TA/Prabhupada 0382 - தசாவதார ஸ்தோத்ரம் பாடலின் பொருள்

Revision as of 19:34, 29 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Purport to Sri Dasavatara Stotra -- Los Angeles, February 18, 1970

அடுத்த அவதாரம் வாமனர், ஒரு குள்ளர். வாமன பெருமான் பலி மகாராஜா முன்னிலையில் வந்தார். அதுவும் இன்னொரு வஞ்சகம் தான். பலி மகாராஜர் பிரம்மாண்டத்தில் உள்ள அனைத்து கிரகங்களையும் வென்ற பிறகு தேவர்கள் தளர்ந்து போனார்கள். ஆக வாமன மகாராஜா... வாமனதேவர் பலி மகாராஜரிடம் சென்று, "தானம் செய்யுங்கள் ஐய்யா. நான் ஒரு பிராம்மணன். உங்களிடம் தானம் கேட்டு வந்துள்ளேன்." என கூறினார். அதற்கு பலி மகாராஜா, "ஆம். தருகிறேன்," என்றார். அவர் (வாமனர்) வெறும் மூன்று காலடி நிலம் மட்டுமே கேட்டார். ஒரே காலடியால், மேல் நோக்கி இருக்கும் பிரம்மாண்டத்தின் அனைத்து லோகங்களையும் அளந்தார். மற்றொரு காலடியை வைத்து மிச்ச பாதியை அளந்தார். மூன்றாம் ஆடியாக, பலி மகாராஜர் கூறினார், "ஆம், இதற்கு மேல் என்னிடம் நிலம் ஏதும் இல்லை. தயவுசெய்து தங்கள் காலடியை என் தலைமேல் வையுங்கள். என் தலை இன்னும் இருக்கிறது." வாமனதேவர், பலி மகாராஜரின் இந்த தியாகத்தைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார். அவர் பெருமாளுக்காக அனைத்தையும் துறந்தார். ஆகையால் பக்தியின் சிறந்த அதிகாரிகளில் அவரும் ஒருவர் ஆவார். பன்னிரண்டு அதிகாரிகளில், பலி மகாராஜரும் ஒரு அதிகாரி, ஏனென்றால் அவர் அனைத்தையும் தானம் செய்து பெருமாளையே திருப்தி அடையச் செய்தார்.


ஆடுத்தது பரசுராமர். பரசுராமர், இருபத்தி ஒன்று முறை அவர், அனைத்து க்ஷத்திரிய அரசர்களை கொல்வதற்கு படுகொலை போர் செய்தார். அக்காலத்தில் க்ஷத்திரிய மன்னர்கள் அதர்மத்தில் ஈடுபட்டு வந்தார்கள். ஆகையால் அவர், இருபத்தி ஒன்று முறை அவர்களை கொல்ல போர் இட்டார். அவர்கள் இடம் தெரியாமல் ஓடிச் செல்ல ஆரம்பித்தார்கள். மேலும் மகாபாரதத்தில் கூறப்பட்டிருக்கும் வரலாற்றிலிருந்து, அக்காலத்தில் சில க்ஷத்திரியர்கள் ஐரோப்பிய நாடுகள் பக்கம் எங்கேயோ அடைக்கலம் புகுந்ததாக நாம் புரிந்துகொள்ளலாம். மற்றும் இந்த இந்தோ-ஐரோப்பிய மக்கள், அந்த க்ஷத்திரியர்களின் சந்ததிகள் தான். அது தான் வரலாறு, மகாபாரதத்தில் இருக்கும் வரலாற்று குறிப்புகள். அடுத்த அவதாரம் ராமர். பத்து தலைகள் கொண்ட ராவணனுடன் அவர் போரிட்டார். ஆக....


அடுத்த அவதாரம் பலராமர். பலராமர் கிருஷ்ணரின் மூத்த அண்ணன். அவர் கிருஷ்ணரின் முதல் விரிவங்கமான ஸங்கர்ஷனரின் அவதாரம் ஆவார். அவர் இயல் நிறம் நல்ல வெண்ணிறம், மற்றும் அவர் நீல வண்ண ஆடைகளை அணிந்திருப்பார். ஒரு கலப்பையை கொண்ட அவர், யமுனா நதியின் மீது கோவமாக இருந்தார். அவர் யமுனா நதியை வற்றவைக்க முயன்றார். அந்த விவரம் இங்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பிறகு யமுனையும் பயந்து பலராமரின் திட்டத்திற்கு தலை வணங்கினாள்.


அடுத்த அவதாரம் புத்தர். புத்த பகவான் வேதங்களின் கொள்கைகளை நிராகரித்தார். ஆகையால் அவரை நாத்திகன் என எண்ணப்படுகிறார். வேதத்தின் கொள்கைகளை ஏற்காதவன், நாத்திகனாக குருதப்படுவான். பைபிளை நம்பாதவன் பரமதத்தான் என்றழைக்கப்படுவது போல் தான். அதுபோலவே, வேத கொள்கைகளை ஏற்காதவர்கள் நாத்திகர்கள் என்றழைக்கப்படுவார்கள். ஆக புத்த பகவான் கிருஷ்ணரின் அவதாரமாக இருந்தப் போதிலும், "நான் வேதங்களை நம்புவதில்லை" என்றார். அதற்கு காரணம் என்ன? அனுதாபத்துக்குறிய மிருகங்களை காப்பதற்காக. தான். அந்த காலத்தில் வேத யாகங்கள் என்ற சாக்கில், அனுதாபத்துக்குறிய மிருகங்களை பலி இட்டார்கள். ஆக அரக்க குணமுடையவர்கள் அதிகாரத்தின் பாதுகாப்பில் தகாததை ஏதாவது செய்ய விரும்புவார்கள். ஒரு பெரிய வழக்கறிஞர் சட்டத்தின் பாதுகாப்பில் இருந்துகொண்டே அநியாயம் செய்வது போல் தான். அதுபோலவே, இந்த அரக்கர்களும் புத்திசாலிகள். ஆன்மீகக் கற்றலை சாதகமாகப் பயன்படுத்தி எல்லா மோசமான செயல்களையும் செய்வார்கள். ஆக இதுவெல்லாம் நடந்துகொண்டிருந்தன. வேத யாகங்கள் பெயரில் அவர்கள் மிருகங்களை கண்டபடி வெட்டி சாய்த்தார்கள். ஆகையால் பகவான் இந்த அனுதாபத்துக்குறிய மிருகங்களுக்காக மிகவும் இரக்கப்பட்டு, புத்த பகவானாக தோன்றி, அகிம்சையின் தத்துவத்தை மையமாக கொண்டார். அவர் தத்துவம் நாத்திகமானது, ஏனென்றால் அவர் கூறினார், "கடவுள் இல்லை. இருப்பதெல்லாம் பஞ்சபூதங்களின் கலவை தான், மற்றும் அதனை தியாகம் செய்தபின், சூன்யம் மட்டுமே மிஞ்சும், எந்த விதமான இன்பம் அல்லது துன்பத்தின் உணர்வோ இருக்காது. அது தான் நிர்வாணம், வாழ்க்கையின் உச்சக்கட்ட இலக்கு." அது தான் அவர் தத்துவம். ஆனால் உண்மையில் மிருகங்களின் படுகொலையை நிறுத்தி, மக்களை இப்படிப்பட்ட பாவச் செயல்களை செய்வதிலிருந்து நிறுத்துவது தான் அவர் உத்தேசமாக இருந்தது. ஆகையால் புத்த பகவானின் புகழும் இங்கு பாடப்பட்டிருக்கிறது. ஆக மக்கள் ஆச்சரியப்படுவார்கள், புத்த பகவான் நாத்திகராக கருதப்பட்டிருந்தாலும், வைஷ்ணவர்கள் விஷ்ணு (புத்த) பகவானை வணங்குகிறார்களே. எதற்காக? ஏனென்றால், கடவுள் தனது வெவ்வேறு காரணங்களால் அவ்வாறு செயல்படுவதை ஒரு வைஷ்ணவன் அறிவான். மற்றவர்கள் அதை அறிவதில்லை.


அடுத்ததாக கல்கி அவதாரம். அது வருங்காலத்தில் தான் நிகழும். கலியுகத்தின் முடிவில் கல்கி அவதாரம் தோன்றும். இந்த கலியுகம் எனும் காலம், இன்னும் சுமார் 400,000 ஆண்டுகள் வரை இருக்கும். கலியுகத்தின் இறுதிக்கட்ட காலத்தில், அதாவது சுமார் 400,000 ஆண்டுகளுக்கு பிறகு, கலியின் அவதாரம் தோன்றும். ஸ்ரீமத் பாகவதத்தில் புத்த பகவான் வருவது கூறியிருப்பது போல், இதுவும் வருவதுரைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஸ்ரீமத் பாகவதம் என்பது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப்பட்டது, ஆனால் புத்த பகவானோ 2,500 ஆண்டுகளுக்கு முன்பு தான் தோன்றினார். ஆக புத்த பகவான் கலியுகத்தின் தொடக்கத்தில் வருவதைப் பற்றி முன்பே கூறப்பட்டிருந்தது. அவ்வாறு முன்னறிவிக்கப்பட்டிருந்தது, அதன்பிறகு அது நிஜமாகவே நிகழ்ந்தது. அதுபோலவே கல்கி அவதாரத்தைப் பற்றி முன்னறிவிப்பு உள்ளது மற்றும் அதுவும் வருங்காலத்தில் நிஜமாகும். அந்த நேரத்தில், கல்கி பகவானுக்கு ஒரே வேலை தான் - படுகொலை. கற்பித்தல் எல்லாம் கிடையாது. பழைய மாதிரி... பகவத்-கீதையில் கிருஷ்ண பகவான் தன் கற்பித்தலை வழங்குகிறார். ஆனால் கலியுகத்தின் முடிவில் மக்கள், எந்த கற்பித்தலையும் வழங்க வாய்ப்பில்லாத படி சீர்கெட்டு போவார்கள். அவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. அப்பொழுது அவர்களை கொல்வது மட்டுமே ஒரே ஆயுதமாக இருக்கும். கடவுள் கையால் மரணம் அடைந்தவனும் முக்தி பெறுகிறான். அதுதான் கடவுளின் எல்லாம் அடங்கிய கருணை. அவர் கொன்றாலும் சரி பாதுகாத்தாலும் சரி, பலன் அதே தான். ஆக அதுதான் கலியுகத்தின் கடைசி கட்டமாக இருக்கும். அதன் பிறகு மறுபடியும், தர்மத்தின் யுகமான சத்திய யுகம் தொடங்கும். இவை தான் வேத இலக்கியத்தில் இருக்கும் அறிக்கைகள்.