு. பௌதீகவாதீகள், உடலை அடிப்படையாகக் கொண்ட தன்னுணர்வு உடையவற்கள். மனம் மற்றும் புத்தியை அடிப்படையாகக் கருதுபவர்கள் தத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் கவிஞரைப் போன்றவற்கள். அவர்கள் தத்துவத்தை உருவாக்குகிறார்கள், அல்லது கவிதை வடிவில் தன் அபிப்பிராயத்தை வழங்குகிறார்கள், இருப்பினும் அவர் புரிதல் தவறானது தான். ஆன்மீக தளத்தில் வந்த பிறகு தான் அதை பக்தித் தொண்டு என்பார்கள். அதை தான் சைதன்ய மஹாபிரபு விளக்குகிறார்.