TA/Prabhupada 0728 – ஒருவன் ராதா கிருஷ்ணரின் லீலைகளை பௌதிகமானதாய் கருதினால், அவர்கள் தவறாக வழிநடத்தப்படு
Lecture on CC Adi-lila 7.5 -- Mayapur, March 7, 1974
அக்னி கிருஷ்ணரிடமிருந்து வருகிறது. மஹி எனப்படும் பூமியும் கிருஷ்ணரிடம் இருந்து வருகிறது. அக்னி, மஹி, ககன எனப்படும் வானமும் கிருஷ்ணரிடம் இருந்து வருகிறது. அம்பு, தண்ணீர் கிருஷ்ணரிடம் இருந்து வருகிறது. அக்னி மஹி ககனம் அம்பு...... மருட், காற்று கிருஷ்ணரிடம் இருந்து வருகிறது. கிருஷ்ணரிடம் இருந்து வருவதால், இது கிருஷ்ணரிடம் இருந்து வேறானது அல்ல. எல்லாமே கிருஷ்ணர் தான். ஆனால் நீங்கள் காற்று, தென்றலை உணரும்போது, தண்ணீர், பூமி, நெருப்பு முதலியவற்றை சுவைக்கும் போது, "காற்று கிருஷ்ணரிடம் இருந்து வருகிறது, தண்ணீர் கிருஷ்ணரிடம் இருந்து வருகிறது, எனவே நான் காற்றில் இருக்கலாம், அல்லது சமுத்திரத்தில் இருக்கலாம், எல்லாம் ஒன்றுதான்" என்று நீங்கள் கூற முடியாது. நாம் காற்றில் வாழ்கிறோம், ஆனால் காற்றும் தண்ணீரும் ஒன்றுதான் என்பதால், நான் கடலில் குதித்தால், அது மிக நல்ல யோசனை அல்ல. ஆனால் உண்மையில், காற்றும் கிருஷ்ணர் தான், தண்ணீரும் கிருஷ்ணர் தான், பூமியும் கிருஷ்ணர் தான், நெருப்பும் கிருஷ்ணர் தான், ஏனென்றால் இவையெல்லாம் கிருஷ்ணருடைய சக்திகள்.
எனவே இந்த வகையில், நாம் பஞ்ச தத்துவங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்தால், அதாவது ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபு நித்யானந்த, ஸ்ரீ அத்வைத கதாதர ஸ்ரீ வாசாதி கௌர பக்த விருந்த.... இதுதான் பஞ்ச தத்துவம்: ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய, ஸ்ரீ நித்யானந்தா, ஸ்ரீ அத்வைத, ஸ்ரீ கதாதர, மற்றும் ஸ்ரீ வாசாதி. ஸ்ரீ வாசாதி என்றால் ஜீவ தத்துவம். ஜீவ தத்துவம், சக்தி தத்துவம், விஷ்ணு தத்துவம், இவையெல்லாம் தத்துவங்கள். ஆக, பஞ்ச தத்துவம். ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய என்பது உன்னத தத்துவமான கிருஷ்ணர். ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய, ராதா-கிருஷ்ண நஹே அண்ய. நாம் ராதா கிருஷ்ணரை வழிபடுகிறோம். எனவே ஸ்ரீ கிருஷ்ணா சைதன்ய என்பது ராதா- கிருஷ்ணரின் இணைந்த வடிவம். ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய, ராதா-கிருஷ்ண நஹே அண்ய.
- ராதா-க்ரு'ஷ்ண-ப்ரணய-விக்ரு'திர் ஹ்லாதினீ-ஷக்திர் அஸ்மாத்
- ஏகாத்மானாவ் அபி புவி புரா தேஹ-பேதம்' கதௌ தௌ
- சைதன்யாக்யம்' ப்ரகடம் அதுனா தத்-த்வயம்' சைக்யம் ஆப்தம்...
ராதா-கிருஷ்ணா..... கிருஷ்ணர் என்பது பரமன். கிருஷ்ணர் இன்பத்தை அனுபவிக்க நினைக்கும் போது.... அனுபவிப்பாளர். போக்தாரம்' யஜ்ஞ-தபஸாம்' ஸர்வ-லோக-மஹேஷ்வரம் (ப.கீ 5.29). அவரே உன்னத அனுபவிப்பாளர். எனவே அவர் அனுபவிக்க நினைக்கும் போது, அது பௌதிகமான அனுபவம் அல்ல அது ஆன்மீக அனுபவம்- உன்னத சக்தி, ஜட சக்தி அல்ல. எனவே கிருஷ்ணர் உன்னதமானவர் என்பதால் அவர் உன்னத சக்தியை அனுபவிக்கிறார். எனவே கிருஷ்ணருடைய..... ராதா-கிருஷ்ண லீலை பௌதிகமானது அல்ல. ராதா-கிருஷ்ண லீலையை பௌதிகமானதாக புரிந்து கொள்பவர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். கிருஷ்ணர், பௌதிகமானதை அனுபவிக்க மாட்டார். " நீங்கள் தினமும் பிரசாதத்தை, சாதம், காய்கறிகள் முதலியவற்றை படைப்பதை நாங்கள் பார்க்கிறோம். இவை எல்லாம் பௌதிகமானவை" என்று நீங்கள் கூறினால், இல்லை. இது பௌதிகம் அல்ல , இதுதான் உண்மையான புரிதல். இது எப்படி பௌதிகமாக ஆகாது? இதுதான் அசிந்திய. சிந்தனைக்கு அப்பாற்பட்டது. கிருஷ்ணரால், ஜடத்தை ஆன்மீகமாகவும், ஆன்மீகத்தை ஜடமாகவும் மாற்ற முடியும். இதுதான் கிருஷ்ணருடைய சிந்தனைக்கு அப்பாற்பட்ட சக்தி, அசிந்திய சக்தி. கிருஷ்ணருடைய அசிந்திய சக்தியை ஏற்றுக் கொள்ளாதவரை, உங்களால் கிருஷ்ணரை புரிந்து கொள்ள முடியாது. அசிந்திய சக்தி.