TA/Prabhupada 0397 - ராதா-கிருஷ்ண போல் பொருள்விளக்கம்
"ராதா-கிருஷ்ண" போலோ போலோ போலோ ரே ஸொபாய். இது பக்திவினோத தாகுரால் பாடப்பட்ட ஒரு பாடல். கூறப்பட்டிவது என்னவென்றால், சைதன்ய மஹாபிரபு மற்றும் நித்யானந்த பிரபவும், நாதியா நகரத்தின் வீதிகளில் சென்று, அனைவரையும் போதித்து, இவ்வாறு கோஷம் போட்டு அறிவுருத்தினார்கள். அவர்கள் கூறுகிறார்கள், "நீங்கள் மக்கள் எல்லோரும் தயவுசெய்து ராதா-கிருஷ்ண அதாவது ஹரே கிருஷ்ண என்று ஜெபியுங்கள்." "ராதா-கிருஷ்ண" போலோ போலோ போலோ ரே ஸொபாய். "நீங்கள் அனைவரும் வெறும் ராதா-கிருஷ்ண அதாவது ஹரே கிருஷ்ண என ஜெபியுங்கள்." இது தான் கற்பித்தல். எய் ஷிக்கா தியா. பகவான் சைதன்யர் மற்றும் நித்யானந்தர், இருவரும் சேர்ந்து வீதிகளில் ஆடி, இவ்வாறு போதித்தார்கள், "நீங்கள் எல்லாம் தயவுசெய்து ராதா-கிருஷ்ண எற்று சொல்லுங்கள்." எய் ஷீக்கா தியா, ஸப நதியா, பிரசே நேசே கௌர-நிதாய். பிர்சே பிர்சே என்றால் நடந்துகொண்டே. நதியா நகரம் முழுவதிலும் அவர்கள் இதை போதித்தார்கள். எய் ஷிக்கா தியா, ஸப நதியா, பிர்சே நேசே கௌர-நிதாய். பிறகு அவர் கூறுகிறார், கேனோ மாயார போஸே, ஜாச்சோ பேஸே, "எதற்காக நீ, பௌதிக வாழ்வின் அறியாமை எனும் மாய அலைகளால் அடித்துச்செல்லப்படுகிறாய் ?" காச்சோஹாபுடுபு, பாய்." இரவும் பகலும் நீ கவலைகளில் வெறும் மூழ்கி கிடக்கிறாய். தண்ணீரில் ஒருவனை தள்ளிவிட்டால், சிலசமயம் மேலே வருவான் மற்றும் சிலசமயங்களில் மூழ்கிவிடுவான்; கஷ்டப்பட்டு போராடுவான். அதுபோல்தான். எதற்காக நீ இந்த மாயை எனும் கடலில் இவ்வளவு போராடுகிறாய் ? சிலசமயங்களில் மூழ்கி, சிலசமயங்களில் மிதந்து, சிலசமயங்களில் மகிழ்ந்து, சிலசமயங்களில் துன்பப்படுகிறாய். உண்மையில் எந்த மகிழ்ச்சியும் இல்லை. தண்ணீரில் தள்ளப்பட்டு, சிலசமயங்களில் மூழ்கி சிலசமயங்களில் மிதந்து கிடந்தால் அதற்கு மகிழ்ச்சி என்று பெயரல்ல. தற்காலிகமாக விடுபட்டு, சில வினாடிகளுக்காக, மற்றும் மறுபடியும் மூழ்குவது மகிழ்ச்சி அல்ல." ஆக சைதன்ய மஹாபிரபு அறிவுறுத்துகிறார், "எதற்காக நீ தன்னை தானே இவ்வளவு வருத்திக் கொள்கிறாய்," மாயார பொஷே, "மாயையின் வசத்தில்?" அதற்கு என்ன செய்வது? அவர் கூறுகிறார், ஜீவ க்ருஷ்ண-தாஸ், எ விஷ்வாஸ், "நீ வெறும் இறைவனின் ஒரு சேவகன், கிருஷ்ணரின் தாசன் எற்பதை உறுதியாக நம்பு." ஜீவ க்ருஷ்ண-தாஸ், எ விஷ்வாஸ், கொர்லே தோ ஆர துக்க நாய்: "நீ பகவானின் சேவகன் அதாவது கிருஷ்ணரின் தாசன் என்கிற புரிதலுக்கு வந்தவுடன், உன் துன்பங்கள் எல்லாம் இல்லாமல் போய்விடும்." இந்த கற்பித்தல், பகவான் சைதன்யரால், வீதிகளில் நடந்துக் கொண்டிருக்கும்போது அளிக்கப்பட்டுள்ளது. ஜீவ க்ருஷ்ண-தாஸ், எ விஷ்வாஸ், கொர்லே தோ ஆர துக்க நாய். பிறகு பக்திவினோத் தாகுர் தன் சொந்த அனுபவத்தை வழங்குகிறார். அவர் கூறுகிறார், ஜாய் ஸகல விபொத, "நான் எல்லா வகையான ஆபத்துகளிலிருந்தும் விடுபடுகிறேன்." காய் பக்திவினோத. பக்திவினோத தாகுர் ஒரு ஆச்சாரியார், அனுபவமுள்ளவர், அவர் கூறுகிறார், "நான் ராதா-க்ருஷ்ண அதாவது ஹரே க்ருஷ்ண என ஜெபிக்கும்போது, எல்லா வகையான ஆபத்துகளிலிருந்தும் நான் விடுபடுகிறேன்." ஜாய் ஸகல விபொத. ஜாகோன் ஆமி ஒ-நாம் காய், "நான் இந்த திருநாமத்தை, ஹரே கிருஷ்ண அல்லது ராதா-கிருஷ்ண என்று எப்பொழுது ஜெபித்லாலும், உடனேயே எனக்கு வரும் ஆபத்துகள் எல்லாம் தீர்ந்து விடுகின்றன." "ராதா-கிருஷ்ண" போலோ, ஸங்கே சலோ. ஆகையால் பகவான் சைதன்யர் கூறுகிறார், "நான் வீதியின் மேல் நடந்து உங்களிடம் கெஞ்சிக் கேட்டுகிரேன். அது என்ன கெஞ்சுதல்? நீ வெறும் ஜெபித்தால் போதும். அது தான் என் விண்ணப்பம், கெஞ்சுதல்." "ராதா-க்ருஷ்ண" போலோ, ஸங்கே சலோ. "பிறகு என் பின்னோடு வாருங்கள்." "ராதா-க்ருஷ்ண" போலோ, ஸங்கே சலோ, எய்-மாத்ர பிக்ஷா சாய், "நான் உங்களிடம் வெறும் இந்த ஒரு உதவயை தான் கேட்கிறேன், அதாவது நீங்கள் ஹரே கிருஷ்ண உச்சரித்து, என் பின்னோடு வாருங்கள். அதனால் இந்த பௌதிக பெருங்கடலில் உயிர்வாழ்வதற்கான உங்கள் போராட்டம் நின்றுவிடும்."