TA/Prabhupada 0916 - கிருஷ்ணருக்கு உங்களுடைய நல்ல ஆடைகளோ அல்லது நல்ல மலர்களோ அல்லது நல்ல உணவுகளோ தேவை இல்ல

Revision as of 12:00, 6 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 0916 - in all Languages Category:TA...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


730415 - Lecture SB 01.08.23 - Los Angeles

பிரபுபாதர்: எனவே இந்த ஜட உலகத்தில், பகவானுடைய தோற்றமும் மறைவும், சிகீர்ஷிதம் என்று அழைக்கப்படுகிறது. சிகீர்ஷிதம் என்ற வார்த்தையின் பொருள் என்ன?

பக்தர்கள் : லீலைகள்.

பிரபுபாதர்: லீலைகள். கிருஷ்ணர் வருவது அவருடைய லீலை தான். அவர்.... அவர் வரும்போது, அவர் ஏதாவது செய்வது உண்மைதான். அவருடைய செயல், சாதுக்களுக்கு பாதுகாப்பதும், அசாதுக்களை கொல்வதும் ஆகும். ஆனால் இரண்டு செயல்களுமே அவருடைய லீலைகள் தான். அவர் பொறாமைப்படுபவர் அல்ல. அவர் பொறாமைப்படுபவராக இருக்க முடியாது. அசுரர்களை கொல்வது கூட, அவருடைய அன்பினால் தான்.. அதாவது சில சமயம் நாம் நம்முடைய குழந்தைகளை தண்டிப்பதை போல, நாம் அவனை பலமாக அடிப்பதைப் போல. அதனால் அன்பில்லாமல் இருப்பதில்லை. அங்கு அன்பு உள்ளது. எனவே கிருஷ்ணர் ஒரு அசுரனை கொல்லும்போது, அந்த செயல், பௌதிக பொறாமையின் தளத்தில் இருப்பதில்லை. இல்லை.

எனவேதான், பகவானால் கொல்லப்பட்ட அசுரர்கள் கூட உடனடியாக முக்தி அடைந்ததாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. விளைவு ஒன்றுதான். உதாரணம் பூதனா. பூதனா கொல்லப்பட்டாள். பூதபூதனா கிருஷ்ணரைக் கொல்ல நினைத்தாள், ஆனால் யாரால் கிருஷ்ணரைக் கொல்ல முடியும்? அது சாத்தியமல்ல. அவள் கொல்லப்பட்டாள். அவள் கொல்லப்பட்டாள். ஆனால் விளைவு என்ன? விளைவு என்னவென்றால் அவள் கிருஷ்ணருடைய தாயின் நிலையை பெற்றாள். கிருஷ்ணர் அவளை தன் தாயாக ஏற்றுக் கொண்டார். அவள் விஷம் தடவிய மார்புகளுடன் வந்து, "கிருஷ்ணர் என்னுடைய முலையை உறிஞ்சுவான். உடனே அந்தக் குழந்தை இறந்து விடும்" என்று எண்ணினாள். ஆனால் அது சாத்தியமல்ல. அவள் கொல்லப்பட்டாள். கிருஷ்ணர் அவளுடைய முலைப்பாலுடன் உயிரையும் சேர்த்து உறிஞ்சி விட்டார். ஆனால் கிருஷ்ணர் நல்லதை எடுத்துக் கொண்டார், அதாவது "இந்தப் பெண், அரக்கி என்னைக் கொல்ல வந்தாள், ஆனால் எப்படியோ நான் அவளுடைய முலைப்பாலை அருந்தினேன். எனவே அவள் எனக்கு அன்னை. அவள் என்னுடைய அன்னை." எனவே அவள் தாயின் நிலையை பெற்றாள்.

இவையெல்லாம் பாகவதத்தில் விளக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் மிகக் கருணையானவர் என்று உத்தவர், விதுரருக்கு விளக்கினார். கடவுள் மிகக் கருணை வாய்ந்தவர், அவருக்கு விஷம் வைத்து கொல்ல நினைத்தவரைக் கூட, தன்னுடைய தாயாக ஏற்றுக்கொண்டார். இத்தகைய கருணையான கடவுள் கிருஷ்ணர். அதாவது "கிருஷ்ணரை விடுத்து நான் வேறு யாரை வழிபட முடியும்?" இந்த உதாரணம் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் கிருஷ்ணருக்கு எந்த எதிரியும் இல்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது : ந யஸ்ய கஷ்2சித்3 த3யித:. தயித: என்றால் பட்சபாதம். யாரிடமும் பட்சபாதம் காட்டப்படுவதில்லை. ந யஸ்ய கஷ்சித் தயிதோ 'ஸ்தி கர்ஹிசித் த்வேஷ்யஷ் ச. மேலும் யாரும் அவருடைய எதிரி இல்லை. ஆனால், யார் அவருடைய எதிரியாக முடியும்? யார் அவருடைய நண்பராக முடியும்?

நாம் ஒரு நட்புறவை ஏற்படுத்திக் கொள்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் அந்த நண்பரிடம் இருந்து ஒரு லாபத்தையும் அல்லது பலனையும் எதிர்பார்ப்போம். மேலும் எதிரி என்றால் அவரிடம் சில கொடிய செயல்களை எதிர்பார்ப்போம். ஆனால் கிருஷ்ணர், எந்த அளவிற்கு பக்குவம் ஆனவர் என்றால் யாரும் அவருக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது, யாராலும் கிருஷ்ணருக்கு எதையும் அளிக்கவும் முடியாது. எனவே நண்பன் மற்றும் எதிரியின் அவசியம் என்ன இருக்கிறது? எந்த அவசியமுமில்லை. எனவேதான் இங்கு கூறப்பட்டிருக்கிறது :ந யஸ்ய கஷ்சித் தயிதோ 'ஸ்தி . அவருக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. அவர் பூரணமானவர். நான் ஒரு மிகுந்த ஏழையாக இருக்கலாம். நான் ஏதேனும் ஒரு நண்பருடைய உதவியையோ அல்லது வேறு யாருடைய உதவியையும் எதிர்பார்ப்பேன். ஆனால், நான் குறைபாடுகள் உள்ளவன் என்பதால் அவை என்னுடைய எதிர்பார்ப்புகள். நான் முழுமையானவன் அல்ல. நான் பலவிதங்களில் குறைபாடு உள்ளவன். நான் எப்போதுமே தேவைகள் உள்ளவன். எனவேதான் நான் ஏதாவது ஒரு நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறேன், மேலும் நான் எதிரியையும் வெறுக்கிறேன். எனவே கிருஷ்ணர், அவர் உன்னதமானவர் என்பதால்.... யாரும் அவருக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது, மேலும் அவருக்கு யாரும் எதையும் வழங்கவும் முடியாது. எனில், நாம் ஏன் அவருக்கு இத்தகைய வசதிகளை அளிக்கிறோம்? நாம் கிருஷ்ணருக்கு ஆடைகள் அணிவிக்கிறோம், கிருஷ்ணரை அலங்கரிக்கிறோம், கிருஷ்ணருக்கு நல்ல உணவுகளை அளிக்கிறோம்.

கருத்து என்னவென்றால்..... இந்த உண்மையை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். கிருஷ்ணருக்கு நீங்கள் அளிக்கும் நல்ல ஆடையோ அல்லது நல்ல மலரோ அல்லது நல்ல உணவோ, தேவை இல்லை. கிருஷ்ணருக்கு தேவையில்லை. ஆனால் நீங்கள் கிருஷ்ணருக்கு அளித்தால், பிறகு நீங்கள் பலனடைவீர்கள். அவரது கருணையினால் தான் கிருஷ்ணர் ஏற்றுக்கொள்கிறார். ஒரு உதாரணம் அளிக்கப்பட்டுள்ளது: நீங்கள் ஒரு உண்மையான நபரை அலங்கரித்தால், கண்ணாடியில் காணப்படும் அந்த நபரின் பிம்பமும் அலங்கரிக்கப்பட்ட தோற்றமளிக்கும். எனவே நாம் பிரதிபலிப்புகளே. மனிதன் இறைவனின் தோற்றத்தைக் கொண்டு படைக்கப்பட்டு உள்ளதாக பைபிளிலும் கூறப்பட்டுள்ளது. எனவே நம்முடைய, கிருஷ்ணர் உன்னதமானவர், நாம்.... அவருக்கு இரண்டு கரங்கள், இரண்டு கால்கள், ஒருதலை உண்டு. மனிதன் கடவுளை கொண்டு படைக்கப்பட்டுள்ளான் என்றால், நாம் கடவுளின் உருவத்தின் பிரதிபலிப்புகளே. இதனை நாம் உருவாக்கியதோ, நம்முடைய உருவத்தின்படி கற்பனை செய்து கொண்டதோ அல்ல. அதுதான் தவறு. மாயாவாத தத்துவம் இப்படித்தான் உள்ளது. இதனை மானுடவியல் என்று அழைக்கின்றனர். அவர்கள் கூறுகிறார்கள், "பூரண உண்மை.... அருவமானது, ஆனால் நமக்கு உருவம் உள்ளதால், நாம் பூரண உண்மையையும் ஒரு நபராக கற்பனை செய்து கொள்கிறோம்." அப்படியே அதன் எதிர்ப்பதம். இது உண்மை அல்ல. நம்முடைய இந்த தோற்றம் கடவுளின் பிரதிபலிப்புதான். எனவே இந்த பிரதிபலிப்பு.... உண்மையான நபருக்கு நன்மை கிடைத்தால், அவரின் பிரதிபலிப்பும் நன்மை பெறும். அதுதான் தத்துவம். அந்தப் பிரதிபலிப்பும் நன்மை பெறும்.