TA/Prabhupada 0384 - கௌராங்க போலிதே ஹபே பாடலின் பொருள்

Revision as of 19:34, 29 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Purport to Gauranga Bolite Habe -- Los Angeles, January 5, 1969

இது நரோத்தம தாச தாக்குரால் பாடப்பட்ட ஒரு பாடல். அவர் கூறுகிறார், "என்றைக்கு வரும் அந்த நாள், நான் பகவான் சைதன்யரின் திருநாமத்தை பாடியவுடன், நான் மெய்சிலிர்த்துப் போவேன் ?" கௌராங்க போலிதே ஹபே புலக-ஷரீர. புலக-ஷரீர என்றால் உடம்பெல்லாம் புல்லரித்து போவது. ஒருவன் உண்மையிலேயே தைவீக நிலையில் இருக்கும்போது, சிலசமயங்களில் எட்டு வகையான அறிகுறிகள் தோன்றலாம்: அழுவது, பித்தனைப் போல் பேசுவது, உடம்பெல்லாம் புல்லரித்து போவது, மற்றவர்களைப் பற்றி மறந்து கவலையில்லாமல் ஆடுவது... இந்த அறிகுறிகள் எல்லாம் தானாகவே உருவாகும். அவைகள் செயற்கையாக பயிற்சி ஏற்க்க கூடியவை அல்ல. ஆக நரோத்தம தாச தாக்குர் அந்த நாளுக்காக காத்திருக்கிறார்.

இதை ஒருவர் செயற்கையாக நகல் செய்வது சரி அல்ல. அதை அவர் பரிந்துரைப்பதில்லை. அவர் கூறுவது என்னவென்றால், "என்றைக்கு அந்த நாள் வரும், அன்று நான் பகவான் சைதன்யரின் திருநாமத்தை உச்சரிப்பதாலே, என் உடம்பெல்லாம் புல்லரித்து போகும் ?" கௌராங்க போலிதே ஹபே புலக-ஷரீர. பிறகு ஹரி ஹரி போலிதே: "மற்றும் நான் 'ஹரி ஹரி' அதாவது 'ஹரே கிருஷ்ண' என்று உச்சரித்தவுடன், என் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வடியும்." ஹரி ஹரி போலிதே நயன பாபே நீர. நீர என்றால் தண்ணீர்.


அதுபோலவே, சைதன்ய மகாபிரபுவும் கூறியிருக்கிறார், "என்றைக்கு அந்த நாள் வரும்?" நாம் அத்தகைய ஆசையை மட்டுமே வளர்ததுக் கொள்ளவேண்டும். ஆனால், கிருஷ்ணரின் அனுக்கிரகம் இருந்து, நாம் அந்த நிலையை அடையமுடிந்தால், இந்த அறிகுறிகள் எல்லாம் தானாகவே ஏற்படும். ஆனால் நரோத்தம தாச தாக்குர் கூறுகிறார், பௌதீக பற்றிலிருந்து விடுபடாமல் அந்த நிலையை அடைவது சாத்தியம் அல்ல. எனவே அவர் கூறுகிறார், ஆர கபே நிதாய்-சாந்தேர், கொருணா ஹொய்பே: "என்றைக்கு பகவான் நித்தியாநந்தர் என்மீது கருணை காட்டும் நாள் வருமோ, அதனால்..." விஷய சாடியா.


ஆர கபே நிதாய்-சாந்தேர் கொருணா ஹொய்பே, ஸம்ஸார பாஸனா மொர கபே துச்ச ஹபே


ஸம்ஸார-பாஸனா என்றால் பௌதீக இன்பம் பெற ஆசை.


ஸம்ஸார-பாஸனா மொர கபே துச்ச ஹபே


"பௌதீக சுகம் பெறுவதற்கான எனது ஆசை முக்கியமற்றதாகிவிடும்." துச்ச. துச்ச என்றால் நாம் எந்த மதிப்பும் சேர்க்காத ஒரு விஷயம்: "தூர எறி." அதுபோலவே, ஆன்மீகத்தில் முன்னேற்றம் என்பது ஒருவர் பின்வருமாறு உறுதியாக இருந்தால் தான் சாத்தியம், "இந்த ஜட உலகமும் பௌதீக சுகங்களும் பொருட்படுத்தத்தக்கவை அல்ல. இவைகளால் எனக்கு எந்த மெய்யான மகிழ்ச்சியையும் தரமுடியாது." இந்த திட நம்பிக்கை மிகவும் அவசியம். ஸம்ஸார-பாஸனா மொர கபே துச்ச ஹபே. அவர் மேலும் கூறுகிறார், "எப்போது நான் பௌதீக சுகத்தை பெறுவதற்கான ஆசைகளிலிருந்து விடுபட்டு, பிருந்தாவனத்தின் உண்மையான இயல்பை காண தகுதி பெறுவேனோ?" விஷய சாடியா கபே ஷுத்த ஹபே மன: "எப்பொழுது என் மனம் முற்றிலும் தூய்மை அடைந்து, பௌதீக அசுத்தங்களிலிருந்து விடுபட்டு, பிருந்தாவனம் என்றால் என்னவென்று காண தகுதி பெறுவேனோ?" வேறு வார்த்தைகளில், ஒருவரால் பிருந்தாவனத்திற்கு வலுக்கட்டாயமாக சென்று அங்கு வாழமுடியாது, தைவீக சுகத்தையும் அடையமுடியாது. அப்படி கிடையாது. ஒருவன் தன் மனதை எல்லா பௌதீக ஆசைகளிலிருந்து விடுவிக்க வேண்டும். பிறகு தான் ஒருவனால் பிருந்தாவனத்தில் வாழ்ந்து அந்த குடியிருப்பின் பலனை அனுபவிக்க முடியும். எனவே நரோத்தம தாச தாக்குர் கூறுகிறார்,


விஷய சாடியா கபே ஷுத்த ஹபே மன


என் மனம் எப்பொழுது பௌதீக சுகம் என்ற அசுத்தத்திலிருந்து விடுபட்டு நான் தூய்மை அடைவேனோ, அப்பொழுது தான் என்னால் பிருந்தாவனத்தை உண்மையுருவில் காணமுடியும்." இல்லாவிட்டால் அது சாத்தியம் அல்ல. மேலும் அவர் மறுபடியும் கூறுகிறார், பிருந்தாவனத்திற்கு செல்வது என்றால் ராதா மற்றும் கிருஷ்ணரின் திருவிளையாடலை புரிந்துகொள்வதே. அது எப்படி சாத்தியம்? அதற்கு அவர் கூறுகிறார், ரூப-ரகுநாத-பதே ஹொய்பே ஆகுடி. ரூப கோஸ்வாமியிலிருந்து ரகுநாத தாச கோஸ்வாமி வரை, மொத்தம் ஆறு கோஸ்வாமிகள் இருந்தனர்: ரூப, ஸநாதன, கோபால பட்ட, ரகுநாத பட்ட, ஜீவ கோஸ்வாமி, ரகுநாத தாச கோஸ்வாமி.


ஆக அவர் கூறுகிறார், ரூப-ரகுநாத-பதே: "ரூப கோஸ்வாமியிலிருந்து ரகுநாத தாச கோஸ்வாமி வரை," பதே, "அவர்கள் தாமரை பாதங்களில். அவர்கள் தாமரை பாதங்களுக்காக எப்பொழுது என்னுள் நேசம் கொள்ள ஆர்வம் உண்டாகும்..." ரூப-ரகுநாத-பதே, ஹொய்பே ஆகுடி. ஆகுடி, ஆர்வம். எதற்கான ஆர்வம்? அதாவது கோஸ்வாமிகளின் வழிகாட்டுதலில் ராதா-கிருஷ்ணரை புரிந்துகொள்வதற்கான ஆர்வம். ராதா-கிருஷ்ணரை தன் சுய முயற்சியால் புரிந்துகொள்ள முயலக் கூடாது. அது உதவாது இந்த கோஸ்வாமிகள், நமக்கு பக்தி-ரஸாம்ருத-ஸிந்து போன்ற வடிவத்தில் வழிகாட்டியிருக்கிறார்கள். ஆக படிப்படியாக அவையை பின்பற்றி ஒருவன் முன்னேறவேண்டும். பிறகு அந்த அதிருஷ்டமான நாள் வரும், அன்று நம்மால் புரிந்துகொள்ள முடியும், ராதா மற்றும் கிருஷ்ணருக்கு இடையே இருக்கும் அன்பார்ந்த லீலைகள் அதாவது திருவிளையாடலுக்கு அர்த்தம் என்ன. அதை விட்டுவிட்டு, நாம் ஒரு சாதாரண இளம் ஆணும் பெண்ணும் அன்பு பரிமாற்றம் செய்வதுபோல் எண்ணினால், பிறகு நாம் தவறாக புரிந்து கொள்வோம். அப்பொழுது, ப்ராக்றுத-ஸஹஜியா அதாவது பிருந்தாவனத்திற்கு பலியானவர்களாக உருவாகுவார்கள். ஆகையால் நரோத்தம தாச தாக்குர் நமக்கு, ராதா கிருஷ்ணரின் சகவாசம் பெறும் உன்னத நிலௌயை அடைவது எப்படி என்று வழிகாட்டுகிறார்.


முதலில் ஒருவர் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவிடம் தன் மனதை முழுமையாக ஒப்படைத்திருக்கவேண்டும். அது நம்மை வழிவகுத்தது அழைத்துச் செல்லும். அவர் கிருஷ்ண உணர்வின் புரிதலை வழங்க அவதரித்தார். ஆகையால் முதலில் ஒருவர், ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவிடம் சரணடைய வேண்டும். ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவிடம் சரணடைந்தால், நித்தியானந்த பிரபு மகிழ்வார், மேலும் அவர் மகிழ்வதால், நாம் எல்லா பௌதீக ஆசைகளிலிருந்து விடுபடுவோம். பிறகு எப்பொழுது பௌதீக ஆசைகள் இல்லாமல் போகின்றதோ, அப்பொழுதுதான் நம்மால் பிருந்தாவனத்தில் இடம்பெற முடியும். பிருந்தாவனத்தில் நுழைந்த பிறகு, ஆறு கோஸ்வாமிகளுக்கு தொண்டு செய்ய நாம் ஆவலாக இருந்தால், ராதா கிருஷ்ணரின் லீலைகளை புரிந்துகொள்ளும் நிலையை நம்மால் அடையமுடியும்.