TA/Prabhupada 0836 - மனித வாழ்வின் பூரணத்துவத்திற்காக எதையும் தியாகம் செய்ய உங்களை தயார்படுத்திக்கொள்ளு

Revision as of 06:24, 4 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0836 - in all Languages Category:TA-Quotes - 1966 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on CC Madhya-lila 20.100-108 -- New York, November 22, 1966

ஒரு சாது, ஒரு முனிவர் அல்லது ஒரு பக்தர், அவருக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும், அவர் எதையும் அறியாதவராக தன்னை எப்போதும் நிறுத்தி கொள்கிறார். "எனக்கு எல்லாம் தெரியும்" என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் உண்மையில், எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியாது. அது சாத்தியமில்லை. ஆனால் ஒன்று ... சர் ஐசக் நியூட்டனைப் போலவே, அவர் அதை ஒப்புக்கொள்கிறார் "நான் மிகவும் கற்றுக்கொண்டேன் என்று மக்கள் கூறுகிறார்கள், ஆனால் நான் எவ்வளவு கற்றுக்கொண்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் கடற்கரையில் சில கூழாங்கற்களை சேகரித்து வருகிறேன்." எனவே அதுதான் நிலை. உண்மையில் கற்ற ஒரு மனிதன் என்றால், "நான் கற்றுக்கொண்டேன்" என்று அவர் ஒருபோதும் சொல்ல மாட்டார். "நான் மிக பெரிய முட்டாள். எனக்குத் தெரியாது."

என்று தான் அவர் சொல்வார். எனவே சைதன்ய மஹாபிரபு அவரது பணிவினைப் பாராட்டினார், ஏனென்றால் உண்மையில் அவர் சமூகத்தில் மிகவும் கற்றறிந்த மற்றும் மிகவும் உயர்ந்த மனிதர். எனவே பரஸ்பர ஆச்சாரத்திற்காக, அவரும் ஏற்றுக்கொண்டார், "இல்லை, நீங்கள் விழவில்லை. நீங்கள் சோர்வடைய வேண்டாம். வெறுமனே எந்தவொரு கற்றறிந்த மனிதனும் தாழ்த்தி தன்னை எண்ணி கொள்வது கடமையாகும். ஆனால் நீங்கள் முட்டாள் அல்ல." க்ருஷ்ண ஷக்தி தர துமி: (சை.ச. மத்திய 20.105) "ஏனென்றால் நீங்கள் ஏற்கனவே பக்தர்." ஓய்வு பெறுவதற்கு முன்பு, மற்றும் சைதன்ய மஹாபிரபுவிடம் வருவதற்கு முன்பு, இந்த கோஸ்வாமிகள், நான் சொன்னது போல், அவர்கள் மிகவும் கற்ற சமஸ்கிருத அறிஞர். அவர்கள் பாகவதத்தைப் படிப்பார்கள். ​​"நான் நலமாக இல்லை, என்னால் அலுவலகத்தில் கலந்து கொள்ள முடியாது," என்று நவாப் ஷாவிடம் அவர் தவறான தகவல் அளித்தபோது, பின்னர் நவாப் ஷா ஒரு நாள் நேரடியாக அவரது வீட்டிற்குச் சென்றார், "இந்த மனிதர் அலுவலகத்திற்கு வரவில்லை, நோய்வாய்ப்பட்டதாக மட்டும் சொல்கிறார். என்ன அது?" அங்கே சென்றதும், கற்றறிந்த பண்டிதர்களுடன் ஸ்ரீமத் பாகவதத்தை வாசிப்பதில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார் நவாப் ஷா, பின்னர் அவர் புரிந்து கொண்டார், "ஓ, இது தான் உங்கள் நோய். நீங்கள் இப்போது ஸ்ரீமத்-பாகவதத்தில் ஈடுபடுகிறீர்கள்." எனவே உண்மையில் அவர் மிகவும் கற்றவர், ஆனால் அவரது பணிவான நடத்தையிலிருந்து, அவர் இந்த நல்வழியில் இறைவன் சைதன்யாவுக்கு அடிபணிந்து கொண்டிருக்கிறார்.

எனவே சைதன்யா மஹாபிரபு கூறுகிறார்,

ஸத்-தர்மஸ்யாவபோதாய
யேஷாம் நிர்பந்தினீ மதி:
அசிராத் ஏவ ஸர்வார்த:
ஸித்யத்யேஷாம் அபீப்ஸித:
(சை.ச மத்திய 24.170)

அவர் கூறுகிறார், "உங்கள் விருப்பம் முழுமையைப் பெற வேண்டும்; எனவே நீங்கள் மிகவும் பணிவோடு இருக்கிறீர்கள்." எனவே அவர் நாரதீய புராணவின் ஒரு வசனத்தை மேற்கோள் காட்டுகிறார், மிகவும் தீவிரமான எவரும் ... தன்னை முழுமையாக அறிந்து கொள்வதில் தீவிரமான ஒருவர், அந்த வழியில் முயன்றால், அவரது பரிபூரணத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. ஒரே விஷயம் என்னவென்றால், ஒருவர் மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும். இந்த வசனத்தின் நோக்கம், - ஸத்-தர்மஸ்யாவபோதாய யேஷாம் நிர்பந்தினீ மதி:. "இந்த வாழ்க்கையில் நான் என் வாழ்க்கையை முழுமையாக்குவேன்" என்று அவர் ஏற்கனவே தீர்மானித்திருக்கிறார் என்று நிர்பந்தின மதி: கூறுகிறார். பின்னர், அவரைப் பொறுத்தவரை, முழுமை உறுதி செய்யப்படுகிறது. உத்தரவாதம் உண்டு. "நான் முயற்சி செய்கிறேன். இந்த கிருஷ் பக்தி துறையை சோதித்து பார்க்கிறேன், என்று அவர் நினைத்தால், அதே நேரத்தில் மற்ற துறைகளையும் சோதித்து பார்க்கவும் நினைத்தால்.... இந்த வழியில் செல்வோம் என்று ..." இல்லை. இந்த வாழ்க்கையில் முழுமையான பரிபூரணத்தை பெற ஒருவர் மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும். எனவே ஒரு மனிதன் சனாதன கோஸ்வாமியைப் போல தீவிரமாக இருக்க வேண்டும். அந்த நோக்கத்திற்காக அவர் எல்லாவற்றையும் தியாகம் செய்தார், அவர் ஒரு பிச்சைக்காரரானார். எனவே இந்த மனித வாழ்க்கை வடிவத்தின் முழுமைக்காக எதையும் தியாகம் செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும். பின்னர் முழுமை உறுதி செய்யப்படுகிறது. நாம் மிகவும் தீவிரமாக மட்டும் இருத்தல் வேண்டும், அவ்வளவுதான்.